சித்த வைத்தியத்தில் பேதிக்கு மருந்து எடுக்கும் முறை...

சித்த வைத்தியத்தில் பேதிக்கு மருந்து எடுக்கும் முறை:

பேதியாவதற்கு மருந்துகளை எடுத்துக்கொண்டால் உடலில் உள்ள வாதம் சமநிலை அடையும். அதனால் உடலை அணுகுகின்ற எந்தவித நோய்களும் வராது, வந்த நோய்களும் நீங்கும்.

பேதிக்கு நான்கு மாதத்திற்கு ஒருமுறை மருந்து எடுத்து கொள்வது மிகுந்த நன்மையை தரும்.

பேதிக்கு மருந்து எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:

வாத நோய்கள் தீரும்

உடல் வலிகள் நீங்கும்

கழுத்து முதுகு வலிகள் நீங்கும்

நாள்பட்ட தலைநோய் போகும்.

நாள்பட்ட தோல் நோய்கள் தீரும்

குடல்புழுக்கள் நீங்கும்

குடல் சம்மந்தமான நோய்கள் திரும்

செரியாமை, வயிறு உப்புசம் நீங்கும்

நாள்பட்ட நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்வதற்கு முன் பேதிக்கு மருந்து எடுத்துக் கொண்டால். நோய் விரைவில் தீரும். மருந்துகளும் எளிதாகவும் விரைவாகவும் உடலில் சேரும்.

பேதிக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முறை:

பேதி மாத்திரை மருத்துவரின் மேற்பார்வையிலோ, ஆலோசனையின்பேரிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக பேதி மருத்திற்கு அனுபானமாக தெளிந்த இஞ்சிசாறு, சுக்கு கஷாயத்தை உபயோகபடுத்தலாம்.

காலை 6 மணிக்குள், பேதிக்கு மருந்தினை எடுத்துக்கொள்ள வேண்டும். மருந்து எடுத்துக் கொண்ட பிறகு அரை மணி நேரம் வரை எந்தவித ஆகாரங்களும் பானங்களும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

அதன்பின் நன்றாக காய்ந்தாறிய வெந்நீர் (சுடுதண்ணீர்) அதிகளவில் குடிக்க வேண்டும். முதல் தடவை சிலருக்கு வாந்தியாக செய்யலாம். பின் மலங்கழியும். இப்படி ஒவ்வொரு 1/2 மணி நேரத்திற்கு ஒருமுறை வெந்நீர் (சுடுதண்ணீர்) எடுத்துக் கொள்ளவேண்டும். வெந்நீர் குடிக்க குடிக்க பேதியாகும். குறைந்தது 5 முதல் 6 தடவை பேதியாகும். சிலருக்கு 10 தடவை பேதி ஆகலாம். குடிக்கும் வெந்நீர் போலவே பேதியானால் குடல்நன்றாக சுத்தமானது என்று எண்ணவேண்டும். அதன்பின் ஒரு கப் தயிர் எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சம் அளவுக்கு மீறிய உப்பை போட்டு கலக்கி குடிக்க வேண்டும். இப்படி செய்ய பேதியாவது நின்றுவிடும்.

பேதி மருந்து எடுத்துக் கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டியவை:

பேதிக்கு மருந்து எடுத்துக்கொண்டால், அன்று முழு ஓய்வு எடுத்தல் வேண்டும். எண்ணெய் குளியல் கூடாது. அசைவ உணவுகள் கூடாது. மது, புகை, புணர்ச்சி (ஆண், பெண் சேர்க்கை) நீக்குதல் வேண்டும். அன்றைய திளம், மோர் சாதம் மட்டும் சிறந்தது. பழவகைகள் நல்லது. காய்கறிகளை கொண்ட சூப் நல்லது.

பேதிக்கு மருந்து எடுத்துக்கொள்ள கூடாதவர்கள்:

கர்ப்பம் தரித்தவர்கள் (சூல் கொண்டவர்)

காய்ச்சல் உள்ளவர்கள். மூலநோய் உள்ளவர்கள்.

குறிப்பு:

மழை காலங்களில் பேதிக்கு மருந்து எடுக்கக் கூடாது.

மதியம், மாலை, இரவு நேரங்களில் கண்டிப்பாக பேதிக்கு மருந்து எடுத்தல் கூடாது.