வீக்கம் மற்றும் கட்டிகளை கரைக்கும் விராலி செடியின் நன்மைகள்!!

வீக்கம் மற்றும் கட்டிகளை கரைக்கும் விராலி செடியின் நன்மைகள்!!

விராலி இலைகளின் மருத்துவ பலன்கள்:

உடலில் சூடு காரணமாகவோ அல்லது இரத்தம் கெடுவதாலோ ஏற்படும் கட்டிகள், வீக்கம் போன்றவை குணமாக, விராலி இலைகளின் மீது சிறிது விளக்கெண்ணை தடவி, நெருப்பில் சற்றே வாட்டி, கட்டிகள் அல்லது வீக்கங்கள் மீது இரண்டு அடுக்கு அளவில் இலைகளை வைத்து மெலிதான பருத்தித் துணியால் சில தினங்கள் கட்டிவர, கட்டிகள் மறைந்துவிடும் அல்லது கட்டிகள் உடைந்து, விரைவில் ஆறிவிடும். வீக்கங்கள் எல்லாம் சில தினங்களில் கரைந்து விடும்.

உடலில் வலியுள்ள இடங்களில், கைகால் மூட்டுக்களில், தோள்களில், கால்களில், விராலி இலைகளை நல்லெண்ணையில் நன்கு காய்ச்சி, அந்த எண்ணையைக் கொண்டு அவ்விடங்களில் தடவிவர, உடல் வலிகள் படிப்படியாக குறைந்து விடும். மேலும், எலும்புகள் வலிமையடையும்.

சிறிது விராலி இலைகளை நன்கு பொடித்து, மூன்று டம்ளர் நீரில் இரவில் ஊறவைத்து, காலையில் அதில் சிறிதளவை பாலில் கலந்து வருகிவர, உடல் சூடு, இருமல், சளி மற்றும் சுவாசப் பிரச்சினைகள் யாவும் சரியாகிவிடும்.

விராலி இலைகளை வாயில் இட்டு சற்றுநேரம் மென்றுவர, பல் வலி, பல் கூச்சம் விலகிடும். பற்களின் ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவுகள் நின்றுவிடும்.

விராலி இலைகளை நீரில் இட்டு பருகிவர, பேதி எனும் வயிற்றுப்போக்கு குணமாகும்.

ஆறாத நெடுநாள் புண்கள் ஆற..

விராலி இலைகள், மஞ்சள், சீரகம் இவற்றை ஒன்று, அரை, கால் என்ற விகிதத்தில் எடுத்து, அதற்கு தகுந்தாற்போல நீரில் கொதிக்க வைத்து, பாதியளவுக்கும் அதிக அளவில் நீர் நன்கு சுண்டியதும், தினமும் இருவேளை கால் டம்ளர் அளவில் பருகிவர, உடலில் வெகுநாட்களாக ஆறாமல் மன வேதனை கொடுத்து வந்த, காயங்களை, புண்களை ஆற்றிவிடும். இந்த மருந்தே, உடலில் உள்ள கட்டிகளையும் கரைக்கும், மேலும், உடலில் இரத்தத்தில் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள சர்க்கரை பாதிப்பை சரிசெய்து, உடலில் சர்க்கரை அளவையும் சீராக்கும் தன்மை மிக்கது.

விராலி பட்டைகளின் மருத்துவ குணங்கள்:

நன்கு உலர்ந்த விராலிப் பட்டைகளை பொடியாக்கி, சிறிதளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட, சளியினால் உண்டான ஜுரம் முதல் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் உண்டாகும் மலேரியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற உடல் நலப் பாதிப்புகள் தரும் காய்ச்சல்கள் யாவும் அகலும். சுவாச பாதிப்புகளை சரிப்படுத்தும்.

விராலிப் பட்டைகள் சிறிது, பத்து மிளகுகள் இவற்றை நன்கு இடித்து, நீரில் கொதிக்க விட்டு, நன்கு கொதித்து மூன்றில் ஒரு பங்காக நீரின் அளவு குறைந்ததும், பின்னர் அந்த நீரைப் பருகிவர, சளியினால் உண்டான காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகளை சுத்தமாக நீக்கி விடும் ஆற்றல் மிக்கது.

விராலிப் பட்டைகளை, மையாக அரைத்து வீக்கங்கள் மீது பற்று போல இட்டு வர, வீக்கங்கள் மற்றும் கட்டிகள் யாவும் கரைந்து, பின்னர் அவை யாவும் உடலிலிருந்து, முழுமையாக மறைந்துவிடும்.