செம்பருத்தி பூ இதழ்களை மட்டும் இப்படி சாப்பிட்டு பாருங்க :

செம்பருத்தி பூ இதழ்களை மட்டும் இப்படி சாப்பிட்டு பாருங்க :

செம்பருத்திப் பூ அதிக அளவிலான மருத்துவ குணங்களை கொண்டுள்ள ஒரு அற்புதமான பூ. இந்த பூவானது சிவப்பு, மஞ்சள், வெள்ளை இப்படி பல நிறங்களில் இருந்தாலும் சிவப்பு நிற பூவானது மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பம் என்று அழைக்கிறார்கள் அந்த அளவுக்கு மிகவும் முக்கியமான ஒரு மருந்துப் பொருள் இது. இந்த செம்பருத்தி பூவானது ஆதிகாலத்திலிருந்தே பல்வேறு மருத்துவ குணங்களுக்காக மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எகிப்தியர்கள் உடல் வெப்பநிலையை குறைப்பதற்கும் இதயம் மற்றும் நரம்பு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், சிறுநீர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இந்த செம்பருத்திப்பூவை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஈரானில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக இந்த செம்பருத்திப் பூ பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிரிக்காவில் மலச்சிக்கல், புற்றுநோய், கல்லீரல் நோய் இப்படிப்பட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த செம்பருத்திப்பூ பயன்படுத்தப்பட்டுள்ளது. செம்பருத்திப்பூ நம்முடைய இதயத்திற்கு மிக அருமையான ஒரு மருந்து.

உயர் இரத்த அழுத்தம் தொடர்ந்து நீண்ட நாட்கள் இருக்கும் பொழுது அது இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி இதயத்தை பலவீனமடையச் செய்யும். உயர் இரத்த அழுத்தம் இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. ஆனால் இந்த செம்பருத்திப்பூவை நாம் பயன்படுத்தும் பொழுது அது இதயத்திற்கு அது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கக் கூடியது செம்பருத்திப்பூ. இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிக அளவிலான கொழுப்பானது இதய நோயை ஏற்படுத்தும் முக்கியமான ஒரு பிரச்சனை. புரதங்களை உற்பத்தி செய்வதிலிருந்து கொழுப்பை உடைத்து குறைப்பது போன்ற மிகப்பெரிய வேலையை கல்லீரல் செய்து வருகிறது. கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் 6 செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு அந்த இதழ்கள் மூழ்கக்கூடிய அளவிற்கு தண்ணீரை விட்டு அதை நன்றாக சுண்டக்காய்ச்சுங்கள். அந்த சாற்றில் தினமும் 6 டீஸ்பூன் அளவு எடுத்து காலையிலும், மாலையிலும் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இப்படி 24 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறைவதோடு உடல் ஆரோக்கியமும் பெருகும்.

இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் 2 செம்பருத்திப் பூவின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் இதய நோய் குணமாகும். அதுபோல இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு வரக்கூடிய இதய படபடப்பு, இதய வலி, இதயத்தில் ஏற்படக்கூடிய அடைப்பு இப்படி எல்லா பிரச்சினைகளையும் செம்பருத்திப்பூ சரி செய்கிறது.