தீராத சர்க்கரை நோயை தீர்த்து வைக்கும் ஆவாரை மூலிகை

தீராத சர்க்கரை நோயை தீர்த்து வைக்கும் ஆவாரை மூலிகை

    ஆவாரம் பூக்களை பச்சையாக 20 எண்ணிக்கையில் பறித்து இதை மைபோல அரைத்து கால் லிட்டர் புளித்த மோரில் கலக்கி இதை காலை வேளையில் தொடர்ந்து இரண்டு மாதம் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்

ஆவாரம் பூக்களை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பொன்னிறமாக மாறும் 
உடல் எரிச்சல் குணமாகும் 
உடலில் உண்டாகும் வியர்வை நாற்றம் கற்றாழை நாற்றம் விலகும்

நாவறட்சி அதிக தாகம் மிகுபசி குணமாகும். ஆண் பெண் மர்ம உறுப்புகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புறவெளி புண்கள் நீங்கும்

  ஆவாரம் பூக்களை பாலில் போட்டுக் குடித்து வர உட்சூடு நீங்கும் எலும்பை பற்றிய அஸ்தி சுரம் மற்றும் அஸ்தி வெட்டை குணமாகும்

  ஆவாரம் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வர நிணநீர் இரத்தம் சதை கொழுப்பு எலும்பு மச்சை சுக்கிலம் என்கின்ற சப்த தாதுக்களில் பலவீனத்தை நீங்கி அனைத்து தாதுகளுக்கும் அதீத பலத்தை தரும்

 ஆவாரை பூத்திருக்க சாவாரும் உண்டோ என்கின்ற பழமொழியை இதற்கு சாட்சியாகும்

   ஆவாரம் பூக்களுடன் சமமாக பாசிப்பயிறு சேர்த்தரைத்து உடல் முழுவதும் பூசி குளித்துவர உடல் நமைச்சல் நீங்கும் உடல் நாற்றம் நீங்கி உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்

சர்க்கரை நோய் தீர உடல் பலம்பெற 
ஆவாரை பஞ்சாங்க சூரணம்

ஆவாரை வேர்ப்பட்டை 
ஆவாரையின் இலை 
ஆவாரம் பூ 
ஆவாரை விதை 
ஆவாரை தண்டு பட்டை

   இவை அனைத்தையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து இதை சம அளவாகக் கலந்து கொண்டால் இதுவே ஆவாரை பஞ்சாங்க சூரணமாகும்

சர்க்கரை நோயை தீர்ப்பதில் இந்த ஆவாரை பஞ்சாங்க சூரணமே முதல் நிலை மருந்தாக கருதப்படுகின்றது

  இந்த ஆவாரை பஞ்சாங்கம் சூரணத்துடன் சம அளவு சீந்தில் தண்டு சூரணத்தை கலந்து இதில் மூன்று கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டுவர  ஆரம்பநிலை சர்க்கரை நோய் முழுமையாக தீர்ந்துவிடும்

முற்றின சர்க்கரை நோயானது படிப்படியாக குறைந்து இரண்டு மாத காலத்திற்குள் சமநிலைக்கு வந்துவிடும்

  சர்க்கரை நோயால் ஏற்படும் மிகு தாகம் உடல் வறட்சி உடல் மெலிவு சத்து பற்றாக்குறை அனைத்தும் நீங்கும் மேலும் உடலுக்கு ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டாகும்

 சர்க்கரை நோயை தீர்க்கும் மதுமேகச் சூரணம்

ஆவாரம்பூ 200 கிராம் 
கடுக்காய் 200 கிராம் 
நெல்லிக்காய் 200 கிராம் 
நாவல்கொட்டை 100 கிராம் 
கீழாநெல்லி 100 கிராம் 
கறிவேப்பிலை 100 கிராம் 
 கோரைக்கிழங்கு 100 கிராம்
சீந்தில் தண்டு பொடி 100 கிராம்

   இவை அனைத்தையும் அளவுகளின் படி பொடி செய்து ஒன்றாக கலந்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் காலை மாலை இருவேளையும் பருகிவர எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாத சர்க்கரை நோயானது இந்த மருத்துவ முறைக்கு கட்டுப்படும்

ஆவாரம்பூ தேநீர்

தேவையான பொருட்கள்

உலர்ந்த ஆவாரம் பூ 250 கிராம்
கொத்தமல்லி 500 கிராம்
சுக்கு 150 கிராம்
ஏலக்காய் 30 கிராம்
சிற்றரத்தை 10 கிராம்
பேறாரத்தை 10 கிராம்
மிளகு 10 கிராம்

செய்முறை

      இதில் கொத்தமல்லியை மட்டும் லேசாக வறுத்துக் கொண்டு மற்ற அனைத்து பொருட்களையும் வறுக்காமல் மேற்கண்ட அளவுகளின்படி சேகரித்து கொண்டு

       இப்படி சேகரித்த அனைத்தையும் சூரணமாக செய்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்

       இந்த சூரணத்தில் ஐந்து கிராம் அளவு எடுத்து தண்ணீரிலிட்டு காய்ச்சி சுவைக்காக கருப்பட்டி என்கின்ற பனை வெல்லம் சிறிது சேர்த்து பருகி வந்தால் உடலில் நல்லதொரு புத்துணர்ச்சி உண்டாகும்

 உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் இதனால் உடலில் நோய் எதிர்ப்பு  சக்தி  உண்டாகும்

         சர்க்கரை நோயாளிகள் ஆவாரம்பூ தேநீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதனால் சர்க்கரையின் அளவும் சற்று குறைந்துவிடும் இது உறுதி.