நீரிழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்டிரால் மூன்றையும் ஒரேசமயத்தில் கட்டுப்படுத்த வேண்டுமா?
நீரிழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்டிரால் மூன்றையும் ஒரேசமயத்தில் கட்டுப்படுத்த வேண்டுமா?
பூண்டு ஒரு மூலிகை தாவரமாகும். இது நமது உடலுக்குப் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. பழங்காலம் முதலே இந்தியாவில் பல நோய்களை சரி செய்வதற்கு பூண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதிலும் பூண்டு தேநீர் உடலில் பல்வோறு நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக இது நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இதய நோய்கள் மற்றும் நீரிழிவால் பாதிக்கப்படுபவர்களுக்கு பூண்டு தேநீர் சிறந்த பானமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது இவை எப்படி தயாரிக்கலாம்? என்ன மாதிரியான நன்மைகளை பெறலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
பூண்டு தேநீரை எப்படி தயாரிப்பது?
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும், பின்பு அதில் நறுக்கிய இஞ்சி, 1 டீஸ்பூன் அரைத்த பூண்டு மற்றும் கருப்பு மிளகை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக வைக்கவும்.
பிறகு வடிக்கட்டி அதை அருந்தலாம். மேலும், இதில் சிறிது இலவங்கப்பட்டை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்ப்பதன் மூலம் இதன் சுவையை நம்மால் அதிகரிக்க முடியும்.
நன்மைகள் :
* நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆபத்து காரணியாக ஹோமோசிஸ்டீன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இந்த அமிலத்தைக் குறைக்க பூண்டு தேநீர் உதவுகிறது.
* இந்த தேநீர் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. பூண்டு தேநீர் ஆண்டிபயாடிக் ஆக செயல்படுகிறது.
* நீரிழிவு நோயால் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது.
* இந்த தேநீரில் வைட்டமின் சி உள்ளது, இது உடல் உறுப்புகள் ஆரோக்கியத்திற்கும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது