வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு

அகத்திக்கீரை வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆற அருமருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையான பொருட்கள் :

அகத்திக்கீரை – ஒரு கப்
தேங்காய்த் துருவல் – தேவைக்கு
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
காய்ந்த மிளகாய் – ஒன்று
தக்காளி – ஒன்று
அரிசி களைந்த நீர் – ஒரு கப்
சம்பார் பொடி – தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* அகத்திக்கீரையை நீரில் அலசி நீரை, வடியவிட்டு கீரையை உருவி மீடியம் சைஸில் நறுக்கி வைக்கவும்.

* வெங்காயத்தை வட்டமாகவும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.

* பாசிப்பருப்பை வேகவைத்து கொள்ளவும்.

* தேங்காய்த் துருவலில் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து பால் எடுக்கவும்.

* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்த பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து, வதங்கும்போது கீரையையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

* இத்துடன் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.

* அடுத்து அதில் அரிசி களைந்த நீர் சேர்த்துக் கீரையை வேகவிடவும்.

* கீரை வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப்பால் விட்டு கிளறி இறக்கவும்.

* அகத்திக்கீரைக் குழம்பு ரெடி.