வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்?
வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதை தடுக்க என்ன செய்யலாம்?
வாயு வெளியேறுவது என்பது மனிதனுக்கு இயற்கையானது தான். ஆனால் அது துர் நாற்றத்தை வெளிப்படும்பொழுதுதான் பிரச்சினையே துவங்குகிறது.
சாதாரணமாக ஜீரண மண்டலத்தில் ஏதும் பிரச்னை இல்லாதவரைக்கும் வாயு வெளியேறினால் கூட நாற்றம் ஏதும் இல்லாமல் இருக்கும்.
அப்படி இருந்தால் உடலின் ஜீரண மண்டலம் சீரான இயக்கத்தில் உள்ளது என்று பொருள். அதுவே பிறர் முகம் சுளிக்கும்படி துர்நாற்றம் வீசும்படி இருந்தால், ஜீரண மண்டலத்தில், வாயு தங்கி பிரச்சினை ஏற்படுத்துகிறது என்று பொருள்.
வாயு மற்றும் அதன் துர்நாற்றத்தை தடுக்க
* வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது.
* மசாலா பொருட்களான சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன் இதனை வெறும் வாயில் மென்றால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.
* புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும் போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெய் வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசாது.
* ஆப்பிளைப் போன்ற சத்துக்களுடன் இருக்கும் பேரிக்காயும் வாய்வுத் தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது. ஜீரண சக்தியையும் தூண்டும். தினமும் 1 பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது.
* தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிறது.