ஒற்றைத் தலைவலி குணமாக சித்த வைத்தியம்

ஒற்றைத் தலைவலி குணமாக சித்த வைத்தியம்

  பெருஞ்சீரகம் எனும் சோம்பு இதனோடு அதிமதுரம் சம அளவாக சேர்த்து பொடி செய்து இதில் மூன்று கிராம் பொடியை தேனில் குழைத்து தினமும் இருவேளை இருபது  நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர தீராத ஒற்றை தலைவலி நோய் ஒரு மாத காலத்தில் நிரந்தரமாக குணமாகும்

திரி புகை

  விரலி மஞ்சள் மிளகு இவைகளை சம அளவாக பொடி செய்து அந்த பொடியை எருக்கம் பால் விட்டு அரைத்து ஒரு மெல்லிய துணியில் இதை தடவி திரியாக சுருட்டி காயவைத்து தலை வலிக்கின்ற பொழுது இந்த திரியை  எரியவிட்டு இதில் வரும் புகையை மூக்கின் வழியாக இழுத்து வாய் வழியாக வெளியே விட்டுவர ஒரு பக்கமாக வலிக்கின்ற ஒற்றை தலைவலி உடனே குணமாகும்

  கவிழ்தும்பை வேர் மஞ்சள் இவை இரண்டையும் பொடியாக செய்து ஒரு துணியில் வைத்து திரியாக சுருட்டி எரிய வைத்து இதில் வரும் புகையை முகர்ந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்

ஒற்றை தலைவலி தீர குப்பைமேனி தைலம்

  குப்பைமேனி சாறு நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக கலந்து இதை தைலப் பதமாகக் காய்ச்சி வைத்து கொண்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் தலைக்குத் தேய்த்து வெந்நீர் வைத்து குளித்து வந்தால் தீராத ஒற்றை தலைவலி தீரும்

ஒற்றை தலைவலி நீங்க எட்டி இலை தைலம்

  இளம் தளிரான எட்டி இலையை இரண்டு கைப்பிடி எடுத்து இதை நூறு மில்லி நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி இதில் பத்து கிராம் மிளகும் பத்து கிராம் பூண்டையும் ஒன்றிரண்டாக தட்டி கொதிக்கின்ற எண்ணையில் போட்டு சிவக்கும் படி காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்

  இதை தலைக்குத் தடவும் எண்ணெய்க்கு பதிலாக இந்த எண்ணெயை தினந்தோறும் அதிகாலை வேளையில் தடவி வந்தால் பத்து அல்லது பதினைந்து நாட்களில் இந் தஒற்றை தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பூரணமாக குணமாகிவிடும்

இந்த எண்ணெயை தலைக்கு தடவி வரும் நாட்களில் வெயிலில் உலவ கூடாது சிற்றின்ப சேர்க்கை ஆகாது

ஒற்றைத் தலைவலிக்கு மூலிகை நசியம்

   பூண்டு ஒரு பல்லும் இதே அளவிற்கு முருங்கை இலையையும் சேர்த்து ஒன்றாக அரைத்து இதில் சாறுபிழிந்து வலது பக்கம் தலை வலித்தால் இடது பக்க மூக்கு துவாரத்தில் இந்த சாற்றை இரண்டு துளிகள் விடவேண்டும்

   இடது பக்கம் தலை வலித்தால் வலது பக்க மூக்கு துவாரத்தில் இந்தச் சாற்றை இரண்டு துளிகள் விட வேண்டும்

  தலைவலி வலிக்கின்ற பொழுது இந்த வைத்தியத்தை கையாண்டால் வெகுவிரைவில் ஒற்றை தலைவலி குணமாகிவிடும்

ஒற்றைத் தலைவலி தீர ஒரு எளிய வைத்தியம்

எலுமிச்சை சாறு இஞ்சி சாறு இவை இரண்டையும் வகைக்கு 10 மில்லி அளவு எடுத்து 200 மில்லி சுடு நீரில் கலந்து குடித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும்.