கருப்பு உளுந்தின் மருத்துவ பயன்கள்

கருப்பு உளுந்தின் மருத்துவ பயன்கள்

காலையில் உணவாக நீராகாரமும் களியும் மட்டுமே இருந்து வந்த நிலை மாறி,  இப்போதெல்லாம் பெரும்பாலும் இட்லி தோசை என்பது பொது உணவாகி விட்டது. 90களின் ஆரம்பத்தில் பலகாரம் என்பதில் அடங்கிப்போன இட்லியும் தோசையும் இன்று அன்றாடம் உண்ணும் பட்டியலில் இடம் பெறுகிறது....

       குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இட்லி உண்ணக்  காரணம் எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதாகும்.இட்லி செய்ய முன்பெல்லாம் கருப்பு உளுந்து (தோல் நீக்கப்படாதது ) பயன்படுத்தப்பட்டு வந்தது. நாகரீக மோகத்தால் நாம் மாறி,  மறந்துபோன கருப்பு உளுந்தில் அதிக சத்துக்கள் நிறைந்து உள்ளது.....

    இரும்புச்சத்து அதிகமுள்ள கருப்பு உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இரத்தசோகை நோய் ஏற்படாது.

 கருப்பு உளுந்தில், கால்சியம்,  பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளதால் உடலில் உள்ள எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலிமை  அதிகரிக்கும். 

நார்ச்சத்து அதிகம் உள்ள கருப்பு உளுந்து உடலில் சர்க்கரை அளவு மிதமாக இருக்க உதவுவதால்,  நீரிழிவு நோய் ஏற்படாது.

மேலும் நினைவாற்றல் குறைவு,  நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற வற்றை நீக்கும் தன்மை கொண்டது.

 கருப்பு உளுந்தில் செய்யப்படும் உணவை பெரியவர்களும் குழந்தைகளும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் வாரம் ஒருமுறையாவது கருப்பு உளுந்தில் செய்த உணவை சேர்த்துக் கொள்ளுதல் நலம்...

 நாகரீகத்தின் பொருட்டு நோயோடு வாழ்ந்து, அழிந்து போகாமல் பாரம்பரியத்தை கையில் எடுப்போம்.

உணவே மருந்து..