உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை அகற்ற எலுமிச்சைபுல் தேநீர் அருந்துங்க !
உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை அகற்ற எலுமிச்சைபுல் தேநீர் அருந்துங்க !
எலுமிச்சை புல் என்பது இலங்கை மற்றும் தென்னிந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு மூலிகையாகும், ஆனால் இப்போது உலகெங்கிலும் பல நாடுகளில் வளர்கிறது. இந்த எலுமிச்சை புல் நீளமான இலைகளைக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் 55 வகையான எலுமிச்சை புல் வகைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டாலும், கிழக்கு இந்திய மற்றும் மேற்கு இந்திய வகைகள் மட்டுமே சமையலில் பயன்படுத்த ஏற்றவை. ஆசிய நாடுகள் மற்றும் தாய்லாந்தில் இந்த எலுமிச்சை புல் டீ தயாரிக்க அதிகமாக பயன்படுத்தப் படுகிறது.
இந்த டீயை குடிப்பதால் அங்கு வாழும் மக்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை மற்றும் தொப்பை குறைப்பு போன்ற பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த எலுமிச்சை புல் டீ எப்படி தயாரிப்பது என்றும் இது குடிப்பதினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்கலாம்.
மலச்சிக்கல் :
தினமும் காலையில் பலரும் அவதிப்படும் பிரச்சினையில் ஒன்று மலச்சிக்கல். இந்த பிரச்சினையை எளிய முறையில் போக்க உதவும் ஒரு பொருளாக எலுமிச்சை புல் உள்ளது. இந்த புல்லில் இருக்கும் சிட்ரஸ் அமிலம் செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.
ஆயுர்வேத மூலிகை :
எலுமிச்சை புல் டீ உடல் முழுக்க உள்ள கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. இது ஆயுர்வேத மருந்தாக கருதப்படுகிறது. இந்த புல்லின் மருத்துவ தன்மை அதிக ஆற்றல் வாய்ந்தது.
நோயெதிர்ப்பு சக்தி :
எலுமிச்சை புல் அதிக மருத்துவ குணம் கொண்டது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிக அளவில் உள்ளதால் இந்த புல்லை கொண்டு டீ தயாரித்து குடித்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் :
எலுமிச்சை புல்லில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், இரத்தத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது. எனவே உங்களுக்கு இதய நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
எடை குறைய :
உடல் எடையை கட்டுப்படுத்த பலரும் முயற்சி செய்து வருகின்றனர். இதற்க்கு கலோரி குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமானது. இந்த எலுமிச்சை புல்லில் கலோரிகள் மிக குறைவாக இருப்பதால் உடல் எடையை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கும் :
எலுமிச்சை டீயை 30 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக 2015 ஆம் ஆண்டின் ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
பதட்டம் :
பலர் சூடான காபி வகைகளை அருந்துவதன் உடலில் ஏற்படும் பதட்டத்தை குறைகின்றனர். ஆனால் எலுமிச்சை தேநீர் பதட்டம் ஏற்படும் தன்மையையே குறைப்பதாக கூறப்படுகிறது. மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தின் கூற்றுப்படி, எலுமிச்சை வாசனையை முகர்வதன் மூலம் உடலில் ஏற்படும் பதட்டம் குறைவதாக கூறப்படுகிறது. சிலர் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் போக்க எலுமிச்சை எண்ணெயை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
நச்சுக்களை வெளியேற்ற :
நமது உடலில் காணப்படும் தேவையற்ற அழுக்குகள் தான் நோயை ஏற்படுத்துகிறது. இந்த அழுக்குகளை வெளியேற்றிவிட்டால் நோய் ஏற்படுவதை தடுத்து விடலாம். இதற்கு அடிக்கடி எலுமிச்சை புல் டீ குடித்து வந்தால் நச்சுகள் வெளியேறி சுறுசுறுப்பாக மாறலாம். அத்துடன் சிறுநீரக பாதையையும் சுத்தமாக வைத்து கொள்ளும்.
முடி :
பலரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சினையில் ஒன்றாக முடி கொட்டும் பிரச்சினை உள்ளது. இதற்கு அடிக்கடி எலுமிச்சை டீ குடித்து வந்தாலே போதும். உங்களின் முடி உதிரும் பிரச்சினை குறைந்து விடும். அதுமட்டுமல்லாமல் முடி வளர்வதற்க்கு தேவையான வைட்டமின் எ மற்றும் வைட்டமின் பி சத்தும் கிடைக்கிறது.
வயிற்றுவலி :
பெண்களுக்கு ஏற்படக்கூடிய பயங்கரமான வலியான மாதவிடாய் வலியை எளிதாக குணப்படுத்த கூடிய தன்மை எலுமிச்சை புல்லுக்கு உள்ளது. இது உடலுக்கு அதிக வலிமையையும் தரக்கூடியது. மேலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் இது சீராக வைத்து கொள்ளுமாம்.
தொற்றுநோயைத் தடுக்கும் :
எலுமிச்சைப் புல்லில் சில நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் திறன்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக எச்.ஐ.வி போன்ற போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பரவும் நோய் தொற்றுக்களை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது .
எப்படி தயாரிப்பது..?
முதலில் எலுமிச்சை புல்லை நன்கு கழுவி பின்பு இதனை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்பு நீரை கொதிக்க விட்டு அதில் இந்த புல்லை சேர்த்து பதினைந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளுங்கள். ஆறிய பின்பு இதனை வடிகட்டி குடித்து வந்தால் நல்ல பலனை அடையலாம்.