தமிழ் மூலிகை ஆடாதோடை : -
தமிழ் மூலிகை ஆடாதோடை : -
திராட்சை பழ சாறு , ஆடாதொடை இலைகள் சாறு, சம அளவில் எடுத்து கடுக்காய் பொடி ஒரு ஸ்பூன் அளவு கலந்து கொதிக்க வைத்து செய்த கஷாயத்துடன் இஞ்சி, கருமிளகு மற்றும் *தேன் கலந்து* குடிக்க சுவாச மண்டல உறுப்புகள் நலம் பெறும். இருமல் போகும்.
தொண்டைக்கு இதமளிக்கும். கெட்டியான சளி, கோழை, இவற்றை அகற்றும்.
வேர்க்கசாயம் கடைசி மாதத்தில் காலை மாலை சாப்பிட்டுவர சுகப்பிரசவம் ஆகும்.
ஆடாதொடையில் இருந்து கிடைக்கும் இது காரத் தன்மையுடைய வாசிசைன் மெதர்ஜின் போன்ற மருந்துகளுக்கு இணையானது.
பழங்காலத்தில் செவிலியர்கள் சுலபமாக பிரசவம் ஏற்பட பயன்படுத்தினர்
இலைகளோடு, வேர் எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு இரு வேளை ஒரு வாரம் குடித்து வர மூச்சிரைப்பு நோய் குறையும்.
இலைக்கசாயம் 25 மிலியுடன் சிறிது திப்பிலி சூரணம், *தேன்* கலந்து தினம் 2 வேளை கொடுத்து வர இரத்தம் சுத்தியாகும். கபம் குறையும். கஷ்டசுவாசம் தீரும்.
இலையின் ஈர்க்கு, நிலவேம்பு, சீந்தில் கொடி, பேய்ப்புடல், வெப்பாலை அரிசி வகைக்கு 20கிராம் இடித்து இரண்டில் ஒன்றாய்க் காய்ச்சி வேளைக்கு 25 மிலி தினம் 2-3 வேளை கொடுக்க விஷம், குளிர்சுரம் குணமாகும்.
ஈர்க்கு, திப்பிலி, சுக்கு, சித்தரத்தை, ஓமம், கண்டங்கத்திரி வகைக்கு 10கிராம் முன் போல் தேன் சேர்த்து கொடுக்க கபசுரம் நீங்கும்.