நுரையீரலை பாதுகாக்க, சரி செய்ய

வெற்றிலையோடு இஞ்சிச்சாறு சேர்த்து கலந்து குடித்தால் கிடைக்கும் அற்புத நன்மை :

நம்முடைய முன்னோர்களின் மருத்துவமுறையில் வெற்றிலையும் இஞ்சியும் மிக முக்கியமான மருந்துப் பொருளாக இருந்து வந்துள்ளது. பல்வேறு நோய்களை இந்த வெற்றிலையும் இஞ்சியும் மிக வேகமாக போக்கக்கூடியது. எளிமையாக கிடைக்கக்கூடிய இயற்கையான இந்த பொருட்களானது உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடிய பொருள்கள். இந்த வெற்றிலை மற்றும் இஞ்சி சாறு நம்முடைய நுரையீரலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நம்முடைய உடல் செய்யக் கூடிய மிக முக்கியமான விஷயம் சுவாசம். சுவாசிப்பதற்கு நுரையீரல் இல்லாமல் நாம் வாழ முடியாது. கேட்பதற்கு மிக எளிமையாக தெரியும் ஆனால் நம்முடைய நுரையீரல் இயங்குவதும் முழு சுவாச அமைப்பு மிகவும் சிக்கலான ஒரு விஷயம். நாம் சுவாசிக்கும் காற்றை உள்வாங்கி நம்முடைய உடலுக்கு உயிர் சக்தியை தரக்கூடிய முக்கிய செயலை செய்யக்கூடியது நுரையீரல்.

நம்முடைய உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை உடலில் எடுத்துக் கொள்வதற்கும் கார்பன்-டை-ஆக்ஸைடை உடலிலிருந்து வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக இந்த நுரையீரல் செயல்படுகிறது. நம்முடைய நுரையீரலானது ஒரே அளவாக இருக்காது. இதயத்திற்கு இடம் அளிப்பதற்காக வலது நுரையீரல் இடது நுரையீரலை விட பெரியதாக இருக்கும்.

நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் ஒரு சிறிய பங்கை மட்டுமே உடல் எடுத்துக் கொள்கின்றது. நாம் சுவாசிக்கும் காற்றில் 21 சதவீதம் ஆக்ஸிஜன் உள்ளது. ஆனால் நம் உடல் ஐந்து சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. மீதமுள்ளதை வெளியேற்றுகிறது. நம்முடைய உடலில் உள்ள 70 சதவீத கழிவுகள் உங்களுடைய நுரையீரல் வழியாக சுவாசிப்பதன் மூலம் அகற்றப்படுகிறது.

ஆண்களைவிட குழந்தைகளும், பெண்களும் மிக வேகமாக சுவாசிக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களின் சுவாச விகிதம் ஆண்களை விட அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் 22,000 முறை மூச்சு விடுகிறார்கள். கிட்டத்தட்ட 9 ஆயிரம் கனஅடி காற்றை உள்ளிழுத்து வெளி விடுகிறார்கள். இப்படி நாம் உள்ளிழுக்கும் காற்றில் இருக்கக்கூடிய ஆக்சிஜனை பிரித்தெடுத்து உடலுக்கு கொடுக்கும் மிக முக்கிய வேலையை செய்கிறது இந்த நுரையீரல்.

காற்றில் இருக்கக்கூடிய ஆக்சிஜனை இரத்தத்தில் சேர்ப்பதும் இரத்தத்தில் இருக்கக்கூடிய கார்பன்-டை-ஆக்சைடை பிரித்து உடலில் இருந்து வெளியேற்றுவது நுரையீரலின் முக்கியப் பணி. இதயத்திற்கு இரு புறமும் பாதுகாப்பாக இருந்து இதயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பாற்றுகிறது நுரையீரல். மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர், மூச்சை மிகவும் இழுத்து விடும் பொழுது காற்றின் கொள்ளளவு 5 லிட்டர், எப்பொழுதும் நுரையீரலுக்கு உள்ளேயே இருந்து கொண்டிருக்கும் காற்றின் அளவு ஒரு லிட்டர்.

உலகில் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். மிக முக்கியமாக காற்றில் இருக்கக்கூடிய அதிக மாசுபாடு காரணமாகவும் அதிக அளவிலான புகைப்பிடித்தல் காரணமாகவும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. இருமல், மூச்சு வாங்குதல், மூச்சு இழுப்பு, நெஞ்சுவலி, இருமும் போது இரத்தம் வெளியேறுதல், மூச்சுக்குழல் அலர்ஜி, நுரையீரல் அலர்ஜி, மூச்சுக் குழாய்கள் சுருங்கி போகுதல் இவையெல்லாம் நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்.

நுரையீரலை பாதுகாக்க தூசு அதிகம் நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் பொழுது மூக்கில் துணியை கட்டிக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மற்றும் நுரையீரல் சம்பந்தமான உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. புகை பிடிப்பவர்கள் அதை உடனடியாக நிறுத்தவேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

கூடவே இந்த வெற்றிலை மற்றும் இஞ்சி சாறு நம்முடைய நுரையீரலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலை மற்றும் இஞ்சி ஆகியவற்றின் சாறு எப்பேர்ப்பட்ட நுரையீரல் நோய்களுக்கும் உடனடி நிவாரணமாக அமையக்கூடியது. நாள்பட்ட நுரையீரல் நோய்களை மிக வேகமாக குணமாக்கக்கூடியது இந்த இரு பொருள்களும். 5 மில்லி வெற்றிலைச்சாறும் 5 மில்லி இஞ்சிச்சாறும் சேர்த்து கலந்து தினமும் காலையில் நீங்கள் குடித்து வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட எந்தவித நோய்களும் வராது. இது நுரையீரலை பாதுகாத்து நுரையீரலை ஆரோக்கியப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.