சிறுநீரகத்தில் காணப்படும் கட்டிகளை கரைக்க இந்த ஜூஸ் போதும்!

சிறுநீரகத்தில் காணப்படும் கட்டிகளை கரைக்க இந்த ஜூஸ் போதும்!

நமது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தும் உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு சுமார் 190 – 200 லிட்டர் இரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன.

மேலும் நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது மற்றும் நாம் குடித்த நீரை வெளியேற்றுவது போன்ற முக்கியமான பணிகளையும் செய்கிறது. நம்முடைய சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்ய முடியும்.

ஆனால் தற்போது பலரும் பாதிக்கப்படும் பிரபலமான நோய்களில் ஒன்றாக சிறுநீரக பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையை எளிய முறையில் போக்க உதவும் திராட்சை பழ பானம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

திராட்சை பழம்
வேப்பங்கொழுந்து
பனங்கற்கண்டு

திராட்சை பழம்:
பலரும் திராட்சை பழம் சிறிது புளிப்பு சுவையுடன் இருப்பதால் இதனால் சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று சாப்பிடாமல் தவிர்த்து விடுகின்றனர்.

ஆனால் திராட்சை பழம் சிறுநீர் பையில் ஏற்படும் அழற்சி, கட்டிகளை கரைக்கும் தன்மை கொண்டது.

திராட்சையில் ஃப்ளேவோனாய்டுகள் இருப்பதால் இது இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் மிகவும் சிறந்தது. மேலும் இதில் இருக்கும் நீர்சத்து மற்றும் பொட்டாசியம் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கிறது.

வேப்பிலை:
வேப்பிலை மிகவும் கசப்பு சுவை உடையது. இதில் நிம்பின், நிம்பினென், நிமான்டியல் மற்றும் இதர பொருட்களான ஆன்டி- பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளன.

மேலும் இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் நச்சுப் பொருட்கள், கிருமிகள் போன்றவற்றை அழித்து உடலில் சுத்தமான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

பனங்கற்கண்டு:
கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை படிகக் கற்களை தான் பனங்கற்கண்டு என்று கூறுகிறோம். இதில் இனிப்பு சுவை மிக குறைந்த அளவில் இருப்பதால், நம் உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை பயன்படுத்தலாம்.

இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளதால் ஆஸ்துமா, அம்னிஷியா, மூச்சுப் பிரச்னை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.

செய்முறை:

முதலாவது ஒரு பாத்திரத்தில் 10 திராட்சை பழங்களை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள். அதன்பின் இதனை லேசாக நசுக்கி இதில் சிறிது சிறிதளவு வேப்பங்கொழுந்து, பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளுங்கள்.

பின்பு ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்த பிறகு இந்த நீரை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

நன்கு ஆறிய பிறகு இந்த தேனீரை காலை மற்றும் மாலை வேளைகளில் 100 மில்லி குடித்துவர கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீர் பை ஆகியவற்றில் ஏற்படும் வலி விலகும், கட்டிகள் கரையும் மேலும் சிறுநீரில் கல் ஏற்படுவதையும் தடுக்கலாம்.

மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதற்கு அனைத்து வகையான திராட்சைகளையும் பயன்படுத்தலாம்.