ஆலம்பழத்தை ஓம விதைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத நன்மைகள் :

ஆலம்பழத்தை ஓம விதைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத நன்மைகள் :

ஆலம்பழம் நம்முடைய உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்பு, புரதம், தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, மெக்னீசியம், போலேட், துத்தநாகம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம் அடங்கியுள்ளது.

இந்த ஆலம்பழ பொடியை தொடர்ந்து உட்கொள்ளும்போது குழந்தைகள் உயரமாகவும் வலிமையாகவும் வளர்வார்கள். ஆலம்பழ பொடியை தொடர்ந்து சாப்பிடும் பொழுது இது நினைவுத்திறனை அதிகரிக்கும். குழந்தைகள் மிகவும் புத்திசாலியாக மாறுவார்கள்.

உடல் மெலிந்து காணப்படுபவர்கள் இந்த ஆலம்பழ பொடியை சாப்பிடும்பொழுது நல்ல புஷ்டியாக அழகாக மாறுவார்கள். தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது தோலின் அழகு மெருகேறும்.

மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை கோளாறுகள் இவைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த ஆலம்பழ தூளை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது இவர்களுடைய பிரச்சினைகள் விரைவில் சரியாகும்.

ஆண்களுக்கு ஏற்படக் கூடிய சக்தி குறைபாடு பிரச்சனையை ஆலம்பழம் நிவர்த்தி செய்கிறது. மேலும் ஆண்களின் விந்து எண்ணிக்கையை அதிகரிக்கிறது. தொடர்ந்து ஒரு வருடம் ஆலம்பழம் சாப்பிட்டு வரும் பொழுது உடல் நல்ல வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.

வயதானவர்கள் ஆலம்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுடைய சக்தி அதிகரிக்கும். மேலும் அதிக ஆற்றலையும் பெறுவார்கள்.
 
தயாரிக்கும் முறை :

இந்த ஆலம் பழத்தை தயாரிக்கும் முறையானது ஆலம்பழங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும் பொழுது அதை சேகரித்து கொள்ளவும். இதை நன்றாக கழுவி ஒவ்வொரு பழத்தையும் நான்கு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைக்கவேண்டும். நன்றாக இந்த பழம் காய்ந்த பிறகு இதன் கூடவே ஓம விதைகளை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வறுத்து இதை பொடி செய்ய வேண்டும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்து இந்த கலவையை தனியாக ஒரு பாட்டிலில் சேகரித்து வைக்க வேண்டும்.

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் சாப்பிடலாம் தினமும் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் எடுத்து இதை அப்படியே சாப்பிடலாம். பொடியாக சாப்பிட பிடிக்காதவர்கள் ஒரு கப் சூடான பாலுடன் சேர்த்து கலக்கி குடிக்கலாம்

உடல் எடை :

ஆலம்பழம் உடல் எடையை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்கிறது. உடல் எடையை அதிகரிப்பதற்கு படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக ஆலம்பழம் சாற்றை பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம். இது உடல் எடையை அதிகரித்து உடலை நல்ல அழகாக மாற்றும். உடல் எடையை குறைப்பதற்கு பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் ஆலம் பழச்சாற்றை குடித்து வரலாம். வழக்கமான உடற்பயிற்சியை சேர்த்து செய்யும் பொழுது விரைவில் உடல் எடை குறையும்.

ஆற்றல் :

பொதுவாக கோடையில் அதிக அளவு வெப்பத்தின் காரணமாக நம்முடைய உடலில் உள்ள ஆற்றல் அதிக அளவு வெளியேறும். நம்முடைய உடல் இழந்த ஆற்றலையும் உயிர் சக்தியையும் மீண்டும் பெற இந்த ஆலம்பழம் உதவும்.
 
மலச்சிக்கல் :

ஆலம்பழம் பழங்காலத்திலிருந்தே இயற்கை மலமிளக்கியாகவும் செயல்பட்டு வந்துள்ளது. இந்த பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் நீண்ட காலத்திற்கு முன்பு மக்களுக்கு அவர்களுடைய செரிமான பிரச்சனைகளை சமாளிக்க உதவியிருக்கிறது. நீண்ட கால மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்க ஆலம்பழத்தை தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை குறையும்.

புற்று நோய் :

இந்த ஆலம்பழம் புற்று நோய் எதிர்ப்பு பொருளாக இருக்கிறது. இது கர்ப்பப்பை வாய் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மூளை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல வகையான புற்று நோய்களை தடுக்கும் குணம் கொண்டது.

கண்பார்வை :

கண்பார்வை மேம்படுத்துவதில் ஆலம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் மூன்று ஆலம் பழ விதைகளை சாப்பிட்டு வரும் பொழுது கண்பார்வை பிரச்சினையை சரி செய்கிறது. ஆலம் பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை அதிக அளவில் உள்ளது. இது பார்வை குறைபாட்டை சரி செய்யக்கூடியது.

சுவாச பிரச்சனைகளை சரி செய்கிறது :

ஆலம்பழம் சுவாசம் சம்பந்தமாக ஏற்படக்கூடிய நோய்களை குணமாக்குகிறது. ஆஸ்துமா போன்ற சுவாச மண்டலத்தில் ஏற்படக்கூடிய நோய்களை இது மிக வேகமாக குணப்படுத்துகிறது. ஆலம்பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும், தொற்று நோயை குறைக்கும் பண்புகளும் இருப்பதால் இது மிக வேகமாக சுவாச பிரச்சனைகளை சரி செய்கிறது.

கழிவுகளை வெளியேற்றும் :

ஆலம்பழம் உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இது செரிமான உறுப்பை சுத்தம் செய்ய உதவுகிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளை சுத்தம் செய்வதோடு கழிவுகளை வெளியேற்றும் செயல்முறையையும் வேகப்படுத்துகிறது.

எலும்புகளை ஆரோக்கியப்படுத்துகிறது :

ஆலம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது எலும்புகள் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது. ஆலம்பழத்தில் காணப்படக்கூடிய கால்சியம் பாலில் உள்ள கால்சியத்தை விட அதிக அளவில் காணப்படுகிறது. இது மிக வேகமாக எலும்புகளை ஆரோக்கியப்படுத்துகிறது.

இரத்த சர்க்கரை :

ஆலமர பழங்கள் இனிப்பாக இருந்தாலும் இது இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இதில் இருக்கக்கூடிய பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் இரத்த சர்க்கரையை உயர்த்தாது. இதைத்தவிர ஆலம் பழத்தில் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இது உங்கள் செரிமான அமைப்பில் அதிகப்படியான சர்க்கரையை உறிஞ்சும் செயல்முறையை மெதுவாக்குகிறது. கூடுதலாக இதில் இருக்கக்கூடிய பொட்டாசியம் நாம் சாப்பிட்ட பிறகு உறிஞ்சக்கூடிய சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.

உடல் ஆரோக்கியம் :

ஆலம்பழம் சேர்ந்த நீரானது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினமும் இந்த ஆலம்பழ தண்ணீரை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இந்த ஆலம்பழத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம்.

இரத்த சோகை :

ஆலம்பழம் இரத்தசோகை பிரச்சனைக்கு மிக முக்கியமான ஒரு மருந்து. இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாவதை மேம்படுத்தும். ஆலம்பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ஹீமோகுளோபின் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வயதாகும் தன்மை :

மிக வேகமாக வயதாகும் தன்மையை இந்த ஆலம்பழம் குறைக்கிறது. ஆலம்பழத்தில் இருக்கக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட் வயதான செயல்முறையை மெதுவாக கூடியது.

காயங்கள் :

ஆலம்பழம் காயங்கள் மற்றும் புண்களை மிக வேகமாக ஆற்றக்கூடியது. ஏனெனில் இதில் ஆன்டிசெப்டிக் பண்புகள் இருப்பதால் இது பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும். ஆலம்பழத்தில் இருக்கக்கூடிய கிருமிநாசினிகள் சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சி மற்றும் தொற்று நோயை தடுக்கிறது.

ஆலம் பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இதை ஒரு நாள் 40 கிராமுக்கு மேல் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. அதுவும் ஒரே நேரத்தில் இதை எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒருநாளில் 4- 5 தடவைகளாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.