கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்

கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்..!

* ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmatic)

* ஆன்டி-ஆக்சிடென்ட் (Anti-oxidant) தன்மை

* வலி, வீக்கம் (Anti-inflammatory) போக்கும் தன்மை

* காய்ச்சலை போக்கும் தன்மை

* கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை

* மனது சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை

* நோய் எதிர்ப்புத் தன்மை (Immune modulator)

* கண்புரையிலிருந்து பாதுகாக்கும் தன்மை

மருத்துவத்தில் கருந்துளசியின் பயன்பாடுகள்:-

* ஒரு கைப்பிடி துளசி இலைக் கொழுந்துடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவான மாத்திரைகளைச் செய்து காய வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு மாத்திரை நசுக்கி, தேனில் கலந்து, குழைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமல் உடனடியாக குறையும்.

* துளசி இலையை இலேசாக அவித்து 5 மி.லி. அளவுக்குச் சாறு எடுத்து காலை, மாலை வேளைகளில் ஒரு வாரம் வரை குடித்தால் தீராத சளித் தொல்லைகள் தீரும்.

* ஐந்து கிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் தீராத காய்ச்சல் குணமாகும்.