வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்...

நான்கு வெண்டைக்காயை எட்டு மணி நேரம் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்...

வெண்டைக்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னகத்தே வைத்திருந்தாலும் பலருக்கும் இந்த வெண்டைக்காய் பிடிக்காத ஒரு காய்கறி.  பலருக்கும் வெண்டைக்காய் பிடிக்காததற்கு முக்கியமான ஒரு காரணம் அதனுடைய வழவழப்புத்தன்மை. ஆனால் இந்த வழவழப்பு தன்மையே வெண்டைக்காயில் உள்ள முக்கியமான ஆரோக்கிய சத்து.

வெண்டைக்காயில் உள்ள பெக்டின் எனப்படும் கோந்து தன்மையே இந்த வழவழப்புக்கு காரணம். இதில் கரையும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்தநீர் அதிகரிக்காமல் இருக்கச் செய்யும். கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு பிரச்சனையை வரவிடாமல் செய்யும். வெண்டைக்காயில் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி, ஈ, கே, கால்சியம், இரும்புச்சத்து காணப்படுகிறது.

பல ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த இந்த வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கும்போது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு தருகிறது. மிக முக்கியமாக இது நம்முடைய எலும்புகளை அதிக வலுவாக்கும் தன்மை கொண்டது. கர்ப்பிணிப் பெண்கள் இதைத் தொடர்ந்து குடித்து வரும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

கைகால் மூட்டு வலிகள் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் இந்த வெண்டைக்காய் தண்ணீர் காக்கும். கரையக்கூடிய நார்ச்சத்து இதில் அதிக அளவில் இருப்பதால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல மலச்சிக்கலையும் குறைக்கும். வெண்டைக்காயில் இருக்கக்கூடிய தாதுக்கள் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை நீக்க உதவுகிறது. இதனால் உணவு செரிமானம் சீராக நடைபெற்று வயிறு தொடர்பான கோளாறுகள் சரியாகும்.

வெண்டைக்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். வெண்டைக்காயில் இருக்கக்கூடிய லெக்டின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கக்கூடியது. இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்கள் இந்த வெண்டைக்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும்போது இரத்த செல்கள் வேகமாக உற்பத்தி ஆகி இரத்தசோகை மிக வேகமாக குறையும்.

சிலருக்கு தொடர்ந்து இருமல் மற்றும் வறட்டு இருமல் காணப்படும். பலவித மருந்துகள் எடுத்தும் குணமாகாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது நல்ல பலன் அவர்களுக்கு கிடைக்கும். பலருக்கும் தொண்டையில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு தொண்டை வலி மற்றும் தொண்டையில் ஏதோ அடைப்பு இருப்பது போல் இருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் இந்த வெண்டைக்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அதில் இருக்கக்கூடிய ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் எதிர்ப்பு பண்புகள் மிக வேகமாக பாக்டீரியாக்களை ஒழித்து தொண்டையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யும். வயிற்றுப்போக்கு ஏற்படும்போது உடலில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து மிக வேகமாக குறைந்து கொண்டிருக்கும்.

கூடவே அதிகப்படியான மினரல்களும் உடலில் இருந்து வெளியேறும். இதை சரிசெய்ய இந்த வெண்டைக்காய் தண்ணீரை வயிற்றுப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள் குடித்து வரும்பொழுது மிக வேகமாக உடலில் நீர்ச்சத்து அதிகரித்து இழந்த ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கும். வெண்டைக்காய் கலோரி குறைவான உணவாக இருப்பதால் இந்த வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும்.

தேவையில்லாத கொலஸ்ட்ரால் குறையும் பொழுது இதயத்திற்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். தற்பொழுது பலருக்கும் உடல் எடை மிக அதிகமாகி அதனால் பல தொந்தரவுக்கும் உள்ளாகிறார்கள். உடல் எடை அதிக அளவில் அதிகரித்து இருப்பவர்கள் இந்த வெண்டைக்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து கூடவே உடற்பயிற்சிகளையும் செய்து வரும் பொழுது மிக வேகமாக உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல் உடல் எடை கூடுவதால் ஏற்படக்கூடிய நோய்களும் குறையும்.

சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எப்போது சாப்பிட்டாலும் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அதிக அளவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். இதனால் அவர்கள் அதிகம் சாப்பிட்டு உடல் எடையும் அதிகரிக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு பசியை குறைப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீரை கொடுத்து வரும் பொழுது பசி அடங்கி சாப்பிடக்கூடிய உணவின் அளவு குறைந்து உடல் எடையும் குறையும்.

சிலர் எப்பொழுது பார்த்தாலும் மிகவும் சோகமாக இருப்பது போல இருப்பார்கள். எப்பொழுதும் மிகவும் சோர்வாகவே இருப்பார்கள். எந்த வேலையும் அவர்களால் செய்ய முடியாதது போல் உணர்வார்கள். இப்படிப்பட்டவர்கள் வெண்டைக்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும்போது அவர்களுடைய சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக மாறுவார்கள். இதற்கு காரணம் வெண்டைக்காயில் இருக்கக்கூடிய பாலிஃபீனால் மற்றும் பிளேவனாய்டு ‘கிளைக்கோஜன்’ உற்பத்தியை அதிகரிக்கும்.

இது அதிகம் உடலில் இருந்தால் உங்களுக்கு சோர்வு இருக்காது. தற்போது பலரும் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்த வெண்டைக்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து உடலை ஆரோக்கிப்படுத்தும். பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய இந்த வெண்டைக்காய் தண்ணீரை எப்படி தயாரிப்பது பார்ப்போம்.

4 வெண்டைக்காய்களை எடுத்து அதனுடைய தலைப் பகுதியையும் வால் பகுதியையும் நறுக்கிவிடுங்கள். அதன் பிறகு வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி 8 மணிநேரம் ஊறவைத்து விடுங்கள். காலையில் எழுந்தவுடன் ஊற வைத்த இந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இரவில் தூங்க செல்வதற்கு முன் இதை தயார் செய்து வைத்தால் காலையில் நீங்கள் குடிப்பதற்கு வசதியாக இருக்கும்.