காசினிக் கீரையின் நன்மைகள்...

 காசினிக் கீரையின் நன்மைகள்...

 

* அற்புதக் கீரை காசினி!

கீரைவகைகளில் பலவிதமான நன்மைகளை தரக்கூடிய பண்பு கொண்டது காசினிக்கீரை. கொம்புக்காசினி, சீமைக்காசினி, ரிக்கரி ரகங்களான குவர் காசினி, சாலடு காசினி என்று இதில் நிறைய ரகங்கள் உள்ளன. காசினி பலவகைப்பட்ட மண் வகைகளிலும் வளரும் தன்மையுடையது. செம்மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. இது நல்ல ருசியுள்ள கீரை. உடலுக்கு பலத்தை கொடுக்கும் கீரை.

 

இக்கீரை தேக உஷ்ணத்தை சமன்படுத்தக்கூடிய சக்தியைக் கொண்டது. காசினிக்கீரை வளர்வதற்கு குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை அவசியமாகும். மலைப்பிரதேசப் பகுதிகளான கொடைக்கானல், ஏற்காடு, சேர்வராயன் மலைப்பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. நல்ல குளிர்ச்சியான தோப்புப்பகுதிகளிலும் இந்தக்கீரையை பயிரிடலாம். காசினிக்கீரையில் தாவரவியல் பெயர் ‘சிக்கோரியம் இன்டிபஸ்’ (Chicorium intybus) என்பதாகும்.

 

* காசினி இன்: நோய்கள் அவுட்!

காசினிக்கீரையில் தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. காசினிக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால்  உடல்நலம் சீராகும். காசினிக்கீரை இலை, வேரை பொடி பானமாக்கி தேனீருக்குப் பதிலாக பருகலாம். காசினிக்கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவைகள் உள்ளன. ஜீரண கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல் நோய்கள், ரத்த சோகை, சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை உடையது.

 

* நீரிழிவுக்கு எதிரி!

உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது காசினிக்கீரை. பற்களுக்கு உறுதியையும் பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இந்தக்கீரையை உண்டுவரக்குணமாகும். காசினிக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன் உடலை சீராக வைக்க உதவும். இந்தக்கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும். சர்க்கரை நோயாளிகளுக்கு காசினிக்கீரை ஒரு அற்புத மருந்தாகும்.

 

காசினிக்கீரையை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து வைத்துக்கொண்டு, தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் 100 மி.லி. வெந்நீரில் 1 தேக்கரண்டி அளவு கலந்து அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். சர்க்கரை நோயால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் சில  சமயங்களில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்குச் சென்றுவிடும். இதற்கு  காசினிக்கீரையை நன்கு அரைத்து புண்ணின்மேல்  கனமாக பற்றுப்போட்டு கட்டி  வந்தால் வெகு விரைவில் புண்கள் ஆறிவிடும்.

 

* லேடீஸ் ஸ்பெஷல்!

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், அதிக உதிரப்போக்கு இவற்றிற்கு காசினிக்கீரை நல்ல மருந்து. காசினிக்கீரை சூரணத்தைத் தேனில் குழைத்து உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். காசினிக்கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.

 

* பலன்கள் பலவிதம்!

* காசினிக்கீரையை பருப்புடன் வேக வைத்துக் கடைந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமடைந்து ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்.

 

* காசினிக்கீரையின் வேர் காய்ச்சலை குணமாக்கும் சக்தி கொண்டது.

* ரத்தத்தைச் சுத்தம் செய்து ரத்தத்தை விருத்தி செய்யும்.

* மூலச்சூட்டைத் தணிவிக்கும்.

* உயிர்ச்சத்துக்கள் கொண்டது. எனவே உடலுக்கு நல்லதைச் செய்யும்.

* வாரத்திற்கு ஒரு முறையோ, இருமுறையோ பாசிப்பருப்புடன் கலந்து சாப்பிட்டு வருவது உடல்நலத்திற்குப் பயன்தரும்.

* காய்ச்சலைப் போக்கும்.

* இந்தக்கீரை பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை ஒழுக்கு பெரும்பாடு நோய்களைக் குணமாக்கும். 


* காசினி கீரையின் நன்மைகள் :

காசினி கீரையின் வேர், இலைகளில் மருத்துவ குணங்கள் அதிகமாகவே உள்ளது. பசியின்மை, வயிறு உபாதைகள், மலச்சிக்கல், பித்தப்பை கோளாறுகள், புற்றுநோய் போன்றவற்றிற்கு மிகவும் நன்மைகள் தருகிறது. அதனுடைய சாறு, சிறுநீர் உற்பத்திற்கு மிகவும் உதவுகிறது. நம்முடைய கல்லீரலை பாதுகாக்கிறது. காபி பிரியர்கள், இந்த காசினி கீரையை எடுத்துக்கொள்வதால் பித்தத்தை போக்குகிறது. அதேபோல், காசினிக் கீரையை அரைத்து புண்களில் தடவினால் சீக்கிரம் குணமாகும். அதோடு, அதிலுள்ள கிருமிகளை அழிக்கிறது. மற்ற கீரையை சமைப்பது போலவே, இதை சமைத்து சாப்பிடலாம். முக்கியமாக, இந்த கீரையில் பீட்டா கரோடின் என்ற ஊட்டச்சத்து அதிகமாக உள்ளதால், சரும நோய், கண்நோய், பார்வை குறைபாடு, மலச்சிக்கல் போன்றவற்றை குணமாக்க உதவுகிறது.

 

அதேசமயம், சிலருக்கு இந்த கீரை சாப்பிடுவதால் ஒவ்வாமை வரக்கூடும். அவர்கள் தவிர்க்கலாம். அதை எப்படி அறிந்துகொள்ளலாம் என்றால், முதலில் சிறிதளவு உண்ணும்போது உதட்டில் அரிப்பு, சிவப்பு நிறமாதல், வீக்கம் போன்றவைகள் ஏற்படும். பித்தப்பையில் கல் உள்ளவர்கள் இதை தவிர்க்கவும். காசினி கீரையின் இலையை கருத்தரித்த பெண்கள் அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இது மாதவிடாயைத் தூண்டுகிறது. அதேபோல், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டும்.