ஸ்டீராய்டு ஊசிகள்,ஸ்டீராய்டு மருந்துகள், ஸ்டீராய்டு ஆயின்மென்டுகள்,ஸ்டீராய்டு மாத்திரைகள் என்றால் என்ன ???...

ஸ்டீராய்டு ஊசிகள்,ஸ்டீராய்டு  மருந்துகள், ஸ்டீராய்டு ஆயின்மென்டுகள்,ஸ்டீராய்டு மாத்திரைகள் என்றால் என்ன ???... முழுமையாக படிக்கவும்.

மக்களிடமிருந்து பணத்தைச் சுரண்ட அலோபதி மருத்துவர்களை வைத்து அலோபதி ஆஸ்பத்திரி முதலாளிகள் கையாளுகிற பலே டெக்னிக்குகள் சொல்லி மாளாதவை.

மக்களுக்கு வேண்டியது எல்லாம் நோய் உடனடியாக குணமாக வேண்டும். அப்படி உடனடியாக  குணம் படுத்துகிற டாக்டர் மக்களைப் பொறுத்த வரை கைராசிக்கார டாக்டர்.

எப்படி அந்த அலோபதி டாக்டர் மட்டும் கைராசிக்காரர் ஆகிறார் என்று யோசியுங்கள்...
அங்கேதான் சூழ்ச்சியே இருக்கிறது.

ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும் போதே நோய் குணமான உணர்வை உண்டாக்கும்
மருத்துவர்கள் இன்று எக்கச்சக்கம். 

அதற்கு அவர்களது திறமையோ, அனுபவமோ காரணம் இல்லை. 

பின்னே என்ன..?

அவர்கள் தரும் ஸ்டீராய்டு கலந்த மருந்துகள்தான் காரணம் !

🔥அது என்னய்யா ஸ்டீராய்டு ?

ஸ்டீராய்டு என்பது நோயைக் குணமாக்கும் மருந்து அல்ல. மறைக்கும் மருந்து. 

ஆஸ்துமா அதிகம் ஆகி, திணறத் திணற ஆஸ்பத்திரிக்கு போகும் ஒரு நபர், ஸ்டீராய்டு கலந்த மருந்துகள் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கெத்தாக சராசரி நிலைக்குத் திரும்புவார். 

அந்த நேரத்துக்கு அவரது ஆஸ்துமா தீவிரம் மறைக்கப்பட்டதே தவிர, அவர்  குணமானதாக அர்த்தம் இல்லை. 

ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொண்டால் உண்டாகும் பயங்கரங்கள் சொல்லி மாளாது. ஏராளம்...ஏராளம்...ஏராளம்.

அனாபாலிக் ஸ்டீராய்டு, கார்டிகோ ஸ்டீராய்டு என ஸ்டீராய்டில் இரண்டு வகைகள் உள்ளன.

முதல் வகை பெரும்பாலும் விளையாட்டு வீரர்களால் உபயோகப்படுத்தப்படுவது.

இது அவர்களுக்கு உடனடியாக ஒரு தெம்பை, உற்சாகத்தை, தசைகளுக்கு வலுவைத் தரக் கூடியது. விளையாட்டு வீரர் பென் ஜான்சன், போட்டியின் போது போதை மருந்து உட்கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, சர்ச்சைக்குள்ளானது கூட இந்த வகை ஸ்டீராய்டு காரணமாகத்தான்.

சினிமா நடிகர்கள் வசனத்தை மறக்காமல், டென்ஷன் இல்லாமல்,தொடர்ச்சியாக அடுக்கு அடுக்காக பேசி ரசிகர்களிடம் கைத்தட்டு வாங்குவதற்காகவும் பெரிய பெரிய ஹீரோ முதல் சிறிய ஹீரோ வரை போடப்படுகிறது.

அரசியலுக்கு வரும் சினிமா நடிகர்களும் ஸ்டீராய்டு ஊசி போடுவதும் பரவலாக உள்ளது.


இவர் மட்டும் அல்ல.
மாபெரும் நடிகர் அரசியலுக்கு வருவார், இயற்கையை காப்பார், அப்படி இப்படி என ஒரு நடிகர் உங்களிடம் கைத்தட்டு வாங்க மூச்சு விடாமல் உணர்ச்சியாக பேசுகிறார் என்றால் குழந்தை ஸ்டீராய்டு ஊசி போட்டு இருக்கு என்பதை நீங்கள்  புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது வகை ஸ்டீராய்டு, மருத்துவத் துறையில் உபயோகிக்கப்படுவது. இதுவும் மிகவும் ஆபத்தானதே ஆகும்.

இந்தி நடிகர் அம்ஜத்கானை ஞாபகம் வைத்திருப்பவர்களுக்கு அவரது மாமிச மலை போன்ற உடல் கட்டாயம் நினைவை முட்டும். 

உடல் நலக் கோளாறு ஒன்றுக்கு அவர் நீண்ட நாட்களாக உட்கொண்ட ஸ்டீராய்டு கலந்த மருந்துகள்தான் அதற்குக் காரணம் என்பது பிறகு கண்டறியப்பட்டது.

ஸ்டீராய்டு பாதிப்புகளுக்கு இப்படி நிறைய உதாரணங்களைப் பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.

தைராய்டு, இன்சுலின் போல நம் உடலில் இயற்கையாக சுரக்கும் ஒரு வகை ஹார்மோன்தான் ஸ்டீராய்டு் Steroid.

இந்த ஸ்டீராய்டு ஹார்மோனின் அளவு நம் உடலில் குறையும் போது அல்லது அதிகமாகும் போது நம் உடல் நலனில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. 

உடல்நலக் குறைவான அந்த நேரங்களில் ஸ்டீராய்டு ஹார்மோனின் அமைப்பில் உருவான மாத்திரைகளையோ, ஊசிகளையோ எடுத்துக் கொண்டு உயிரை தற்காலிகமாக காப்பாற்ற வருவதுதான் அலோபதி மருத்துவம். இவைதான் ஸ்டீராய்டு மருந்துகள்.

இந்த ஸ்டீராய்டு ஹார்மோன் நம் உடலில் வயிற்றுப் பகுதியில் சிறுநீரகங்களுக்கு மேல் அமைந்து உள்ள அட்ரீனல் சுரப்பியிலும், இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் விதைப்பை மற்றும் கருப்பைகளிலும் தயாராகிறது. 

அட்ரினல் சுரப்பியில் சுரக்கும் ஹார்மோனை கார்டிகோ ஸ்டீராய்டு Cortico steroid என்று அலோபதி மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.

பொதுவாக நாம் ஸ்டீராய்டு என்று சொல்வது இந்த கார்டிகோஸ்டீராய்டு ஹார்மோனைதான். உடலில் சோடியம் அளவைப் பராமரிப்பதில் கார்டிகோ ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதில் உற்பத்தியாகும் இன்னொரு முக்கிய ஹார்மோனான கார்டிசோல் ஹார்மோன் மன அழுத்தத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய இடம் பெறுகிறது. 

பிட்யூட்டரியில் சுரக்கும் ஹார்மோனை Androgenic என்கிறோம். செக்ஸ் ஹார்மோன் என்று சொல்லப்படும் இந்த ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன்தான் பாலியல் சார்ந்த செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது.

உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ள வைப்பது நமது சித்தர்களின் முறை.

உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பிறகு இது நம் உறுப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டு புதிய உறுப்புக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படும். அந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியின் வேகத்தைத் தணித்து ஒவ்வாமையைப் போக்கவும் இந்த அலோபதி மருத்துவத்திற்கு கொடுமையிலும் கொடிய ஸ்டீராய்டு மருந்துகள் நிச்சயம் தேவை.

நம் சித்தர்களின் மருத்துவம் உடல் உறுப்புகள் கெடாமல் இருப்பதற்கான உணவியல் முறையைதான் ஆரம்பம் முதல் சொல்லித் தருகிறது. இது போல கர்ம வினை மேஜிக்களை சொல்லித் தராது.

சருமம் தொடர்பான பிரச்னைகளுக்கும், வலி, வீக்கத்தைக் குறைக்கவும் ஸ்டீராய்டு ஆயின்ட்மென்ட்டாகவும் வலிக்காமல் இருக்க பயன்படுத்தப் படுகிறது. 

புற்று நோயில் வீக்கத்தைக் குறைக்க, பரவாமல் தடுக்க மற்றும் வலியை நீக்க மற்ற மருந்துகளுடன் ஸ்டீராய்டு கொடுக்கப்படுகிறது.

ஸ்டீராய்டின் தொடக்கம்தான் புற்று நோய். தற்போது புற்று நோய் ஆஸ்பத்திரி முதல் அத்தனை ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிவதின் முதல் பின்னணியே ஸ்டீராய்டுதான்.

நம் சித்தர்களின் மருத்துவம் ஆறு சுவை உணவுகளை சம விகிதமாக உட்கொண்டால் கேன்சர் உள்பட எந்த வியாதியும் நமக்கு வராது என்று நம்  வாழ்வியலை நமக்கு சொல்லித் தருகிறது.

ரத்தப் புற்று நோய்கள், ரத்த தட்டணு குறைபாடு நோய்கள், குழந்தைகளுக்கு வரும் புற்று நோய்கள், சிறுநீரகப் பாதிப்புகள், குடல் அழற்சி நோய்கள், மூளையில் ஏற்படும் கட்டி ஆகியவற்றுக்கும் அறுவை சிகிச்சைக்கு முன் மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மூளையில் ஏற்படும் காச நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும் ஸ்டீராய்டு தேவை என்கிறது பாழாய் போன அலோபதி மருத்துவம்.

ஸ்டீராய்டு பயன் படுத்துவதால் உருவாகும் பக்க விளைவுகள் என்ன ??? 
 
🔥ஸ்டீராய்டை தொடர்ந்து பயன் படுத்துகிறவர்களுக்கு உடலில் சோடியம் அளவு அதிகமாகி உடலில் நீர் தங்கி விடும். இதனால் பொட்டாசியம் அளவு குறைந்து  இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கும்.

🔥எடை கூடும்.

🔥நோய்த்தொற்று எளிதில் வரும்.

🔥முகம் வீங்கும்.

🔥சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகம் ஆகும்.

🔥கண் புரை வரும்

🔥எலும்புகள் பலவீனம் அடைந்து முறியும்

🔥உயர் ரத்த அழுத்தம்

🔥கெட்ட கொலஸ்ட்ரால்

🔥கல்லீரல் சேதம்

🔥இதயம் படிப்படியாக செயல் இழப்பு

🔥ஹார்மோன் குளறுபடிகள்

🔥மன அழுத்தம்

🔥மூர்க்கத்தனம்

🔥 விந்தணுக்கள் உற்பத்தி குறைவு 

🔥மலட்டுத் தன்மை 

போன்ற குறைபாடுகளையும் நாமே விலை கொடுத்து வாங்கியது போல் ஆகி விடும்.

🔥நல்ல பலன் தருகிறதே என்று அலோபதி ஆஸ்பத்திரிக்கு தொடர்ந்து போய் பயன் படுத்துவது மேற்கண்ட ஆபத்துகளை கண்டிப்பாக உண்டாக்கியே தீரும். 

தற்போது ஸ்டீராய்டு மருந்து பயன் படுத்தாத அலோபதி ஆஸ்பத்திரிகள் இல்லை...இல்லை...இல்லை.

விளையாட்டுத் துறையில் ஸ்டீராய்டு மருந்தை உடல் கட்டமைப்புக்காகவும், ஊக்க மருந்தாகவும் சிலர் தவறாகப் பயன் படுத்தி விடுகிறார்கள். ஆனால், இது சட்ட விரோதமானது மட்டும் அல்ல.
இது உயிருக்கு மிகவும் ஆபத்தானதும் கூட. விளையாட்டில் கிடைக்கும் பண வெறிதான் ஸ்டீராய்டு மோகத்திற்கு அவர்களை அடிமை ஆக்குகிறது.

ஊசியாகவோ, இன்ஹேலராகவோ, மாத்திரைகள் மூலமாகவோ ஸ்டீராய்டு கொடுக்கப் படுவதால் பல நோயாளிகளுக்கும் அவர்கள் உடன் இருப்பவர்களுக்கும் அது ஸ்டீராய்டு என்று எல்லாம் தெரிந்து கொள்ள முடியாது. 

தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்கள் அது ஸ்டீராய்டா என்று தெரிந்து கொள்ளாதவர்களுக்கு திடீரென
🔥கருப்பு பூஞ்சை நோய்
🔥சிவப்பு பூஞ்சை நோய்
🔥மஞ்சள் பூஞ்சை நோய் உள்பட கண்டு பிடிக்கவே இயலாத பல்வேறு புது வகை நோய்கள் அவரவர் உடலுக்கு ஏற்ப அதிவேகமாக  உண்டாகும்.

உடனே சரி ஆக வேண்டும் என்ற கிறுக்கில் இருப்பவர்களுக்கு ஸ்டீராய்டு போட்டு சுறுசுறுப்பு ஆக்கி விரைவில் சரி ஆகிறது என்ற மாயத் தோற்றம் தற்போது நடைபெறுகிறது.

சாதாரண உடல் கோளாறு முதல் பெரிய வலியோடு செல்பவர்களுக்கு ஸ்டீராய்டு போட்ட உடன் கிடைக்கும் சுறுசுறுப்பில் கேட்கும் ஆஸ்பத்திரி  பில்கள் பல லட்சங்களை கொடுத்து விடுகிறார்கள்.

ஸ்டீராய்டு மருந்துகளின் கேடுகள் குறித்து இன்று வரை பலருக்கு புரிதலே கிடையாது.

ஸ்டீராய்டு வீரியம் அதிகம் ஆகி விட்டால் நோயாளி கதையும் அம்பேல் ஆகி விடும். நாங்கள் எவ்வளவோ போராடினோம். ஹார்ட் அட்டாக் வந்து விட்டது என ஒரேயடியாக சொல்லி  பில்லை  மட்டும் மனசாட்சி இன்றி வாங்கி நேர் செய்து விடுவார்கள்.

குழந்தைகளுக்கும் ஆஸ்துமா, வீசிங், அலர்ஜி, சருமப் பிரச்னைகள் என்று  இந்த ஸ்டீராய்டு கொடிய மருந்தை  கொடுப்பார்கள். 

பல மருத்துவர்களும் உடல் சரி ஆகிறது என நல்ல பெயர் வாங்க பிரச்சனைகளின் ஆரம்பக் கட்டத்திலேயே குழந்தைகளுக்கு  ஸ்டீராய்டு கொடுத்து விடுகிறார்கள்.

இப்படி நீண்ட நாட்களுக்கு ஸ்டீராய்டு எடுத்துக் கொள்கிற போது உங்கள் குழந்தைகளுக்கு 

🔥ஹைப்பர் டென்ஷன்
🔥இதயக் கோளாறு
🔥உடல் பெருத்துப் போதல்
🔥குறிப்பாக முகம் ஊதிப் போவது
🔥கல்லீரல் பழுது
🔥அதன் விளைவாக மஞ்சள் காமாலை
🔥பெண்களுக்கு உடல் எங்கும் முடி வளர்ச்சி
🔥மார்பகங்கள் சிறுத்துப் போதல்
🔥கிளிட்டோரிஸ் எனப்படுகிற அந்தரங்க உறுப்பின் ஒரு பகுதி விரிவடைதல்
🔥குரலில் மாற்றம்
🔥மாத விலக்குக் கோளாறு
🔥அதிக கோபம்
🔥படபடப்பு
🔥தற்கொலை எண்ணம்
🔥புற்று நோய்
🔥நீரிழிவு நோய்
🔥சிறுநீரகக் கோளாறு
🔥பக்கவாதம்
🔥ஆண்மை பெண்மை குறைபாடு
🔥முகம், கழுத்துப் பகுதிகளில் பருக்கள்,
🔥ஆண்களுக்கு வழுக்கை,
🔥 ஆண்களுக்கு மார்பகங்கள் பெருத்துப் போவது

என இப்படிப் பல பல பயங்கர பின் விளைவுகளை உண்டாக்கும். 

அலோபதி மருந்துகளைப் பொடி செய்து சித்த மருந்து என்கிற பெயரில் கொடுக்கும் பல்கலைகழக டிகிரி சில மேசானிய அடிமை  எத்துவாளி சித்த மருத்துவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் நம் பணத்தை பிடுங்குவதில் குறியாக இருப்பார்கள்.

நம்பிக்கையான சித்த மருத்துவர்களும்,பாரம்பரிய வம்சாவழி மருத்துவர்களும் பெரும்பாலும் தவறு செய்வது இல்லை. 

சித்த மருத்துவம் என பத்திரிக்கையில் வரக் கூடிய விளம்பரங்கள் பெரும்பாலும்  போலியானவையாகவே இருக்கும். 

உணவுக் கட்டுப்பாடு, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்கிற மாதிரி சில விஷயங்களை சரியாக செய்தால், பல பக்க விளைவுகளை நாம் முற்றிலும் தவிர்க்கலாம்

மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மக்களை பயம் காட்டி, மிகைப் படுத்தி எவன் ஓவர் ஆக்ட் செய்கிறானோ அவன் மருத்துவனே அல்ல !

இயல்பாக ஆறு சுவை உணவுகளையும் சமமாக பாவித்து ருசித்து உண்பதே நம் வாழ்வியல்.

இதுவே நம் மருத்துவம்.
உணவுதான் மருந்து.
ஸ்டீராய்டும்,தடுப்பூசியும் அல்ல.

நீங்கள் கடையில் வாங்கி சாப்பிடும் அத்தனை கோழிகளும் ஸ்டீராய்டு கலந்த கோழிதான். கவனம்...கவனம்.

வாழ்க்கையை புரிந்து வாழுங்கள்.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.