மலம்கழித்தல் பற்றிய விழிப்புணர்வு பதிவு…

மலம்கழித்தல் பற்றிய விழிப்புணர்வு பதிவு…

டாய்லெட் என்ற ஒரு பொருளை வைத்து மனிதனுக்கும்,இயற்கைக்கும்,பிற உயிர்களுக்கும் எவ்வளவு ஆபத்து ஏற்படுத்தபட்டு இருக்கிறது என்று பாருங்கள்.

“மனிதனுக்கும் நீர் நிலைகளுக்கும்” உள்ள தொடர்பை துண்டித்து, நீர் நிலைகளை அழித்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். தண்ணீர் பெரும் வணிக பொருளாக மாறும்.

அன்று திறந்த வெளியில்…மலம் கழிக்க ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு தனி இடம் ( தப்பி தவறி பெண்கள் இருக்கும் பகுதிக்கு ஆண் சென்றால் தண்டனைகள் கடுமையாக இருக்கும் என அஞ்சுவர்.) என ஒதுங்கு புறமாக பாதுகாப்புடன் மலம் கழித்தோம்:( இப்பொழுதுதான் நகர மயமானதும் ஒதுங்கு புறம் இன்றி போனது…ஒழுக்கமும் போனது)

முன்பு அனைவரும் மலம் கழிக்க ஏரி குளங்களுக்கு செல்ல குறைந்த பட்சம் 1கி.மீ நம்மை அறியாமல் நடந்து மலம் கழித்து நீர் நிலைகளில் நீச்சலடித்து
குளித்து வீட்டிற்கு வரும்போது காலைக் கடனையும் முடித்து நம்மை அறியாமலே நடைபயிற்சியும் நீச்சலும் செய்து உடல் நலம் பேணினோம்.இப்போது இது கிராமங்களில் சிறிதளவு மட்டுமே உள்ளது. காலை வெயில் நம்மீது பட நமக்கு beta D3 சக்தி கிடைக்கும்.

டாய்லட்டை மூலதனமாக வைத்து

1. நோய்களை பெருக்கும் மருத்துவ வணிகமும்,

2. தூய்மை படுத்துதல் என்ற பெயரில் இரசாயன பொருட்கள் வணிகமும்,

3. நீர்நிலைகளை அழித்து தண்ணீரை விலைக்கு விற்கும் வணிகமும்

எப்படி செயல்படுகிறதென பார்ப்போம்...

திறந்தவெளி மலம் கழித்தல் முறைக்கும் டாய்லெட் க்கும் வேறுபாடுகள்:

* திறந்த வெளியில்…காற்றோட்டமாக மலம் கழிக்கும் போது…கார்பன் டை ஆக்சைடு… காற்றிலே கலந்து போய்விடுவதால் நாம் அதை சுவாசிப்பதில்லை.

* திறந்த வெளியில் மலம் கழித்தோம் அது மறுநாள் மக்கி உரமாய் போனது….

* டாய்லட் ல் நாம் வெளியிடும் வாயுக்கள் நான்கு சுவருக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்க நாம் அதை சுவாசித்து கொண்டே இருந்து வெளியே வரும் பொழுது கதவு திறக்க அந்த வாயுக்காற்று பெட் ரூமில் பரவ குடும்பத்தோடு விடிய விடிய ஏசியோடு சேர்த்து சுவாசிக்கிறோம்.

* ஒவ்வொருவரும் மலம், சிறுநீர் கழித்த பிறகு harpic போட்டு கழுவிட்டு விட்டா வருகிறோம்? சிந்தியுங்கள்…இரண்டு நாளுக்கு ஒரு முறை அல்லது வாரம் ஒருமுறை தானே கழுவுகிறோம்…அப்போ தொற்று வராதா?

1. நோய்களை பெருக்கி மருத்துவ வணிகம் எப்படி? :
——————————————————–
திறந்த வெளியில் மலம் கழித்ததால் மலத்தில் என்ன வருகிறது, மலம் எப்படி வருகிறது? தண்ணீராகவா,புழுக்கள் வருகிறதா? சீதமாக வருகிறதா? மலத்தில் ரத்தம் வருகிறதா? வழக்கத்திற்கு மாறாக மலத்தில் மாற்றம் உள்ளதா?…என ஆராய்ந்து வீட்டிலேயே செலவின்றி எளிய முறையில் பாட்டி வைத்தியம் பார்த்து ஆரோக்கியத்தை பேனி காத்தோம்.டாய்லெட் வந்ததும் பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய துவங்கின.

மலம் கழித்தலின் போது கீழே குனிந்து பார்க்காததால், டாய்லட் சரியாக பராமரிக்காததால், வாயுக்களை சுவாசிப்பதால் முழுமையாக மலம் வெளியேற்றபடாததால், இரசாயனங்கள் பயன்பாடு போன்ற காரணங்களால் நோய்கள் பெருக்கமாக நோயாளிகள் பெருக மருத்துவ வணிகம் பெருகியது.

டாய்லெட் ஐ ஒழுங்காக கழுவில்லை என்றாலும் அதன் மூலமாக தொற்று நோய்கள் பரவுகின்றன.

சிந்திக்க:
கழிப்பறையை கட்டச் சொல்லி விளம்பரபடுத்தும் அரசாங்கம், பொது கழிப்பிடங்களை பேணி காப்பதில்லையே ஏன்?

2. இரசாயனப் பொருட்கள் வணிகம்:
————————————————————
டாய்லெட் என்று கட்டினால் ஒவ்வொரு மாதமும் ஆகும் செலவுகள்:

1.கண்டிப்பாக…பிரஷ்
2.டாய்லட்வாஷ்
3. ரூம் ரிபர்ஷ்ணர்
4.டைல் கிளீனர்
5. பினாயில்
6. டிஸ்யூ பேப்பர்.
7. கேட்டு வாஷ்

டாய்லெட் நாறுகிறது என்று பினாயிலை ஊற்றினால் நாற்றம் போய்விடுகிறதா? இல்லை..அது பொய்.. பினாயிலின் நாற்றம் அதைவிட அதிகமாக இருப்பதால் அது பினாயிலோடு கலந்தே தான் இருக்கிறது..நமக்கு பினாயிலின் வாடை மட்டுமே தெரியும்..எனவே பினாயில் போலி….பாதுகாப்பானது அல்ல…அதுவும் மாயை.

தூய்மைபடுத்த பயன்படுத்தபடும் அனைத்துமே கெமிக்கல்கள்…அதனால் உடலுக்கு தோல் , சுவாச கோளாறுகள் சம்பந்தமான கேடுகளால் நோய்கள் பெருக்கமடைகின்றன.

3. நீர்நிலைகளை அழித்து தண்ணீரை விலைக்கு விற்கும் வணிகமும்:
—————————————————————

மனிதனுக்கும் நீர்நிலைகளுக்குமான தொடர்பை துண்டித்தல்:

* ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு ஆகும் தண்ணீர் செலவு கணக்கு:

ஒரு முறை சிறிநீர் கழிக்க சுமார் 10 லிட்டர் தண்ணீர் ஊற்றபடுகிறது.. ஒருவர் ஐந்து முறை ஒருநாளைக்கு சிறுநீர் கழிக்க 50 லி தண்ணீர் வீணாக பயன்படுத்தபடுகிறது…அப்போ ஒரு குடும்பத்துக்கு நாளு பேர் என்றால் 200 லிட்டர் தண்ணீர் வீனாக செலவாகிறது.

ஒருவர் குளிக்க சுமார் 25 லிட்டர் தண்ணீர் செலவிட நான்கு பேருக்கு 100 லிட்டர் தண்ணீர் வீனாகுகிறது.

துணி துவைக்க 30லிட்டர் வீனாகுகிறது

தண்ணீர் மறுசுழற்சி
————————————-
சரி அந்த தண்ணீர் மறு சுழற்சி செய்து பூமிக்குள் அனுப்ப படுகிறதா? அதுவும் இல்லை…டிரைனேஜ் வழியாக சாக்கடை வழியாக ஆற்றுக்கு போய்விடுகிறது…பிறகு எப்படி நிலத்தடியில் தண்ணீர் கிடைக்கும்?

ஒரு நாளைக்கு போர் வழியாக ஒரு குடும்பத்திற்கு சுமார் 500 லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. மழை நீரையும் மண்ணுக்குள் செல்லாதவாறு காண்கிரீட் தரை, டிரெய்னேஜ் போட்டு தடை செய்துவிடுகிறோம்.

முன்பெல்லாம் வீட்டில் கொல்லைபுரம் இருக்கும். குளிக்க,துவைக்க,பாத்திரம் கழுவ பயன்படுத்தும் தண்ணீர் செடிகளுக்கு சென்று மண்ணுக்குள்ளேயே மீண்டும் அனுப்பப்படும்…சிமென்ட் தரையாக அமைக்காததால் மழை நீரும் மண்ணுக்குள் செல்லும். அதனால் நிலத்தடி நீர் வற்றாது இருந்தது.ஆனால் இன்று?

அதே போல் அன்று, சோற்று பானையை சுரண்டாதே, வழித்து போடாதே என்று சொல்வார்கள் காரணம் நாம் உண்டு மிச்ச உணவுகளை கொல்லைபுறத்தில் பாத்திரம் கழுவும் பொழுது அதை நம்பி உண்ண காத்திருக்கும் காக்கீ,குருவி,அணில்,நாய் என பல்லுயிர்களும் அதனை நம்பி இருக்கும் என்று…

ஓடைகளும் ஆறுகளும் ஆரோக்கியமாக இருந்தது….காரணம் நீர்நிலைகளை நாம் நேரடியாக பயன்படுத்தி கொண்டு இருந்தோம். அதனால் அந்த அக்கறையில் தூர் வாரினோம் பேணி காத்தோம்.

இன்று நாம் டாய்லெட் ஐ பயன்படுத்தாமல் திறந்த நிலை மலம் கழித்தல் முறையில் இருந்திருந்தால்:

*குப்பைகளை ,கழிவுகளை நீர்நிலைகளில் கொட்ட விடமாட்டோம்.

* சாக்கடையயை, இரசாயன கழிவு நீர்களை ஆறு,வாய்காலில் கலக்க விட மாட்டோம்.

* பெரும் குளிர்பான நிறுவனங்களை தண்ணீர் உறிஞ்ச விடமாட்டோம்.

* குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுகொடுப்போம்.

*நீர் நிலைகளில் வளரக்கூடிய ஆயிரகான வகை மீன்கள், இறால், நண்டு என அனைத்தும் இருந்திருக்கும்.

நீர்நிலைகளை நாம் அன்றாட பயன்படுத்தாததால்
அன்று “சென்னை கூவம் ஆறு” சாக்கடை ஆனது, இன்று “காவிரியாறு” சாக்கடையாகி கொண்டு இருக்கிறது.

நமக்கென்ன…வீட்டுக்குள்ள தண்ணி வருது, பாதுகாப்பாக இருக்கிறோம், ஹைஜெனிக்….என்ற மாயை ல்…மறைமுகமான நாம் நாற்றத்திலும், ரசாயனங்களிலும் சிக்கி பணத்தையும் விரையமாக்கி…நோய்களையும் வாங்கிக் கொள்கிறோம்…

மேலும் இனி… கிராமங்களையாவது விட்டு வையுங்கள்…என்பதே எனது வேண்டுகோள்.