சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம் 

வெங்காயம் என்று வரும்போது, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் என்ற இரண்டு வகைகளை பார்க்க முடியும். 

இந்தியாவின் தென் பகுதிகளில் மட்டுமே சின்ன வெங்காயம் அதிகம் விளைகிறது. வட இந்தியாவில் பெரிய வெங்காயம் தான். அங்கு ஆறு வருடங்கள் வேலை பார்த்தபோது எனக்கு தெரிந்தது - அவர்களுக்கு உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் - இரண்டும் உயிர் மாதிரி. பெரிய வெங்காயம் அனைத்து உணவு வகைகளிலும் இடம் பெரும். அங்குள்ள கடும் உஷ்ணம் மற்றும் கடும் குளிர் - இரண்டிற்கும் பெரிய வெங்காயம் ஒரு அருமருந்து. ஒரு தட்டில் பரோட்டா வைப்பார்கள்; மற்றொரு தட்டில் சப்ஜி (சைடு சமாச்சாரம்) - வேகவைத்த பருப்பு; வெண்டிக்காய் கூட்டு; கத்திரிக்காய் கூட்டு; - மூன்றாவது தட்டில் வெட்டி வைக்கப்பட்ட பெரிய வெங்காயம். பரோட்டா சப்ஜியுடன் தொண்டைக்குள் நுழைந்தவுடன், பெரிய வெங்காயம் உள்ளே நுழையும். 
பெரிய வெங்காயத்தை பொறுத்தவரையில் நமக்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை; அதன் பெரிய உருவம் மற்றும் தோலை நீக்கிவிட்டு உறிப்பதற்கு மிகவும் எளிது; கண்ணையும் அதிகம் கரிக்காது; 

சின்ன வெங்காயம் பார்த்தாலே கண்களில் தண்ணீர் வெளியில் வருவதற்கு தயாராகி விடும். "கடுகு சிறிது என்றாலும் காரம் குறையாது" என்ற பழமொழி சின்ன வெங்காயத்திற்கு பொருந்தும். 

சின்ன வெங்காயம் மருத்துவ குணங்கள்: 

01. தென்னிந்திய சமையல் - உதாரணமாக சாம்பார் - சுவையாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்; 
02. கணையத்தில் உள்ள இன்சுலின் குறைபாட்டை நீக்குவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் பயன் தருகிறது; 
03. இதில் ஆன்டி inflamattory; ஆன்டி diabetic; ஆன்டிவைரல்; antimicrobial; ஆன்டிஆக்ஸிடென்ட் போன்ற காரணிகள் உள்ளன. 
04. இதில் அடங்கியுள்ள மற்ற வேதிப்பொருட்கள் - வைட்டமின் B மற்றும் C; குரோமியம், கால்சியம்; மெக்னிசியம்; ஜிங்க்; Phosperus; பொட்டாசியம்; இரும்புசத்து; மாங்கனீஸ்; அது மட்டும் இல்லாமல், நீர் சத்து, புரதம் மற்றும் மாவுச்சத்துக்களும் உள்ளன. 
05. இது பெருங்குடல் மற்றும் சிறுகுடல் பகுதிகளில் தேங்கியிருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது; 
06. இதன் சாற்றினை ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து உண்ணும்போது, இருமல் தணியும் மற்றும் நீங்கும்; 
07. இரத்தம் உறைந்து போவதை இது தடுக்கிறது; 
08. தண்ணீரில் இதன் துண்டுகளை வெட்டி போட்டு ஊறவைத்து, பிறகு குடித்து வர, நீர் எரிச்சல் மற்றும் நீர் கடுப்பு நீங்கும்; 
09. நறுக்கிய சின்ன வெங்காயத்துடன் நெய் சேர்த்து வதக்கி உண்ணும்போது சுவையாக இருக்கும்; இதன் மூலம் உடல் சூடு மற்றும் மூல வியாதி சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்; 
10. இதனை பச்சையாகவும் உண்ணலாம்; சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொண்டு உண்ணலாம்; கிராமங்களில் விடிகாலை பழைய சோற்று கஞ்சியுடன், சின்ன வெங்காயத்தை கடித்துக்கொண்டு சாப்பிடுவார்கள். பழைய சோறு மற்றும் சின்ன வெங்காயம் - இரண்டும் நல்ல உணவு மற்றும் மருந்து; 
11. நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தைரியமாக இதனை எதாவது ஒரு வகையில் தினமும் உண்டு வர, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்; 
12. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இதனை உணவில் சேர்த்து வர, எடை கட்டுக்குள் வரும்; 
13. வாய்ப்புண்ணினால் அவதிப்படுபவர்கள், இதனை உண்ணலாம்; எளிதில் தீர்வு கிடைக்கும்; 
13. நறுக்கிய சின்ன வெங்காயத்தை சிறு உரலில் வைத்து இடித்து, சாறாக்கி, அதனை தினமும் ஒரு தேக்கரண்டி என்ற அளவில் குடித்துவர, சளித்தொல்லை நீங்கும்; 
14. ஈறு வீக்கம் குறைவதற்கு, இதன் சாற்றை பஞ்சில் தடவி ஈற்றில் தடவ, வீக்கம் மற்றும் வலி நீங்கும்; 
15. பூச்சிக்கடி வலி குறைவதற்கு கடிவாயிலில் இதன் சாற்றை தடவ தீர்வு கிட்டும்; 
இன்னும் நிறைய நிறைய பலன்கள் சின்ன வெங்காயம் மூலம் மனிதர்களுக்கு கிடைக்கிறது. 

ஆரோக்கியம் காப்போம் - உணவே மருந்து....