பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை வளராமல் இருக்க இயற்கை வைத்தியம்...

 பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை 

வளராமல் இருக்க இயற்கை வைத்தியம்...

 

பெண்கள் பருவம் அடைந்து வளர வளர அவர்களின் ஹார்மோன்களில் சில மாற்றங்கள் நிகழும். இதனால் பெண்களுக்கு உதட்டின் மேல் அரும்பு மீசை வளர ஆரம்பிக்கும். 

இதனால் பெண்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. இவை போக்க அழகு நிலையங்களுக்கு சென்று மீசையை நீக்கி விடுகிறார்கள். இப்படி செய்வதால் அவர்களுக்கு மீசை மிக அதிகமாக வளர ஆரம்பித்து விடும். 

 

இதோ மீசை வளராமல் இருக்க இயற்கை வைத்தியம் :

 

* எலுமிச்சை சாறுடன், சிறிதளவு சர்க்கரை சேர்த்து உதட்டின் மேல் 15 நிமிடங்கள் தடவி பின்னர் கழுவினால் மீசை வளர்வது படிப்படியாக குறையும். 

* வாழைப்பழத்துடன், ஓட்ஸ் பொடியை சேர்த்து மிக்ஸியில் அரைத்து உதட்டின் மேல் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் மீசை முடி உதிரர் விடும். 

* உருளைக்கிழங்கை துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து அரைத்து உதட்டின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவினால் மீசை உதிரும். முகத்தில் உள்ள கருமை மாறும். 

* கடலை மாவுடன் சிறிது தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்து உதட்டின் மேல் பத்துபோல் போட்டு காய்ந்ததும் முகத்தை கழுவினால் தேவையில்லாத மீசை முடிகள் அகன்று விடும். 

* குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் நன்றாக அரைத்து மீசை வளரும் பகுதியில் இரவு தூங்கும்போது போட்டுவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவினால் படிப்படியாக மீசை வளர்வது குறைவதுடன், மீசை முடிகள் கொட்ட ஆரம்பித்து விடும்.