சர்க்கரை நோய் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை அனைத்திற்கும் ஒரே பழம்...

 சர்க்கரை நோய் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை 

அனைத்திற்கும் ஒரே பழம்...

 

கொய்யாப்பழம் பிடிக்காதவர்களே இல்லை என சொல்லலாம். பச்சை அல்லது மஞ்சள் நிற தோலுடன் சிறு சிறு கொட்டைகள் நிறைந்த பழம் இது. கொய்யாப்பழத்தில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்து இதன் மருத்துவ குணத்திற்கு காரணமாக உள்ளது. வயிற்றுப் போக்கை குணப்படுத்த கொய்யா இலைகளினால் ஆன டீ உதவுகிறது. 

 

கொய்யாப்பழம் சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள்:

கொய்யாவில் உள்ள வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நச்சு கழிவுகளால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து காப்பாற்றுகிறது. கொய்யா இலைச் சாறு உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு ஆகியவற்றை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. 

 

எடையை குறைக்க வேண்டுமா 

கொய்யாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வினை தந்து அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது. மேலும் இது குறைந்த கலோரிகள் கொண்ட பழம் என்பதால் உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவுகிறது.

 

சர்க்கரை எண்ணிக்கையை குறைக்கிறது

கொய்யா இலைச் சாறானது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் சரப்பை சீராக வைக்கிறது. உணவிற்கு பிறகு கொய்யா இலை டீ பருகி வந்தால் அது இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

ஆரோக்கியமான அணுக்களை பாதிக்கும் நச்சு கழிவுகளை வெளியேற்றும் வலிமை மிக்க ஆன்டி ஆக்ஸிடன்டுகள் கொய்யாப்பழம் மற்றும் கொய்யா இலை சாற்றில் உள்ளது.

 

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 

 இதனால் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டி கேன்சரஸ் தன்மை புற்றுநோய் அணுக்களை வளர விடாமல் அதனை அழித்து விடுகிறது.தண்ணீரில் கரைய கூடிய ஆன்டி ஆக்ஸிடன்டான வைட்டமின் C நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடைய செய்கிறது. ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்டு உடலில் நோய் தொற்றை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும். வைரஸ்களை அழித்து விடுகிறது.

 

மலச்சிக்கலுக்கு

 இதில் உள்ள நார்ச்சத்து  குடலின் சீரான இயக்கத்திற்கு உதவி  மலச்சிக்கலை போக்குகிறது. கொய்யா இலை சாறானது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது என்பது ஆய்விலும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்க கொய்யா இலை சாறு பெரிதும் உதவுகிறது

 

மாதவிடாய் வலிகளுக்கு

கொய்யா இலை சாற்றை தினமும்  எடுத்து வர மாதவிடாய் வலியின் தீவிரமானது குறைகிறது. ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்து காணப்படுவதால் சருமம் மற்றும் தலைமுடிக்கு பல அதிசயங்களை ஏற்படுத்துகிறது. ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் தன்மை கொண்ட கொய்யா சுருக்கங்களை போக்கி வயதான தோற்றத்தை போக்குகிறது.