திராட்சையின் மருத்துவ குணங்கள்

 திராட்சையின் மருத்துவ குணங்கள்:

 

கறுப்பு, வெள்ளை, நீலம், பச்சை, சிகப்பு என்று பல வண்ணங்களில் வண்ணத்துப் பூச்சியைப் போல் மின்னுவது திராட்சை.

திராட்சை பச்சையாக இருந்தாலும், உலர்ந்திருந்தாலும் அதன் மருத்துவ குணம் ஒரே மாதிரி சிறப்புடன்தான் உள்ளது.

திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும்.

அசைவ உணவு உண்ணாதவர்கள்; அன்றாட வாழ்வில் திராட்சையைச் சேர்த்துக் கொண்டால், அசைவ உணவினால் கிடைக்கக் கூடிய தேவையான பலன்களைத் திராட்சையால் பெறமுடியும்.

திராட்சைகளில் 'ரெஸ்வெரட்ரால்' (Resveratrol) எனும் 'ஆன்டி&ஆக்ஸிடன்ட்' (Anti-Oxidant) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோய், இதயநோய், நரம்பு மண்டல வியாதிகள் போன்றவை வராமல் தடுக்கும் குணமுடையது.

திராட்சையில் இருக்கும் ஒரு வேதிப்பொருள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, இரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ராலை சேர்த்து, அடைப்பு வருவதை தடுக்கிறது.

திராட்சை இரத்தத்தை சுத்திகரிப்பது மட்டுமில்லாமல் இரத்த உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

கல்லீரல் கோளாறுகளை போக்கி, ஜீரணத்துக்கு உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. மலத்தை இளக்கும். சிறுநீரை பெருக்கும். சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது