பற்கள் கறைகள் இல்லாமல் பளிச்சிட...
பற்கள் கறைகள் இல்லாமல் பளிச்சிட...
நாம் தினமும் என்னதான் பல் துலக்கினாலும் பல் இடுக்கு பகுதியிலும் ஈறு ஒட்டியுள்ள இடங்களிலும் உணவுத் துகள் படிந்துவிடும். இதை தவிர்க்கவே முடியாது. இந்த உணவுத் துகள்கள் ஆரம்பத்தில் சற்று மஞ்சள் நிறத்தில் பசை தன்மையுடன் இருக்கும்.
இது அடுத்தடுத்து உணவு துகள்கள் படிவதை அதிகப்படுத்தும். இப்படித் படிந்த உணவுத் துகள் 2 அல்லது 3 நாட்கள் வரை அகற்றபடவில்லை என்றால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீரில் உள்ள தாது உப்புக்களால் கறை படிவாக மாறுகிறது.
இந்த உணவு துகள், கறை படிவு இரண்டும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதற்க்கு அடுத்ததாக ஈறு பகுதியை ஒட்டியுள்ள உணவுதுகள் ஈறு வீக்கம் இரத்த கசிவை ஏற்படுத்தும்,
பின்னர் இரத்த கசிவு குறைந்து ஈறு பகுதி கரைய ஆரம்பிக்கும். இதனால் பல் வேர்பகுதியின் பிடிப்பு குறையும். வேர்பகுதியில் கூச்சம் ஏற்படும். ஆரம்ப காலத்தில் சுத்தம் செய்யவில்லை என்றால் பின் விளைவுகள் அதிகமாக வரும்,
பொதுவாக பல் சுத்தம் செய்தால் பல் வலி வரும், கூச்சம் வரும். பல்லில் இடைவெளி வந்துவிடும் என்ற அச்சம் சில பேருக்கு உண்டு. இது உண்மை இல்லை.
பற்களை முறையான கருவிகளுடன் சுத்தம் செய்வதால் இவை ஏற்படாது. பல்லின் எனாமல் பகுதியில் உண்டான எந்த கறையை அகற்றினாலும் கூச்சமோ வலியோ வராது.
பல்லின் வேர்பகுதியில் உள்ள கறைகளை அகற்றும் போது சற்று கூச்சம் வரும். அப்படி செய்யவில்லை யென்றால் அழுக்கு மென்மேலும் படிவத்தை அதிகபடுத்தி ஈறு கரைவதை அதிகப்படுத்தும்,
பல் சுத்தம் ஈறு மேல் அல்லது வெளி சுத்தம் செய்தல், ஈறு அடி அல்லது ஈறு கீழ் பகுதி சுத்தம் செய்தல் என இருவகைப்படும்.
மருத்துவரிடம் பொதுவாக 6 மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது அல்லது.
பற்களை சுத்தம் செய்ய :
• நீண்ட நாட்களாக இருக்கும் கறைகளை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
• இதனை வாங்கி வெது வெதுப்பான தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும். அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். இது துவர்ப்புத் தன்மை கொண்டது. அதிகமாக இதை நீரில் போடக்கூடாது. அப்படி போட்டால் கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.
• கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பேஸ்ட் போடாமல் பிரஷ் கொண்டு சுத்தம் செய்யும் போது பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். வருடத்திற்கு ஒரு முறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது. இதற்கென பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.