ஒற்றைத் தலைவலி நீங்க கருப்பட்டிக் காப்பி...

 ஒற்றைத் தலைவலி நீங்க கருப்பட்டிக் காப்பி...

 

தேவையான பொருட்கள்:

கருப்பட்டி - 1 மேஜைக்கரண்டி

சுக்கு  - 1/4 தேக்கரண்டி

காப்பித்தூள்  - 3/4 தேக்கரண்டி

காய்ச்சிய பால் - 1/4 கோப்பை (தேவைப்பட்டால்)

 

செய்முறை: 

1 கோப்பை தண்ணீரில் கருப்பட்டி சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி தயாராக வைத்துக் கொள்ளவும்.

அதில் சுக்குப்பொடி, காப்பி பொடி சேர்த்து  நன்கு  கலக்கவும். தேவைப்பட்டால் காய்ச்சிய பால் சேர்த்துக்கொள்ளலாம்.

இது மலச்சிக்கல் நிவாரணம் மற்றும் ஒற்றைத் தலைவலியை குறைக்க உதவுகிறது. வறட்டு இருமல் மற்றும் சளி தொந்தரவுக்கு நல்ல மருந்தாக பயன்படுத்தலாம்.