மருந்தாகும் ருத்ராட்சை
மருந்தாகும் ருத்ராட்சை
சர்வ ரோக நிவாரணி
ருத்ராட்சையைப் பாலில் போட்டு வேக வைத்து, உலர்த்தித் தூள் செய்யவும். இதில் இரண்டு சிட்டிகை அளவு தேனில் குழைத்து அதிகாலை, மாலை சாப்பிட்டு வந்தால் சகல நோய்களும் தீரும்.
உடல் எடை, கெட்ட கொழுப்பு குறைய
ருத்ராட்சையை இரவில் செப்புப் பாத்திரத்தில் போட்டு நீர் நிரப்பி வைத்து, அதிகாலையில் அந்த நீரைத் தொடர்ந்து பருகிவர உடல் எடை, கொழுப்பு குறையும்.
நுரையீரல் நோய்களுக்கு
பாலில் சுத்தி செய்த ருத்ராட்சையைத் தூள்செய்து, நல்லெண்ணெயிலிட்டு தைலமாகக் காய்ச்சி வாய் கொப்புளித்து வர சளி, ஆஸ்துமா, காசநோய் மற்றும் தொண்டையில் சதை வளர்ச்சி போன்றவை குணமாகும்.
காக்கா (கால்,கை) வலிப்பு குணமாக
ருத்ராட்சை சூரணம் 50 கிராம், வல்லாரை சூரணம் 100 கிராம் – இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் மூன்று கிராம் அளவு அதிகாலை, மாலை 90 நாட்களுக்கு சாப்பிட்டு வர, காக்காய் வலிப்பு முற்றிலும் குணமாகும்.
உடல் மெலிய
ஒரு பூண்டு, ஒரு ருத்ராட்சை இரண்டையும் தண்ணீரில் போட்டு வேக
வைத்து, ருத்ராட்சையை எடுத்துவிட்டு தண்ணீரை சாப்பிட்டுவர, 90 நாட்களில் கொழுப்பு,
உடல் எடை குறையும்.