ஜாதிக்காய் மருந்தாக பயன்படுத்தும் விதமும் சில மருத்துவ முறைகளும்!!

 ஜாதிக்காயை மருந்தாக பயன்படுத்தும் விதமும் 

சில மருத்துவ முறைகளும்!!

 

அம்மை நோய்க்கு

 அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து உணவுக்கு முன்பாக எடுத்துக் கொண்டால் அம்மை கொப்பளங்கள் குறையும் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது.

 

அஜீரணத்திற்கு

 பல் வலி உள்ள இடத்தில் 2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெய்யை தடவ வலி குணமாகும். ஜாதிக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம் இவற்றை  நன்றாக தூள் செய்து உணவுக்கு முன்னர் 2 கிராம் அளவு எடுத்து சாப்பிட அஜீரணம் குணமாகும் .

 

குடல் வாயு

 ஜாதிக்காய், சுக்கு ஓவ்வொன்றும் 20 கிராம், சீரகம் 50 கிராம் எடுத்து நன்கு தூளாக்கி வைத்துக் கொண்டு அரை கிராம் அளவு எடுத்து அதனுடன் கால் கிராம்  சர்க்கரை சேர்த்து உணவுக்கு முன்னர் சேர்த்து உண்ண குடல் வாயு குணமாகும்.

 

தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சிக்கு

 தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காய் பொடி அரை ஸ்பூன் அளவு எடுத்து, சூடான பாலில் கலந்து குடித்து வர தூக்கம் நன்றாக வரும். நரம்பு சம்மந்தமான கோளாறுகள் விலகும் . 

 

ஆண்மை குறைவிற்கு

 இரவு உறங்கும் முன்பு பாதாம் பருப்பை பாலில் அரைத்து அதனுடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து ஓரு மண்டலம் உண்டு வர நரம்புகள் வலிமை பெற்று ஆண்மை  குறைவு நீங்கி நரம்பு தளர்வு நீங்கும்.

 

விந்தணுக்களின் எண்ணிக்கையை கூட்ட

 விந்தணுக்கனின் எண்ணிக்கை குறைந்தவர்கள் ஜாதிக்காயை பாலில் கலந்து அருந்த விந்தணுக்கனின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

 

குழந்தைகளின் வயிற்றுப் போக்கை நிறுத்த

 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சிறிதளவு ஜாதிக்காயை உரசிநாக்கில் தடவ வயிற்று போக்கு நிற்கும். அதிகமாக பயன்படுத்தக் கூடாது.