தலைமுடி என்றென்றும் கருப்பாக இருக்க....

தலைமுடி என்றென்றும் கருப்பாக இருக்க.... 

நரைமுடி கருப்பாக மாற...

 

அசல் இரும்புத் துண்டை அரத்தினால் ராவி மிக நுட்பமான இரும்புப் பொடி 300 கிராம் தயாரித்து, வாயகன்ற பீங்கான் பாத்திரத்தில் வைத்து, பொடி நன்றாய் மூழ்கும் அளவு பசுவின் சிறுநீரை ஊற்றி வெயிலில் வைக்கவும். இவ்விதம் 7 நாட்கள் தினம்தோறும் புதிது புதிதாய் பசு மூத்திரம் ஊற்றி வெயிலில் வைக்கவும். அதன் பிறகு இரும்புத்தூள் பழுக்கும் வரை இரும்புச் சட்டியில் சூடாக்கி, சூடு ஆறியதும் அம்மியில் அரைக்க வேண்டும். இரும்புப் பொடிக்குச் சமமாக வாயு விடங்கம் 300 கிராம், தேன் நெய் சற்றுத் தூக்கலாகச் சேர்த்து அரைக்கவும். இந்த லேகியத்தை வேங்கை மரத்தின் வைரத்தினால் செய்யப்பட்ட சம்புடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். அதன் மூடியும் வேங்கை மரமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வருடம் அதன் உள்ளே வைத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு காலையில் 3 கிராம், மாலையில் 3 கிராம் அளவு சாப்பிடலாம். 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மயிர் நன்றாக கறுப்பாகி வளரும். ஆயுள்காலம் பூராவும் கேசம் கறுப்பாகவே இருக்கும். நல்ல பலமாகவும் இருக்கும்.