வேர்க்கடலையை ஏன் குளிர்காலத்தில் நல்லா சாப்பிடணும்

 உடல் நலம்...

 

வேர்க்கடலையை ஏன் குளிர்காலத்தில் நல்லா  சாப்பிடணும் தெரியுமா..??

 

குளிர்காலத்தில் அதிகம் விலையும் பயிர் வேர்க்கடலை,

இதை நம் முன்னோர்கள் தங்களது உணவில் குளிர்காலத்தில் அதிகம் சேர்த்து கொள்வதற்கான காரணம் இது குளிர்கால பயிர் என்பது மட்டுமல்ல இந்தக் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதினால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதும் தான்.

 

உடலை உஷ்ணமாக வைத்திருக்கும்..

வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. இதனால் குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் நமது உடல் இருக்கும். பொதுவாகக் குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல ஆரோக்கியத்துடன் செயற்படும் என்பதால் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் அதனால் எளிதாக செரிமானம் செய்ய முடியும்.

 

கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்..

வேர்க்கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை தரக்கூடும் என்று ஆராய்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்,

இதனால் பித்தக்கட்டிகள் உருவாவதற்கான அபாயம் குறைகிறது.

 

சர்க்கரை அளவை சரி செய்யும்..

வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீர் படுத்தக் கூடியது.

சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 21% வரை குறையும் என்று தெரியவந்துள்ளது.

 

சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்..

வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு சருமத்தில் எண்ணெய் பதத்தை பாதுகாக்கும்

இதனால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதை தடுக்கலாம்.

மேலும் வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் சி சத்துக்கள் சருமத்தின் பொலிவை அதிகரிப்பதுடன், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். வேர்க்கடலையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் அப்பழுக்கற்ற சருமத்தை தரக்கூடியது.

ஆகையால் குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை நாம் பெறலாம். வேர்க்கடலையை அதிகம் சாப்பிடுவதும் செரிமான கோளாறை ஏற்படுத்தி வயிற்று வலி ஏற்படச் செய்யும். ஒருவேளை உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிடுவது ஒவ்வாது என்றால் அதைச் சாப்பிட முயற்சிக்காதீர்கள். குளிர்காலத்தில் உங்களது கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் வேர்க்கடலை சாப்பிடுவதற்கான சரியான காலம் இதுதான் என்பதை மறந்து விடாதீர்கள்.