இன்சுலின் சுரக்க.. பருத்திக்கொட்டை, பாகற்காய் பலன் தரும்..

 இன்சுலின் சுரக்க.. பருத்திக்கொட்டை, பாகற்காய் பலன் தரும்..

 

கணையத்தில் சுரக்கக்கூடிய இன்சுலினைத் தூண்டுவதற்கு பல்வேறு உணவுகள் இருக்கிறது.    

 விசேசமாக சொல்லவேண்டும் என்றால் பாகற்காய். பாகற்காயை அடிக்கடி சூப் செய்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கணையம் உற்பத்தி செய்யக்கூடிய இன்சுலினை அதிகமாக சுரக்கும். இன்சுலினைத் தூண்டக்கூடிய உணவுப்பொருட்களில் கருவேப்பிலை, இலவங்கப்பட்டை, வெந்தயம், மாம்பருப்பு, ஓமம் இதெற்கெல்லாம் முக்கியமான பங்கு உண்டு. 

 

இதுமட்டுமல்லாமல் மருதம்பட்டை, ஆவாரம்பட்டை, இலவம்பட்டை, கருவேலம்பட்டை, நாவல்பட்டை இந்தப் பட்டைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும். கணையம் சார்ந்த இன்சுலினை முறைப்படுத்த, சீர்படுத்த, செழுமைப்படுத்த இந்தப் பட்டைகள் எல்லாமே நல்லது. இதெல்லாம் தொடர்ந்து எடுக்கிறபொழுது நல்ல பலன் கிடைக்கும்.

 

பருத்திக்கொட்டை..

அந்த காலகட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் இந்த நாளமில்லா சுரப்பிகளை ஒழுங்குப்படுத்தக்கூடிய தன்மை பருத்திக்கொட்டைக்கு உண்டு. கணையம் சுரக்கக்கூடிய இன்சுலினை முறைப்படுத்துவதில் பருத்திக்கொட்டைக்கு நிகர் எதுவுமே இல்லை என்று சொல்லலாம். 

 

அதனால்தான் பண்டைய தமிழ்ச்சமுதாயத்தில் ஒவ்வொரு வீடுகளிலேயுமே வாரத்தில் ஒருநாள் பருத்தி பாலை காய்ச்சக்கூடிய தன்மை இருந்தது. இன்றைக்கு எத்தனையோ பால் கிடைக்கிறது, எத்தனையோ விதவிதமான packing food எல்லாம் வந்திருக்கிறது ஆனால் பருத்திப்பால் ஒழுங்காக முறையாக கிடைத்தாலே வயிறு சார்ந்த பிரச்சனைகள், புண் ரணம் மாற்றக்கூடிய தன்மை எல்லாமே இந்தப் பருத்திப்பாலுக்கு உண்டு. ஹார்மோனைத் தூண்டக்கூடிய தன்மை பருத்திப்பாலுக்கு உண்டு. பருத்திக்கொட்டையை நன்றாக ஊறவைத்து அதை ஆட்டி பாலெடுத்து அந்தப் பாலுக்கு சமமாக தேங்காய் பால் சேர்த்து சுக்கு, ஏலக்காய் தட்டிபோட்டு சிறிது பச்சரிசி மாவையும் கரைத்து ஊற்றி இதமாக, பதமாக இந்தப் பருத்திப்பாலை செய்வார்கள். 

 

இன்றைக்கும் நீங்கள் மதுரைக்குச் சென்றால் இந்தப் பருத்திப்பாலை சாப்பிடமுடியும். இந்தப் பருத்திப்பாலைத் தொடர்ந்து சாப்பிடக்கூடியவர்களுக்கு கணையம் சுரக்கக்கூடிய இன்சுலின் பற்றாக்குறை வருவதில்லை, இன்சுலின் முறையாக சுரக்கும் இது உண்மை.

 

இன்சுலின் குறைபாட்டால் அவதிப்பட்ட அந்தக் காலத்தில், விஞ்ஞானம் வளரக்கூடிய அந்தக்காலத்தில் நவீன மருத்துவம் இன்சுலினை கொண்டுவந்தது. செயற்கையாக இன்சுலின் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. செயற்கையான இன்சுலின் எதிலிருந்து எடுக்கப்பட்டது என்றால் மாடுகளுடைய கணையத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஏனென்றால் மாடுகளின் பிரதான உணவு என்பது பருத்திக்கொட்டை. அந்தப் பருத்திக்கொட்டையைத் தொடர்ந்து மாடுகளுக்குக் கொடுத்துவந்த பொழுது மாடுகளுடைய கணையம் ஒழுங்காக இருந்தது அதனால்தான் மாடுகளுடைய கணையத்திலிருந்து இன்சுலின் எடுத்து மனிதனுக்கு அதை செயல்முறைப்படுத்திக் கொடுத்த காலம் உண்டு. அதன்பிறகுதான் human insulin என்று சொல்லக்கூடிய அந்த ஹார்மோன் கண்டறியப்பட்டது. 

 அதற்கு முன்னாள் வரையிலும் பன்றிகளிலிருந்தும், மாடுகளிலிருந்தும் கணையநீர் உறிஞ்சப்பட்டு மனிதனுக்கு செலுத்தப்பட்டது உண்மையான வரலாறு. இந்தப் பருத்திக்கொட்டையை நாம் ஏன் பழக்கப்படுத்தக்கூடாது. கணைய பற்றாக்குறை நீரை நாம் ஏன் சரிசெய்யக்கூடாது. மறுபடியும் இந்தப் பருத்திப்பால் என்பது நமது வீடுகளில் வருகிறபொழுது கண்டிப்பாக கணையம் சார்ந்த நாளமில்லா சுரப்பு கோளாறுகளை முழுமையாக ஓடஓட நம்மால் விரட்ட முடியும்.