சைனஸ் தவிர்க்க வேண்டிய உணவுகள்

 சைனஸ் பிரச்சினை இருக்கா? 

இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.!

 

உங்களுக்கு அடிக்கடி மோசமான தலைவலியுடன், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு மற்றும் முகத்தில் வலி ஆகியவை ஏற்படுகிறதா..? அது சைனஸின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.

கார்த்திகை மாதம் வந்தாலே அவ்ளோதான் ஜலதோஷம், மூக்கடைப்பு, ஆஸ்துமா இளைப்பு என அனைத்து பிரச்சினைகளும் வரிசையாக வந்துவிடும். அதிலும், குளிர் காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்சினையை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறிவிடுகிறது.

வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்கும் நோய் இது. இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேர் சைனஸால் அவதிப்படுகின்றனர் என்றும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் பேருக்கு சைனஸ் பாதிப்பு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

 

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சைனஸ் அறிகுறிகளை அதிகமாக்கும் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். வறுத்த மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகள், அரிசி, இறைச்சி மற்றும் காரசாரமான மசாலாக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். விட்டமின்-A செறிந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சைனஸ் தொற்றுக்கு எதிராக பலமான எதிர்ப்பாற்றலை உருவாக்கலாம். உணவு முறைகளில் சில முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டுமென்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பால் பொருட்கள், குறிப்பாக சீஸ், தயிர் மற்றும் ஐஸ்க்ரீமை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சாக்லெட், சர்க்கரை மற்றும் ஈஸ்ட் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் அத்தகைய உணவுகள் சைனஸில் உற்பத்தியாகும் அதிகப்படியான சளியை தூண்டுகிறது. குளிர்பானங்களுக்கு பெரிய நோ சொல்லிவிடுங்கள். குளிர்ந்த திரவங்களை எடுத்துக் கொள்ளும் போது மூக்கிற்குள் சளியின் இயக்கத்தை தடுத்து, மூக்கு பாதையின் வழியே சளியை நகர்வதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

 

வாழைப்பழம்:

வாழைப்பழம் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள் தான், வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். வெயில் காலத்தில் சாப்பிட ஏற்ற சிறந்த பழம். ஆனால் இது குளிர் காலத்தில் எதிராக மாறுகிறது. அதாவது, சளி, இருமல், ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்.

அந்த வகையில், மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கின்றனர். காரணம்; சென்னை வாசிகளின் தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன் என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

 

மாட்டிறைச்சி:

கர்ப்பிணிப் பெண்கள் நான்காம் மாதத்திலிருந்து மாட்டுக்கறி உணவை உண்ண மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப் படுகிறார்கள். மாட்டிறைச்சியில் அதிகமாக புரோட்டீன் உள்ளது. இது உடலில் சளி தேக்கத்தை அதிகமாக்கி உங்களுக்கு இருக்கும் சைனஸ் அறிகுறிகளை மேலும் கடுமையாக்கும். இதனால், சைனஸ் உள்ளவர்கள் மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்த்திடுங்கள்.

 

தக்காளி:

தக்காளிப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிரம்பியிருக்கிறது. இது, உடலில் ஹிஸ்டமைன் உற்பத்தியை அதிகரித்து அதிகளவு சளியை உருவாக்கிறது மேலும் வயிற்றில் சுரக்கும் அமிலம் தொண்டைக்கு சென்று வரும் போது, அது தொண்டையில் வீக்கத்தை உண்டாக்குவதுடன், அதில் சளியையும் ஒட்ட வைக்கும்.

 

துரித உணவுகள்

சளி, காய்ச்சலின்போது பசி எடுக்காது; சுவை தெரியாது. இதனால், வழக்கமான உணவு சாப்பிட விருப்பம் இருக்காது. இதனால், மற்ற நாள்களைவிட துரித உணவுகள் மேல் நாட்டம் செல்லும். ஆனால், துரித உணவுகளில் ஊட்டச்சத்துகள் கிடைக்காது. அதோடு கலோரிகள் அதிகம் இருக்கும். மேலும், உணவில் நிறம், சுவையைக்கூட்ட செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டிகள், மோனோசோடியம் குளூட்டமேட் (Monosodium glutamate) போன்றவை அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். இது போன்ற உணவுகளை உடல்நிலை சரியில்லாத காலத்தில் சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசத்தை அது குறைத்துவிடும்; கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் குறைத்துவிடும். எனவே, துரித உணவுகளைத் தவிப்பது சிறந்தது.

 

சர்க்கரை உணவுகள்

ரீஃபைண்டு செய்யப்பட்ட சர்க்கரை, செயற்கை சுவையூட்டிகள், பதப்படுத்தப்பட்ட பொருள்கள், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள், மிட்டாய்கள் போன்றவற்றில் சர்க்கரை அதிகமிருக்கும். இவை, சளி மற்றும் காய்ச்சலை உண்டாக்கும் பாக்டீரியாவைச் சமாளிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் குறுக்கிடும். எனவே, அதிக சர்க்கரை உட்கொண்டால், அது கபத்தை அதிகரிக்கச் செய்யும். இது, நோயை எதிர்த்துப் போராடும் வெள்ளை அணுக்களின் திறனைக் குறைத்துவிடும். மேலும், கிருமிகள் வளர வளமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். குறிப்பாக, பழச்சாறுகள் குடித்தாலும் அதனுடன் சர்க்கரை சேர்க்க வேண்டாம். இனிப்பு தேவையெனில் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இயற்கைச் சர்க்கரை மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சளிப் பிடித்திருக்கும்போது சாப்பிடலாம்.

 

ஆல்கஹால்

ஒரு பெக் ரம், பிராந்தி போன்றவற்றைக் குடித்தால், எப்பேர்பட்ட சளியும் நீங்கும் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது, குளிர்காலத்திலும் சளி பிடித்திருக்கும் நேரத்திலும் தொண்டைக்கு ஒருவகையில் இதம் கொடுப்பதுபோல இருக்கும். அது தற்காலிக நிவாரணம்தான். உண்மையில், ஆல்கஹால் பருகினால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடல் வறட்சி அதிகரித்து, சளியின் அளவோடு, காய்ச்சலும் அதிகரித்துவிடும்.

 

எண்ணெயில் வறுத்த உணவுகள்

எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளிலும், கொழுப்பு நிறைந்த உணவுகளிலும் கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கும். அவை வயிற்று உபாதைகளைக் கொடுக்கும். அதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கும். எனவே, ஃபிரைடு சிக்கன், ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ் போன்ற பொரித்த உணவுகளையும், ஜங்க் உணவுகளையும் சளிப் பிடித்திருக்கும்போது தவிர்க்க வேண்டும்.

 

குளிர்பானங்கள்

சளிப் பிடித்திருக்கும்போது வெந்நீர் அல்லது சூடான பானங்களைப் பருகினால் அதன் நீராவி மூக்கின் நாசிகளைத் திறந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கச் செய்யும். அதேநேரத்தில் குளிர்ச்சியான பானங்களைப் பருகினால் அது தொண்டைப் புண்ணை ஏற்படுத்தும் அல்லது தொண்டைப்புண் இருந்தால், அதை அதிகரிக்கச் செய்யும். எனவே, குளிர் பானங்களையும் ஐஸ்க்ரீம் போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

உடலை கதகதப்பாக வைத்திருக்கும் ஆடைகளை அணிவதும், மிதமான சூடுள்ள நீரில் குளிப்பதும் சளியிருக்கும் காலங்களில் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள உதவும்.