சர்க்கரை நோய் எதனால் வருகிறது, சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது, சர்க்கரை நோய் எதனால் வருது, சர்க்கரை நோய் எப்படி வருகிறது, சர்க்கரை நோய் எப்படி உருவாகிறது, சர்க்கரை நோய் எப்படி வரும், சர்க்கரை நோய் வருவது எப்படி

 சர்க்கரை நோய் தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்குமா?

 

நீரிழிவு எனும் இரத்த சர்க்கரை பாதிப்பு, இளைய தலைமுறையை அச்சுறுத்தும், உடல்நல பாதிப்புகளில் முதன்மையாக, இருக்கிறது.எதனால் ஏற்படுகிறது, இந்த டயாபடீஸ் எனும் இரத்த சர்க்கரை பாதிப்பு, அதனால், என்னென்ன கோளாறுகள் உடலில் ஏற்படும், என்பதைப் பற்றி, பார்ப்போம்.

இன்சுலின்

இன்சுலின் என்பது நாம் சாப்பிடும் உணவு, இரைப்பையில் நொதிக்கப்பட்டு, பல்வேறு தன்மைகளில் உருமாறி, அதில் உருவாகும், குளுக்கோஸ் எனும் சர்க்கரை, இரத்தத்தில் கலக்கிறது. இதேபோல, உடலுக்கு நலம் தரும் என்சைம்களை சுரக்கும் முக்கிய உறுப்பான கணையம், உணவை செரிக்கவைக்கும் என்சைம்களுடன், இன்சுலினையும் சுரந்து, அவற்றை இரத்தத்தில் கலக்கிறது.

இரத்தத்தில் சேரும் குளுக்கோஸ் எனும் சர்க்கரையை, உடலுக்கு தெம்பு தரும் ஆற்றலாக, சக்தியாக உருமாற்ற, இன்சுலின் அவசியம் தேவை. இதில் எங்கே, டயாபடீஸ் வருகிறது என்கிறீர்களா?

டயாபடீஸ்

டயாபடீஸ் சர்க்கரையை, உடலுக்கு தெம்பளிக்கும் சக்தியாக மாற்ற வேண்டிய இன்சுலின் செயலிழக்கும்போது, அல்லது அதன் உற்பத்தி குறையும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாமல், அவை அதிகரித்து, அதனால் உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு, பக்கவாதம் போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு, உயிரிழப்புவரை கொண்டு சென்றுவிடுகின்றன.

சராசரி அளவு

சராசரி அளவு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் எனும் சர்க்கரையின் அளவு, இரத்த ஆய்வு மையங்களில் சோதிக்கும்போது, சாப்பிடும் முன் 7 மிலி, சாப்பிட்ட பின் 11 மிலி என்ற அளவிலும் இருந்தால், இயல்பான அளவு என்று பொருள். இந்த அளவைத் தாண்டும்போது, சர்க்கரை பாதிப்பு உடலில் ஏற்பட்டு விட்டது என்று அறிந்து, அதன் அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இது போன்ற நிலைகளில், இரத்தத்தில் கலக்கும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தத் தான், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா போன்ற பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டு, அவற்றின் மூலம், சர்க்கரை அளவைக் குறைக்க, பாதிப்படைந்தவர்கள், தினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சர்க்கரை நோய் வகைகள்

உலகில் கிட்டத்தட்ட ஐநூறு மில்லியன் அதாவது, உலக மக்கள்தொகையில், பத்தில் ஒருவருக்கு, இரத்த சர்க்கரை பாதிப்பு உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதில் பத்து சதவீதம் பேர் டைப் 1 எனும் பாதிப்பிலும், மீதமுள்ள தொண்ணூறு சதவீதம் பேர் டைப் 2 என்ற பாதிப்பிலும் இருப்பதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

டைப் – 1.

டைப் – 1. இந்த பாதிப்பு பெரும்பாலும் சிறுவர், சிறுமியரிடையே அதிகம் காணப்படுகிறது. அவர்களின் உடலில் இன்சுலின் சுரப்பது முற்றிலும் தடைப்பட்ட நிலையில் ஏற்படும் இந்த பாதிப்பை சரிசெய்ய, இன்சுலினை, ஊசி மூலம் உடலில் ஏற்றி, இரத்த சர்க்கரை அளவை சமநிலைப் படுத்துகிறார்கள்.

டைப் – 2.

டைப் – 2. மிகவும் உடல் பருமனுள்ளவர்கள் மற்றும் நடுத்தர வயதுகளில் உள்ளவர்களை பாதிக்கும், இந்த குறைபாடு, இரத்தத்தில் கலக்கும் இன்சுலின் போதுமான அளவில் சுரக்காததால், ஏற்படலாம். அல்லது இரத்தத்தில் கூடுதலாக உள்ள குளுக்கோஸை, உடல் ஆற்றலாக மாற்ற இயலாத வகையில், குறைவான செயலற்ற இன்சுலின் சுரப்பால், இந்த பாதிப்பு ஏற்படுகிறது. உடல் எடைக்குறைப்பு, கட்டுப்படுத்தப்பட்ட சமச்சீரான உணவு மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம், பாதிப்பை குறைக்க முடியும். சிலர், தற்காலத்தில் இயற்கை மூலிகைகள், யோகா, மூச்சுப் பயிற்சி மூலமும் இரத்த சர்க்கரை பாதிப்பை குறைத்து வருகிறார்கள்.

டைப் – 3.

டைப் – 3. வெகு அரிதாக, இரண்டு சதவீத பெண்களுக்கு மகவை சுமக்கும்போது, இரத்த சர்க்கரை பாதிப்பு ஏற்பட்டு, குழந்தை பெற்றவுடன் இந்த பாதிப்பு, தானாக மறைந்துவிடும். ஆயினும் பிற்காலத்தில் தாய்க்கும் சேய்க்கும் மீண்டும் சர்க்கரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இரத்தத்தில் அதிகரித்த சர்க்கரை, உடலுக்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

இரத்தக்குழாய்களை சேதப்படுத்தும்.

இரத்தக்குழாய்களை சேதப்படுத்தும். இரத்தத்தில் கட்டுப்பாடற்ற அளவில் உள்ள சர்க்கரை, இரத்தக் குழாய்களின் நெகிழ்வை சேதமாக்கி, காலப்போக்கில், அவற்றை சுருங்க வைத்துவிடுகிறது. இதனால், இரத்த ஓட்டம் தடைப்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அத்துடன், மூளை, இதயம், சிறுநீரகம், கண்கள் போன்ற முக்கிய உறுப்புகளையும் செயலிழக்க வைத்துவிடுகிறது.

மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாக, மாரடைப்பு, பக்கவாதம், கோமா போன்ற பாதிப்புகள், இரத்த சர்க்கரை பாதிப்புள்ளவர்களுக்கு, ஏற்பட வாய்ப்புகள் அதிகம், என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

நரம்புகளை பாதிக்கும்.

நரம்புகளை பாதிக்கும். பல்லாண்டு காலம் உடலில் நீடிக்கும் இரத்த சர்க்கரை பாதிப்பால் ஏற்படும், மோசமான தடைபட்ட இரத்த ஓட்டத்தால், உடல் நரம்புகளின் செயல் பாதிப்படைகிறது. இவை விரல்கள், கை, கால்களில் உணர்வின்மையை ஏற்படுத்தி, அடிபட்டு காயங்கள் ஏற்படுகிறது. உணர்வில்லாததால், காயங்களில் அடிக்கடி இடித்துக் கொள்வதன் மூலம், காயங்களின் பாதிப்பு அதிகரித்து விடுகிறது.

சிறுநீரக செயல் இழப்பு

நாட்பட்ட சர்க்கரை பாதிப்பால், சிறுநீரக இரத்த நாளங்கள் பாதிப்படைகின்றன. அதனால், சிறுநீரகம், சிறுநீரை சரியாக சுத்திகரிக்க முடியாத நிலை ஏற்பட்டு, நச்சுப்பொருட்கள் சிறுநீரகத்திலேயே, தங்கி விடுகின்றன. சிறுநீரகத்தில் தேங்கும் நச்சுக்களின் அளவு அதிகரிக்கும்போது, சிறுநீரகம் செயலிழந்து விடுகிறது.

கண்பார்வை இழப்பு

நாட்பட்ட டயாபடீஸ், நுண்ணிய நரம்புகளை பாதித்து, விழித்திரையில் வீக்கம் ஏற்பட்டு, விழித்திரையின் பார்வை அடுக்குகள், பாதிப்பதால், கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது. நீரிழிவு பாதிப்புகளால் ஏற்பட்ட பார்வையிழப்பை, சரிசெய்ய முடியாதென்கிறார்கள், நிபுணர்கள்.

வயிற்று தசைப்பிடிப்பு.

நாட்பட்ட இரத்த சர்க்கரை பாதிப்பு, இரைப்பையின் நுண்ணிய நரம்புகளை பாதித்து, இரைப்பையில் நொதிக்கப்பட்ட உணவு, வெளியேறுவதில் தடையேற்பட்டு, மெதுவாக செல்லும். வயிற்றில் ஏற்படும் இந்த கோளாறால், அமிலத்தன்மை அதிகரித்து, குமட்டல், வயிறுவீக்கம் மற்றும் அடிவயிற்று வலி போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தாம்பத்ய வாழ்க்கை

சர்க்கரை பாதிப்பால் ஏற்படும், நுண்ணிய நரம்பு பாதிப்புகள் மற்றும் நரம்பியல் கோளாறுகள், பாலுறவு செயலிழப்பை ஏற்படுத்தும். இந்த கோளாறால், ஆண்களுக்கு, ஆண்மையிழப்பு ஏற்பட, மூன்று மடங்கு ஆபத்து, மற்றவர்களைக் காட்டிலும் உண்டு. பெண்களுக்கு, இணைவில் ஆர்வம் விலகி, பிறப்புறுப்பு வறண்டு, உறவில் கடுமையான வலி ஏற்படும்.

காயங்கள்

டயாபடீஸ் கோளாறால் ஏற்படும் நுண்ணிய இரத்த நாள செயலிழப்பால், உடலில் ஏற்படும் புண்கள், கை கால் மூட்டுகள், கால் மூட்டுகள், பாதங்கள் மற்றும் கணுக்காலில் ஏற்படும் காயங்கள் ஆற நீண்ட நாட்களாகின்றன. சிலருக்கு ஆண்டுக்கணக்கில் கூட, காயங்கள் ஆறாமல், மனவேதனைகளை அளிக்கலாம். இதற்கு காரணம், சர்க்கரை அளவு கூடிய உடல் திசுக்களினால், காயங்களில் இருக்கும் நுண்ணுயிர் கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து, காயங்கள் ஆறாமல், வலியையும் வேதனையையும் கொடுக்கிறது.

சரும ஆரோக்கியம்

இரத்த சர்க்கரை உடலை பாதிக்கும்போது, சருமத்தை, உடல் தோலை, வறண்டு போகச் செய்கிறது. அத்துடன் தோலில் கரும்படைகளையும் உண்டாக்கி விடுகிறது. நாட்பட்ட சர்க்கரை பாதிப்புகள், சீழ் கொண்ட கட்டிகள், கண் இமைகளில், கட்டி போன்ற வீக்கம், பாதத்தில் படை போன்ற பூஞ்சை பாதிப்புகளை ஏற்படுத்தி, பெரிதும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. சிலருக்கு, உடல் தோலில் செதில் படை போன்ற சரும பாதிப்பை ஏற்படுத்தி, உடல் வேதனயுடன் மன வேதனையையும், உண்டாக்கிவிடுகிறது.

 

 சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான மற்ற நோய்களையும் சித்த, ஆயுர்வேத முறையில் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

சர்க்கரை நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  சர்க்கரை நோய் Home Page-ற்கு செல்லவும்

சர்க்கரை நோய் Home Page