சர்க்கரை அளவு அதிகமானால்

 சர்க்கரை அளவு அதிகமானால் இதுதான் காரணம்!!

 

உடல் பருமனாக இருந்தால் நிச்சயமாக உடல் எடையை குறைக்க வேண்டும்.  இதனாலும் இரத்த சர்க்கரை அளவு சீராகும். 

 பொதுவாகவே காலை நேரத்தில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.  ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலை நேரத்தில் இரத்த சர்க்கரையின் அளவு இன்னும் அதிகரித்துவிடும்.  காலை உணவு சாப்பிடுவதற்கு முன் இந்நிலை இருக்கும்.  டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் இருப்பவர்கள் அடிக்கடி இரத்த சர்க்கரையை பரிசோதித்து கொண்டே இருப்பது நல்லது.  இதனால் அபாயகரமான பாதிப்பை தடுக்க முடியும்.  நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு ஹார்மோன் சுரப்பு காரணமாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.  உடலில் இன்சுலின் அளவை பொருத்து நீரிழிவு நோயின் தாக்கம் மாறுபடும்.