ஆண்மைக்கு நல்லெண்ணெய்

 நல்லெண்ணெய் (Gingelly Oil)


எள்ளின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் என்பதால் எள்நெய் என்கிறோம். இச்சொல் வழக்கில் திரிந்து எண்ணெய் என்றாகியது. உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் இதனை நல்லெண்ணெய் என்று அழைக்கின்றோம். இயற்கை எண்ணெய்களுள் நல்ல என்னும் அடைமொழியை பெற்ற ஒரே எண்ணெய் நல்லெண்ணெய் மட்டுமே ஆகும். தென்னிந்தியர்களின் முக்கிய சமையல் எண்ணெய்யாக பயன்பட்டு வரும் நல்லெண்ணெய் மனித நாகரிகத்தால் தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வரும் ஒரு எண்ணெய் ஆகும். சொல்லப் போனால் இது வரலாற்று காலத்துக்கு முந்திய கால கட்டத்திலேயே பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் மிகுதியாக விளையும் Sesamun Indicum என்னும் தாவரத்தின் விதைகளில் இருந்து இது எடுக்கப்படுகிறது. 


இத்தாவரம் இந்தியாவை பிறப்பிடமாக கொண்டது. சமஸ்கிருதத்தில் எள்ளை தைலம் என்று கூறுவர். அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை ஆதாரமாக கொண்ட காரணத்தினால் மருந்து நெய்களை தைலம் என்று அழைக்கின்றோம். சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் கூறப்படும் எண்ணெய்கள் யாவற்றிற்கும் எள் நெய்யே ஆதார சரக்காகும்.


நல்லெண்ணெய் குறித்த குறிப்புகள் அகத்தியர் குணவாகடம், தேரையர் தைல வருக்க சுருக்கம், தொல்காப்பியம், அதர்வண வேதம், சரக மற்றும் ஸ்சுருத ஸம்ஹிதை போன்ற மிக பழமையான நூல்களில் காணப்படுகின்றன. இது இந்தியர்களின் குறிப்பாக தென்னிந்தியர்களின் வாழ்வியல், பண்பாடு மற்றும் கலாசாரத்தோடு நெருங்கிய தொடர்புடையது எனலாம். ஏனென்றால் பிறப்பின் முதல்படியாக கருதப்படும். பெண்களின் மாதாந்திர ருது காலம் தொட்டு இறந்த பின் செய்யப்படும் நீத்தார் கடன் (பித்ரு கடன்) வரை பயன்படும் ஒரு முக்கிய எண்ணெய் நல்லெண்ணெய் ஆகும். உடலுக்கு வன்மையையும் ஆரோக்கியத்தையும் தரும் பொருட்களை பரம் பொருளாகிய இறைவனுக்கு படைத்து பின் பயன்படுத்துவது பழந்தமிழர் வழக்கமாகும். இன்றளவும் ஆலயங்களில் இறைவனுக்கு நல்லெண்ணெய் கொண்டு தைலகாப்பு செய்வது பழக்கத்தில் இருந்து வருகிறது. நான்குநேரியில் உள்ள பெருமாள் கோவிலில் முக்கிய பிரசாத பொருள் நல்லெண்ணெய் ஆகும். இங்கு பெருமாளுக்கு செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு ஒரு கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. பின் அது பிரசாதமாக வழங்கப்படுகிறது மற்றும் நாட்டுக் கோழி முட்டையை உணவாக கொடுப்பது நம் கிராம புறங்களிலிருந்து வரும் பழக்கமாகும்.


நல்லெண்ணெயின் மூலம் எள் என பார்த்தோம். எள்ளில் 48 முதல் 50 விழுக்காடு எண்ணெய் சத்தும், 21 விழுக்காடு புரதமும், 12.5 விழுக்காடு கார்போஹைட்ரேட்டும், மீதி உள்ள 16.5 விழுக்காடு copper, calcium, magnisium போன்ற தாதுக்கள் மற்றும் சக்கைப் பொருட்கள் உள்ளன. எண்ணெய் என்பது ஒரு கொழுப்பு அமிலமாகும் (fat acids). நல்லெண்ணெயில் linoleic acid, Oleic acid, Palmitic acid and stearic acid போன்ற பல கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதில் நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள் என்னும் Mono And Poly unsturaled Faly acids 80% உள்ளது. (Mono -39% and Poly -41%). குறைவான அளவு (40%) Saturaled Faly Acids உள்ளது. Mono unsturaled Fal Acids ஐ good cholesterol என்று கூறுவர், இந்த வகை Essential Faly Acids (EFA) இதயத்தில் வலு சேர்க்கும். இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும்.


இதில் கண்களுக்கு ஒளி தரும் விட்டமின் A, எலும்புகளுக்கு பலம் தரும்  விட்டமின் D, செல்களின் ஆயுளை பெருக்கி வயோதிகத்தை தள்ளி போடும் விட்டமின் E, இரத்த உறைதலுக்கு தேவையான விட்டமின் K, போதுமான அளவில் உள்ளன.
எள்ளில் கருப்பு எள்ளு, வெள்ளை எள்ளு, காட்டெள்ளு என மூன்று இனங்கள் இருப்பதாக கூறுகின்றார்கள். எள்ளின் தன்மை மற்றும் தரம் அது விளையும் நிலம் மற்றும் காலநிலையை சார்ந்துள்ளது. உலகில் இந்தியா, சீனா, அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் மிகுதியான அளவு எள் விளைகிறது. இந்தியாவில் தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் எள் விளைகிறது.


 எள் விதைகளிலிருந்து பல முறைகளில் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. பழங்காலத்தில் எள்ளுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து அல்லது செக்கிலிட்டு ஆட்டி நல்லெண்ணெய் தயாரித்தனர். இதுவே நமது புராதன முறையாகும்.
இவ்விதம் தான் தயாரிக்கப்பட்டது என்பதற்கு “ஆடிக் குடித்தடையும் ஆடும் போது இரையும்” என்ற பழந்தமிழ் கவிஞனின் பாடல் அடிகளால் அறியலாம். செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும் நல்லெண்ணெய் நல்ல நறுமணத்துடன் திகழும். கருப்பட்டி சேர்த்து ஆட்டப்படுவதால் இதன் தீய குணங்கள் முற்றிலும் ஒழிந்து நல்ல குணங்கள் மட்டுமே நிலை பெறும்.


நல்லெண்ணெயின் பண்புகள்:

 
நல்லெண்ணெய் கார்ப்பு சுவையுடையது. இது உடலுக்கு வன்மை தரும். சூட்டை தணிக்கும். கண்களுக்கு குளிர்ச்சி தரும். புத்தியை தெளிய வைக்கும். மாதருக்கு உதிர பெருக்கை உண்டாக்கும். இளமை தரும், மூட்டுக்களை வன்மை படுத்தும், 5 இந்திரியங்களையும் வளப்படுத்தும் என்று அகத்தியர் குணவாகட நூல் கூறுகிறது.

 ”புத்தி நயனக் குளிர்ச்சி பூரிப்பு மெய்ப்புளகஞ்
சத்துவங் கந்தி தனியிளமை மெத்தவுண்டாங்”

என்ற பாடல் அடிகளால் அறியலாம். இன்றைய நவீன ஆராய்ச்சிகள் இவற்றை மெய்விப்பவனாக உள்ளது.

நல்லெண்ணெய்க்கு Anti inflammatory, Emmenagogue, Anti - Atherosclerosis,  Anti -Oxidanl, Slimulanl, Tonic, Diuretic, Laxative and Emollient  போன்ற செய்கைகள் இருப்பதாக நவீன ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும் இது இரத்தத்தில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது.  கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ABCA 1, ABC 2, APOE,LCAT And CYPTA 1 போன்ற ஜீன்களின் மேல் ஆதிக்கம் செலுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்புகளால் ஏற்படும் Cronin inflomation -ஐ தடுப்பதன் மூலம் Atherosclerosis ஏற்படுவதை தடுக்கிறது.

மருத்துவ பயன்கள்:

 
1. எண்ணெயுடன் சம அளவு கரிசாலை சாறு கலந்து காய்ச்சி மணல் பதத்தில்  வடித்து 3to 5ml அளவு  இருவேளை உண்டு தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வர மூடி உதிர்தல், இளநரை மாறும். ஒரு வேளைக்கு  மட்டும் உண்டு வர Hypo - Thyroidism கட்டுப்படுத்தும்.


2. எண்ணெயுடன் எருக்கிலை சாறு, வாத மடக்கி சாறு, முடக்கறுத்தான் சாறு சம அளவு சேர்த்து கருஞ்சீரகம், கார்போகரிசி, திரிகடுகு, ஏலம், சீரகம் போன்ற கடை மருந்துகள் போட்டு காய்ச்சி வலியுள்ள இடங்களில் தேய்த்து வர வலி குணமாகும்.


3. நல்லெண்ணெயில் வாரம் இருமுறை தலை முழுகி வர உடல் சூடு தணியும்.


4.மூல நோய் உள்ளவர்கள் நல்லெண்ணெயை உணவில் சேர்த்து உண்டு வர அது கட்டுப்படும்.


5.நல்லெண்ணெயுடன் சம அளவு காட்டு நெல்லிக்காய் சாறு, கீழாநெல்லி சாறு, கற்றாழை சாறு, கரிசாலை சாறு சேர்க்கவும்.  சிறிதளவு ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து எண்ணெயில் கலந்து காய்ச்சி எடுத்து கொள்ளவும். இதில் தலை மூழ்கி வர தலைவலி, மயக்கம், உட்சூடு, தலைச்சுற்று மாறும், Hypertension கட்டுப்படும்.


6. மாத விலக்கு காலத்தில் நல்லெண்ணெயுடன் நாட்டுக் கோழி முட்டை சேர்த்து உண்டு வர  கர்ப்பபை பலப்படும். மாதாந்திர ருது சீர் படும். PCOD போன்ற நோய்கள் ஏற்படாது.


7. கற்றாழை சாறு - 1 பங்கு, இஞ்சி சாறு -1/4  பங்கு, வெள்ளைப் பூண்டு சாறு - 1/4 பங்கு,  சர்க்கரை தேவையான அளவு சேர்த்து காய்ச்சவும். பாகுபதம் வந்தவுடன் சிறிதளவு நல்லெண்ணெய்  சேர்த்து கிண்டி வைத்து கொள்க. இந்த லேகியத்தை உண்டு வர சூதக வலி என்னும் Dysmenorrhea, சூதக கட்டு Amenorrhea போன்ற கருப்பை நோய்களும், மூலம், பவுத்திரம் போன்ற ஆசனவாய் நோய்களும் குணமாகும்.


8.எள், நல்லெண்ணெய், அரிசி, புளி, கடுகு கொண்டு தயாரிக்கப்படும் எள்ளோதனம் என்னும் ‘எள் சோறு’உண்டு வர உடல் பருக்கும், ஆண்மை பெருகும். உடல் இளைத்தவர்களுக்கு மிகவும் பயனுள்ள உணவாகும்.

அல்லது ஏதும் இல்லாதது
நல்லது மட்டும் உள்ளது
ஆதியோர் கண்ட எண்ணெய்
அதுவே உண்ணும் எள்நெய்

நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்
நிறைவான பல வைட்டமின்கள்
நிறைய உள்ளது எள் நெய்யில்
 உணவுக்கு சுவை ஊட்டும்
உடலுக்கு ஒளி ஊட்டும்
மாந்தர் சூதக நோய்கள்
மாந்தர் இதய நோய்கள்
எல்லாம் ஒழியும் எண்ணெய்யில்
என்றும் உண்போம் எள்நெய்யில்

”இளைத்தவனுக்கு எள்ளு
கொழுத்தவனுக்கு கொள்ளு”
என்ற சொல்லை நினைவில் கொள்ளு

ஆயுள் காரகன், அவன் பேர் சனி
அவருக்கு பிடித்தது எள் தீனி
ஆழமான யோசனை பண்ணு
ஆயுளை வளர்க்க தினம் திண்ணு

குளித்திட குறையும் உட்சூடு
பூசிட மாறும் மூட்டு நோக்காடு
தினமும் அளவோடு சேர்ப்போம்
தீதின்றி வளமோடு வாழ்வோம்......


அனைத்து விதமான ஆண்மைக் குறைவு பிரச்சினைகளையும் பக்க விளைவுகள் இல்லாமல் நிரந்தரமாக சரி செய்ய எங்கள் K7 HERBO CARE-ஐ தொடர்பு கொள்ளவும்

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

ஆண்மை குறைவு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  ஆண்மைக் குறைவு Home Page-ற்கு செல்லவும்

ஆண்மை குறைவு Home Page