சர்க்கரை நோய் பழங்கள்
சர்க்கரை வியாதி
இருக்கறவங்க இந்த 10 பழங்களை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்...
பழங்களும் சர்க்கரை நோயாளிகளும்
பொதுவாகவே
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மருத்துவர்களிடம் செல்லும்போது டயபட்டீஸ் மெலிட்டஸ்
என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அதாவது உடலில் இன்சுலின் சுரப்பு குறைவாக
இருந்தாலோ இல்லை எனில் இன்சுலின் உற்பத்தி குறைவதாலோ அல்லது சுரக்கும் இன்சுலினை
உங்கள் உடல் ஏற்றுக் கொள்ளாமல் போவதும் தான் இந்த பிரச்சினை. இதிலும் சிலருக்கு இரத்தத்தின்
சர்க்கரை அளவு மிக அதிகமாக ஆகும்போது, உடலில் உள்ள செல்களில் இரத்த சர்க்கரை அளவு
சேமிக்கப் பட்டிருக்காது. இந்த கட்டத்தில் மருத்துவர்கள் மிக உறுதியாக மேற்கத்திய
டயட் முறைகளைப் பின்பற்றச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.
பல்வேறு அறிவுறுத்தல் மற்றும்
ஊட்டச்சத்து நிபுணர்கள் இந்த பிரச்சினையை சரிசெய்ய ஒரு நாளைக்கு குறைந்தது 4 முதல்
5 பவுல் அளவுக்கு பழங்களை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். பொதுவாக சர்க்கரை
நோயாளிகள் பழங்களே அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்வார்கள். அப்போ
என்னதான் செய்வது என்று குழப்பமாக இருக்கிறதா? கவலையை விடுங்க... இந்த 10 பழங்களை
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
செர்ரி வகை பழங்களில் குளுக்கோஸின்
அளவு வெறும் 20க்குள் தான். அதிலும் சில வெரைட்டிகளில் இன்னும் குறைவு. அதனால்
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக இது இருக்கும். இந்த வகை
பழங்களைப் பொருத்தவரையில், ஸ்நாக்ஸ்க்கு பதிலாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும்
சாப்பிடலாம்.
ஆப்பிளில் நிறைய ஆன்டி
ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. அதனால் இது உடலில் கொலஸ்ட்ராலைத் தங்கவிடாமல்
பார்த்துக் கொள்கிறது. கொலஸ்டிராலின் அளவைக் குறைக்கவும் செய்கிறது. ஜீரண
மண்டலத்தைச் சுத்தம் செய்து நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. ஆப்பிளில்
உள்ள ஊட்டச்சத்துக்கள் ஜீரணத்துக்கு உதவி செய்து, கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
ஸ்டார் ஃபுரூட் நிச்சயம் நீங்கள் சாப்பிட்டிருப்பீர்கள். கிட்டத்தட்ட இது நாவல் பழங்களைப் போன்று சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த பழமாகப் பரிந்துரை செய்யப்படுகிறது. இது இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. முக்கியமாக, உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை ஏதேனும் இருக்குமானால், போதிய அளவு உடற்பயிற்சி செய்வது மிக அவசியம்.
அன்னாசிப்பழம் சர்க்கரை
நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று தான். இதில் நிறைய ஆன்டி- வைரல், ஆன்டி
- பாக்டீரியல் மற்றும் ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் நிறைந்திருப்பதால்
கொஞ்சமும் யோசிக்காமல் சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை
கூட எடுத்துக் கொள்ளலாம்.
மிக அதிக அளவில் வைட்டமின்-சி
நிறைந்த சிட்ரஸ் பழங்களில் ஒன்று தான் ஆரஞ்சு பழமும் கூட. அதனால் தினமும் கூட
தாராளமாக சர்க்கரை நோயாளிகள் இந்த ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டு வரலாம். ஆரஞ்சுப்
பழத்தில் பல வகைகள் வந்துவிட்டன. ஆனால் நாட்டு ஆரஞ்சு, கமலா ஆரஞ்சுப் பழங்களை
வாங்கி உண்பது இன்னும் சிறந்தது.
இந்த சிவப்பு முத்துக்கள்
அடங்கிய அற்புதக் கனி சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள்
வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதோடு உடலில் உள்ள இரத்தத்தைச்
சுத்தப்படுத்தி கழிவுகளை வெளியேற்றும். புதிய இரத்த உற்பத்தியை அதிகப்படுத்தும்,
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் மிக அதிக அளவில் இந்த மாதுளைப் பழத்தை
தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு வரலாம்.
பொதுவாகவே பப்பாளி மிக அதிக
இனிப்புச் சுவையுடைய பழம் என்றும் அதனால் சர்க்கரை நோயாளிகள் பப்பாளி எடுத்துக்
கொள்ளக்கூடாது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் சர்க்கரை
வியாதி உள்ளவர்கள் மிக அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டிய பழமே பப்பாளி தான். ஆம்.
பப்பாளியில் மிக அதிக அளவில் உயர்ந்த வைட்டமின்களும் மினரல்களும் இருக்கின்றன.
இரத்த சர்க்கரை அளவைக்
கட்டுக்குள் வைத்திருப்பதில் கொய்யாப்பழத்திற்கு இணை கொய்யா தான். சர்க்கரை நோய்
உள்ளவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயமே மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்
கொள்ள வேண்டியது தான். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் கொய்யாப்
பழத்திற்கு சிறந்த பங்குண்டு. அதோடு கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு குளுக்கோஸ்
மட்டுமே உள்ளது. அதிக அளவில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்திருக்கிறது. அதிக
நார்ச்சத்து கொண்ட பழங்களில் கொய்யாவும் ஒன்று.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கொஞ்சமும் யோசிக்காமல் சாப்பிடுகிற ஒரே பழமாக, இருப்பது இந்த நாவல் பழம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இந்த நாவல் பழத்தின் கொட்டை சர்க்கரை நோயாளிகளுக்கான அருமருந்தாகப் பயன்படுகிறது.
கிவி பழம்
நிறைய ஆராய்ச்சிகள் முன்வைத்த கருத்து இது. கிவி பழத்தை சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட்டு வந்தால் அது அவர்களுக்கு மிகச் சிறந்த பலனைக் கொடுக்குமாம். மிகவும் பாசிட்டிவ்வான கருத்துக்களே கூறப்படுகின்றன. மேலும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.
சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான மற்ற நோய்களையும் சித்த, ஆயுர்வேத முறையில் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,
K7 Herbo Care,
13/A, New Mahalipatti Road,
Madurai-625001.
CELL & Whatsapp 1: +91-9629457147
CELL & Whatsapp 2: +91-9025047147
சர்க்கரை நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, சர்க்கரை நோய் Home Page-ற்கு செல்லவும்
…
சர்க்கரை நோய் Home Page