பக்கவாதம் உணவுகள், paralysis cure food, stroke cure foods

 பக்கவாதம் ஒரு முறை வந்த பின் எந்த உணவுகளை சாப்பிடலாம்?

 

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். அதிலும் நமது இதயம் மற்றும் இரத்த குழாய்களின் ஆரோக்கியத்திற்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் அவசியம்.

 

சரியான ஊட்டச்சத்துக்கள் இன்மையால் நமக்கு பக்கவாதம் மற்றும் ஆரோக்கியக் குறைபாடு ஏற்படும் ஆபத்து இருக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே ஆரோக்கியமான உணவுகள் உங்களை பக்கவாதத்திலிருந்து காப்பாற்றுகிறது என்றே கூறலாம். ஒரு முறை நீங்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் மறுபடியும் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.

 

இதை தடுக்க ஒரே வழி உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும். உடற்பயிற்சி, உடல் எடை பராமரிப்பு, புகைப்பிடிக்காமல் இருத்தல் மற்றும் ஆல்கஹால் தவிர்த்தல் போன்றவை உங்களுக்கு பக்கவாதம் வரும் அபாயத்தை குறைக்கிறது என்கிறார்கள். க்ளீவிலேண்டு கிளினிக் ஆய்வு கூறுகிறது. எனவே பக்கவாதம் வந்தவர்கள் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள், சர்க்கரை, கொலஸ்ட்ரால் மற்றும் சேச்சுரேட்டு கொழுப்பு உணவுகள் போன்றவற்றை தவிருங்கள்.

 

டயட் பரிந்துரை

#பக்கவாதம் வந்த பிறகு உங்கள் இதயம் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்க சில உணவுப் பழக்கத்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  

#அதன் படி க்ளீவிலேண்டு கிளினிக் கருத்துப்படி தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.  

#பழங்கள் மற்றும் காய்கறிகள் பக்கவாத நோயாளிகளுக்கு நிறைய நன்மைகளை தருகிறது. இதில் நார்ச்சத்துகள் மட்டும் இல்லாமல் நிறைய ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருப்பது நிறைய இதய ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

#நேஷனல் ஸ்டோக் அசோசியேஷன் படி சிட்ரஸ் பழங்கள் மற்றும் பிரக்கோலி போன்றவை பக்கவாதத்தை தடுக்கக் கூடியதாக உள்ளது. அதே மாதிரி தானியங்களில் நிறைய நார்ச்சத்துக்கள், விட்டமின்கள், மினரல்கள் உள்ளன.

 

அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள்

இந்த விட்டமின்கள் மற்றும் மினரல்கள் பக்கவாதம் வராமல் தடுக்க உதவுகிறது. இதில் போலிக் அமிலம், கால்சியம், விட்டமின் பி6 மற்றும் பி12 மற்றும் பொட்டாசியம் போன்றவை பக்கவாதம் வராமல் தடுக்க உதவும் ஊட்டச்சத்துக்கள்.

இந்த ஊட்டச்சத்துக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகளவு இருப்பதால் மறுபடியும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

நேஷனல் ஸ்டோக் அசோசியேஷன் ரிப்போர்ட் படி போலிக் அமிலம் அல்லது விட்டமின் பி பற்றாக்குறை நிறைய பேரிடம் இருக்கிறது இதுவே பக்கவாதம் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

எனவே இந்த விட்டமின்கள் அடங்கிய வாழைப்பழம், பயிறு வகைகள், தானியங்கள், மீன்கள் போன்றவற்றை சாப்பிடுங்கள். சில நேரங்களில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் விட்டமின் மாத்திரைகளைக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

 

மத்திய தரைக்கடல் உணவுப் பழக்கம்

மெரிடேரியன் டயட் ஒரு ஆரோக்கியமான உணவுத் திட்டம் ஆகும். அதிலும் பக்கவாத நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த முறை.

இது 60% வரை பக்கவாதம் வரும் அபாயத்தை குறைக்கிறது.

ஏனெனில் இந்த டயட்டில் ஆரோக்கியமான எண்ணெய்களான ஆலிவ் ஆயில், மீன்கள், கொஞ்சம் கொலஸ்ட்ரால் உணவுகள், சேச்சுரேட்டு உணவுகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதே மாதிரி பழங்கள், காய்கறிகளான கேரட், ப்ளூ பெர்ரி, திராட்சை போன்றவைகளும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீன்கள், பாலசெமிக் வினிகர், கேனோலா ஆயில் போன்றவைகளும் சேர்க்கப்படுகின்றன.

 

ஏற்ற உணவுகள்

#பக்கவாத நோயாளிகள் ஒரு வித்தியாசமான உணவு முறையை கையாள வேண்டியிருக்கிறது.

#பக்கவாதம் வந்தவர்களால் உணவை மென்று சாப்பிடுவது கடினமாக இருக்கும்.

#எனவே இவர்களுக்கு நீர்ம வடிவில் கூலாக, ஜூஸாக உணவை வழங்கலாம்.

#அதே மாதிரி இறைச்சி போன்றவற்றை அரைத்து கொடுக்கலாம்.

#வலுவில்லாத மென்மையான உணவுகள் ஏற்றதாக இருக்கும்.

#திரவ வடிவில், ஈரமான உணவுகள், மென்மையான ஸ்நாக்ஸ் வகைகள் போன்றவற்றை நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளலாம்

 

பக்கவாதத்தை முழுமையாக குணப்படுத்த பழையபடி சராசரி  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி ஆரோக்கியமாக வாழ, சிகிச்சை மேற்கொள்ள எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...

(குறிப்பு: 60 வயதிற்கு மேற்பட்டவர்களை சிகிச்சைக்கு எடுத்துக் கொள்வதில்லை)

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

பக்கவாதம் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  பக்கவாதம் Home Page-ற்கு செல்லவும்

பக்கவாதம் Home Page