சர்க்கரை நோய்க்கு ஆவாரம் பூ சாப்பிடலாமா, ஆவாரம்பூ சர்க்கரை நோய்

 சர்க்கரை நோயா? எப்பவும் ஆரோக்கியமாக இருக்க ஆவாரை சாப்பிடுங்க!

 

உலகை அச்சுறுத்தி வரும் தீரா நோய்களில் நீரிழிவுக்கு தனி இடம் உண்டு. நீரிழிவு வந்தால் அதை குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். பலரும் செய்யும் தவறுகள் இதை கட்டுப்படுத்தவும் தவறிவிடுவதுதான்.


நீரிழிவை கட்டுப்படுத்த மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள் என்று பலவும் இருந்தாலும் கூட உணவு வகைகளிலும் கட்டுக்கோப்பாக இருக்கவேண்டும். அதோடு மருந்தே உணவாய் இருக்ககூடிய உணவு வகைகளையும் தவறாமல் எடுத்துகொள்ளவேண்டும். அந்த வகையில் ஆவாரை அற்புத மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து என்றே சொல்லலாம். ஆவாரை குறித்தும் நீரிழிவுக்கும் தரும் பலன்களை குறித்தும் பார்க்கலாம்.

ஆவாரை

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்ற பழமொழியை முன்னோர்கள் சொல்வார்கள். ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவக் குணங்களைகொண்டவை. உடலில் அதிகமாகும் சூட்டை குளிர்ச்சிபடுத்த உதவும். உடலில் உச்சந்தலையில் சூட்டை உணராமல் இருக்க ஆவார இலையை தலையில் போட்டால் போதுமானது. உச்சந்தலையில் சூடு இறங்காது. வறண்ட நிலங்களிலும் துளிர்விட்டெழும் ஆவாரை.

இதன் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது. ஆவாரை துவர்ப்புச்சுவையைக் கொண்டிருக்கிறது. அதனால் தான் ஆவாரை இருந்தால் சாவும் நெருங்காது அதாவது நோயால் நெருங்காது என்றார்கள் முன்னோர்கள்.

​என்ன இருக்கு

நீரிழிவுக்கு சித்தமருத்துவத்தில் மருந்தாக தருவது ஆவாரை தான். இதை நவீன ஆய்வுகளும் ஒப்புகொண்டுள்ளன. ஆவாரையில் ஆன்டிகிளைசெமிக் இருப்பதை உறுதி செய்துள்ளன. தாவரங்களில் காணப்படகூடிய நன்மை தரும் ப்ளேவனாய்டுகள், டானின்கள். அவரோல், அவாரோஸைடு அதிகம் இருக்கிறது. ஆவாரையில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட் குறித்த ஆய்வுகளும் ஆவாரையில் இருக்கும் நன்மைகளை உறுதி செய்துள்ளன.

மாதவிடாய் வயிறு வலி

மாதவிடாய் காலத்தில் பெண்கள் அடி வயிறு வலியை அதிகம் சந்திப்பதுண்டு. அவர்கள் ஆவாரை இலையை எடுத்து வயிற்றில் கட்டிகொள்ள வேண்டும். மாதவிடாய் நாட்களில் தினமும் இரவு நேரத்தில் இப்படி கட்டிகொண்டால் வயிறு வலி நிச்சயம் குறையும்.

அதிக இரத்த போக்கு இருப்பவர்கள் ஆவாரை பட்டையை நிழலில் உலர்த்தி பொடித்து கொண்டு வைத்துகொள்ளவேண்டும். இதை மாதவிடாய்க்கு முன்பு 15 நாட்களில் ஒரு டம்ளர் பாலோடு கால் டீஸ்பூன் கலந்து கொடுத்தால் அதிக இரத்த போக்கு குறையும். வெள்ளைப்படுதல் அதிகம் உணர்பவர்கள் ஆவாரம் பிசினை பாலில் அல்லது மோரில் கலந்து குடித்தாலும் நிவாரணம் கிடைக்கும்.

​நீரிழிவுக்கு ஆவாரை

நீரிழிவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது ஆவாரம் பூ. மேலும் நீரிழிவால் உண்டாகக் கூடிய தாகம், உடல் சோர்வு, தொண்டை வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழிதல் போன்ற உபாதைகளை கட்டுப்படுத்துகிறது ஆவாரை பூ, இலை, வேர், பட்டை, பிசின் அனைத்தையும் ஒன்றாக்கி அதனுடன் நாவல் பட்டை, கொன்றைபட்டை, மருதம், கோஷ்டம் கொண்டு தயாரிக்கப்படும் ஆவாரை நீர் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதோடு நீரிழிவால் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்துகிறது.

சுருக்கமாக சொல்வதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது ஆவாரை குடிநீர் என்று சொல்லலாம்.

சரும நோய்க்கு

சருமத்தில் உண்டாகும் நோய்க்கு ஆவாரம் பட்டையுடன் பால் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து குளித்துவந்தால் எப்பேர்பட்ட நோயும் குணமாகும். நாட்டுமருந்து கடைகளில் ஆவாரை எண்ணெய் கிடைக்கிறது. இதையும் பயன்படுத்தலாம். குளியல் பொடிகளை தயாரிக்கும் போது ஆவாரம் பூக்களை காயவைத்து சேர்க்கலாம். இவை உடலில் வியர்வை நாற்றத்தை போக்கும் என்பதோடு உடலுக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

உடல் உஷ்ணத்தை குறைக்ககூடிய ஆவாரை கூந்தலுக்கும் வலுகொடுக்கும். அதனால் தான் முன்னோர்கள் மூலிகை குளியல் பொடியில் ஆவாரையை முதன்மையாக சேர்த்து பயன்படுத்தினார்கள். குழந்தைகளுக்கு வியர்க்குரு, கோடையில் உடல் எரிச்சலாகாமால் இருக்க ஆவாரை இலையை அரைத்து உடலில் பூசி குளிக்க வைத்தார்கள்.

சிறுநீர் கடுப்பு

கோடையில் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று சிறுநீர் கடுப்பு அல்லது சிறுநீர் போகும் போது எரிச்சல். கைப்பிடி அளவு ஆவாரம் பூவை எடுத்து இரண்டு டம்ளர் நீரிலிட்டு கொதிக்க வைத்து இனிப்புக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். வாரத்துக்கு மூன்று நாள் இதை குடித்துவந்தால் சிறுநீர் கடுப்பும் எரிச்சலும் விரைவில் மறையும்.

ஆவாரை பூவை குடிநீராக, துவையலாக, பருப்பு கலந்து கூட்டாக செய்து சாப்பிடலாம். பாசிப்பருப்புடன் வேகவைத்து நெய் கலந்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆவாரம் பூக்களை கொண்டு தேநீர் தயாரித்து குடிக்கலாம். ஆவாரம் பூவில் ரசம், குழம்பு வைத்தும் சாப்பிடலாம். ஆவாரம் பூக்களை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்து கொண்டும் பயன்படுத்தலாம்.

ஆவாரை உடலுக்குள் செல்ல செல்ல உறுப்புகளை பலப்படுத்தும் என்கிறது சித்தமருத்துவம். பக்க விளைவில்லாமல் ஒன்று உடலுக்கு நல் மருந்தாக மட்டுமல்ல ருசியான உணவாகவும் இருக்கிறது என்றால் அது ஆவாரைதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 

 சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான மற்ற நோய்களையும் சித்த, ஆயுர்வேத முறையில் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

சர்க்கரை நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  சர்க்கரை நோய் Home Page-ற்கு செல்லவும்

சர்க்கரை நோய் Home Page