ஆரஞ்சுப் பழம்...

குளிர்காலத்தில் சாப்பிடவேண்டிய பழம் இதுதான் 

ஆரஞ்சுப் பழம் என்று சொன்ன உடனே நம் நினைவிற்கு முதலில் வருவது அதன் புளிப்பு சுவை தான். 

ஆனால் குளிர் காலத்தில் தான் ஆரஞ்சு பழம் அதிக இனிப்பு சுவையுடன் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா…??? 
ஆம், 
உண்மை தான். 

பொதுவாக எந்தெந்த சீசனில் எந்தவித பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைக்கிறதோ அதனை நாம் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

குளிர்காலத்திற்கு ஏற்ற பழம்

அந்த வகையில் ஆரஞ்சு பழம் குளிர் காலத்திற்கு ஏற்ற ஒரு ஆரோக்கியமான பழம். குளிர் கால நோய்களிடம் இருந்து நம்மை காத்து கொள்ள ஆரஞ்சு பழம் பெரிதும் உதவுகிறது. ஆரஞ்சுப் பழத்தில் கமலா ஆரஞ்சு அட்டகாசமான சுவை கொண்டது. ஆரஞ்சுப் பழ வகைகளிலே பலராலும் விரும்பி சாப்பிடப்படுவது கமலா ஆரஞ்சு. குளிர் காலத்தில் குளிர்ந்த நீர் மற்றும் பழங்களை சாப்பிட்டால் சளி பிடித்து விடும் என்ற பயத்தில் பலரும் பழங்கள் சாப்பிடுவதையே தவிர்த்து விடுகின்றனர். ஆனால் இதன் உண்மை காரணம் என்னவென்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். கடைகளுக்கு செல்லும் போது எப்போதும் வாங்கி உண்ணும் ஆரஞ்சு பழங்களை வாங்கி சாப்பிடலாமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

குளிர் காலத்தில் எளிதாக கிடைக்கும் இந்த ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. குளிர் கால நோய்களிடம் இருந்து நம்மை காக்கும் தன்மை இந்த ஆக்ஸிஜனேற்றிகளுக்கு உண்டு. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் குளிர் காலம் பற்றிய எந்த வித பயமும் இல்லாமல் இருக்கலாம்.

அடுத்ததாக குளிர் காலம் வந்துவிட்டால் போதும். நம் சருமம் மற்றும் உதடுகள் வறண்டு காணப்படும். இதற்கு முக்கியமான காரணம் குளிர் காலத்தில் ஏற்படும் வெப்பநிலை குறைவு. அதாவது நம் உடலின் வெப்பநிலை அதிரடியாக குறைந்து விடுகிறது. அது மட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுகிறது.

நல்ல நிறமாக வேண்டுமா?

இந்த அழகு சார்ந்த பிரச்சினைக்கும் ஆரஞ்சு பழம் ஒரு அருமையான தீர்வாக அமைகிறது. வறண்ட சருமத்தை போக்கி தோலுக்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு தோலின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. நல்ல கலராக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தினமும் ஒரு கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக மாற்றத்தை காணலாம்.

ஆரோக்கியத்தையும், அழகையும் கூட்டுகிறது 

மேலும் சிறுநீரக கற்கள், கண் சம்பந்தமான நோய்கள், மாலை கண் நோய், இதய நோய், PCOS பிரச்சினை உள்ளிட்ட அனைத்திற்கும் ஆரஞ்சு பழம் ஒரு மாமருந்து. ஆரஞ்சு பழத்தின் விலையும் அவ்வளவு அதிகம் கிடையாது. எனவே மலிவாக கிடைக்கும் இந்த ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு நம் ஆரோக்கியம் மற்றும் அழகை கவனித்து கொள்வோம்.

பழத்தின் உயிர்ச் சத்துக்கள் கிடைக்காது

நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் முடிந்த வரை பழங்களை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்ப்பது ஆகும். ஏனெனில் ஃபிரிட்ஜில் வைக்கப்படும் பழங்கள் வாடாமல் இருக்கும். ஆனால் அவற்றில் இருக்கும் உயிர் சத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விடும். எனவே பழங்களை அறை வெப்பநிலையில் வைத்து சாப்பிட முயற்சி செய்யுங்கள்.