பச்சையான வேர்க்கடலையை ஊற வைத்து உண்ண தொடங்குங்கள்..

பச்சையான வேர்க்கடலையை ஊற வைத்து உண்ண தொடங்குங்கள்..

பாதாம், பிஸ்தா என்ற மேல் தட்டு மக்களின் உணவுகளை போல் இல்லாமல் ஏழைகளுக்கும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பல கனிமச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு பொருள் வேர்க்கடலையாகும். அது மட்டுமன்றி பாதம், பிஸ்தா போன்றவற்றை விட அதிக கனிமச்சத்துக்கள் கொண்டது. மாமிசம், முட்டை போன்றவற்றை விட புரதச் சத்து இதில் மிகுதியாக உள்ளது.

உடலுக்கு தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள், மாங்கனீஸ்  ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன.

ஒரு கைப்பிடி வேர்க்கடலையை இரவில் ஊற வைத்து காலையில் நன்றாக கழுவி விட்டு தினமும் உட்கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஊற வைக்கும் பொழுது அதன் பித்த தன்மை குறைவதோடு, அப்படியே பச்சையாக உண்பதால் சத்துக்கள் அழிவில்லாது முழுதுமாக உடலுக்கு சென்று சேரும்.

ஊற வைத்த வேர்க்கடலை-யால் ஏற்படும் நன்மைகள்:

இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய பிரச்சினைகளை தடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சீர் கேடுகள், மாதவிடாய்காலத்தில் தோன்றும் வயிற்று வலிகள், கர்ப்பப்பை கட்டிகள் போன்றவற்றை சீராக்கும்.

எலும்பு பலம் பெறுவதால் முதுகுவலி, மூட்டுவலி, கழுத்து வலி போன்றன நீங்கும். புற்றுநோய் களங்களை அழிக்கும் வல்லமை கொண்டது.

கெட்ட கொழுப்பை கரைப்பதோடு உடல் பருமனையும் குறைக்கும்.

நார்ச்சத்துக்கள் நிரம்ப இருப்பதால் மலச்சிக்கல் நீங்கி வயிறு பிரச்சினைகள் முழுதுமாக நீங்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம் கிடைப்பதோடு, பிரசவமும் சுகமாகும்.

இதில் உள்ள எண்ணெய் சத்து மற்றும் வைட்டமின் E சருமத்துக்கு பொலிவை தரும்.

உடலின் எதிர்ப்புசக்தியை மேம்படுத்தி நோய் தொற்றில் இருந்து உடலை காக்கின்றது.

இளநரை, முடி கொட்டுதல் போன்றவற்றை தடுத்து முடி ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது.

சுறுசுறுப்பான மூளை திறனை ஊக்குவிக்கிறது. மாணவர்களுக்கு மி்க  உகந்தது.

குடற்புண் உள்ளவர்களுக்கு நல்ல உணவு,  நீரிழிவை கட்டுப்படுத்தும்.

ஹோர்மோன் சீரற்ற தன்மையை போக்கும்.  

ஆரோக்கியமற்ற உணவுகளை முழுதுமாக தவிர்த்து, ஆரோக்கிய உணவுகளோடு நிலக்கடலையையும்  நாம் உட்கொண்டு வருவோமேயானால் பூரண நலம் பெறுவோம்.