பப்பாளி இலையில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்...

பப்பாளி இலையில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் …

நாம் சாப்பிடும் பழங்களில் மட்டுமல்ல அதன் இலை, பூ, பட்டை, வேர் இது போன்ற மற்ற பாகங்களிலும் அதிகமாக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில், பப்பாளி இலை முக்கிய பங்கினை வகிக்கிறது...

பப்பாளி இலையில் ஃபைட்டோ நியூண்ட்ரியண்டுகள், என்சைம் போன்ற நிறமிகளும், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்களும் அதிகமாக உள்ளது.

எனவே பப்பாளி இலையில் ஜூஸ் செய்துக் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.

1. நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில், இரத்தத் தட்டுகள் குறைந்தால், அது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். இதனால் பப்பாளி இலைச் சாறை குடித்து வந்தால், இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.

2. பப்பாளி இலைச் சாறு நமது உடலில்  கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

3. நமது உடம்பில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் எதிர்த்து போராடி, மலேரியா, டெங்குக் காய்ச்சல், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

4.. அன்றாடம் நாம் பப்பாளி இலைச் சாற்றினைக் குடித்து வந்தால், அது நமது உடலின் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்து, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

5.. வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை, அலர்ஜி போன்ற சருமப் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.