சருமப் பிரச்சனைகளை குணமாக்கும் ஆலிவ் ஆயில்.:

சருமப் பிரச்சனைகளை குணமாக்கும் ஆலிவ் ஆயில்.:

* ஆலிவ் ஆயிலில் நம் உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்து மற்றும் தாதுச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

* தினமும் ஆலிவ் ஆயிலை 2 டேபிள் ஸ்பூன் அளவு நெய்க்குப் பதிலாக சாப்பிட்டு வரலாம் அல்லது உணவு சமைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். (ஆனால் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது)

ஆலிவ் ஆயிலின் மருத்துவ நன்மைகள்...

* தினமும் ஆலிவ் ஆயிலை உணவில் சேர்த்துக் கொண்டால், உணவில் உள்ள கலோரியின் அளவை அதிகரிக்காமல் தடுத்து, இதய நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

* மேலும் சோரியாசிஸ், முகப்பரு போன்ற சருமப் பிரச்சனைகளை குணப்படுத்துகிறது, தலையில் பொடுகு தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

* இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும், சருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்சினைகளையும் சரி செய்ய ஆலிவ் ஆயில் உதவுகிறது.

* ஆலிவ் எண்ணெயில் உள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள், இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, செரிமானத்தையும் சீராக்க உதவுகிறது.

* சர்க்கரை நோய், வலியுடன் கூடிய மூட்டு வீக்கம், இதய நோய், வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளுக்கு ஆலிவ் ஆயில் சிறந்த மருந்தாக இருக்கிறது.

* ஆலிவ் ஆயிலில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஏராளமாக உள்ளது. 

* தினமும் இரவில் படுக்கும் போகும் போது ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக இருக்கும்.

* முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்தால், அதனைப் போக்க வேண்டுமானால், தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும். நாளடைவில் தழும்புகள் மறைந்து விடும்.

* பலருக்கு வறட்சியான சருமம் இருந்தால், அவர்கள் ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரவில் முகத்தை மசாஜ் செய்யலாம். தினமும் செய்வதன் மூலமாக, சருமம் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* பொதுவாக தினமும் மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும் தினமும் இரவில் படுக்க போகும் முன்பாக ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, அழகான முகத்தைப் பெறலாம்.