பழைய சோறு

பழைய சோறு

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12, அபரிமிதமான கால்சியம், இரும்புச் சத்தும் ஏராளமாக இருக்கிறது. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! 

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தியும் அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் எந்தக் காய்ச்சலும், நோயும் நம்மை அணுகாது! 

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ஒருவர் கூறியதில் இருந்து சில:

1. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் சாப்பிடுவதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து விட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. 

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். 

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில் கூட வராது. 

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்". 


பழைய சாதத்தை எப்படி செய்வது...

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான் அல்லது சோறு வடிப்பதற்கு ஏற்ற ஒரு அரிசியில் செய்ய வேண்டும். குக்கர் சோறில் பழைய சோறு செய்தால் சரியாக வராது.  (சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு பிறகு கட்டி இல்லாமல் நன்றாக கரைத்து விட வேண்டும். காலையில் நன்றாக பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும்.

மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

பழைய சாதம்...!
அதுவே போதும்!!!