வெண்டைக்காய் ஊறல் நீர்

வெண்டைக்காய் ஊறல் நீரைக் குடித்தால் உண்டாகும் அற்புதங்கள் என்ன தெரியுமா?
 
பண்டிகைக் காலம் என்பது எல்லாருக்கும் உற்சாகத்தை கொடுக்கும் அதே நேரத்தில் சிலருக்கு பயத்தையும் கொடுத்துவிடுகிறது. ஒரு நாள் தானே என்று சொல்லி நாம் சாப்பிடும்… சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இனிப்பு மற்றும் பலகாரங்களினால் கொண்டாட்டங்களை தொடர்ந்து கொண்டிருப்போம். இப்படி சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்து விடுமே ஆயில் அயிட்டம் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் பயப்பட்டு உங்களுடைய கொண்டாட்டத்தை மிஸ் செய்து விடாதீர்கள்.

நாம் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறியான வெண்டைக்காயை  சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் எவ்வளவு பலன்கள் இருக்கிறது தெரியுமா? 

வெண்டைக்காய்: அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின், இதயத் துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் இருக்கிறது.

வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன.
 
வெண்டைக்காய் நீர்...

வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது. வெண்டைக்காயை ஊற வைத்திடும் நீர் தான் அது. முதலில் நான்கு வெண்டைக்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள், அதனை சுத்தமாக கழுவி தலைப் பகுதியையும் வால் பகுதியையும் வெட்டிவிடுங்கள். பின்னர் அதனை நீளவாக்கில் வெட்டி, சற்று பெரிய பாத்திரத்தில் போட்டு வெண்டைக்காய் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊற வேண்டும் என்பதால் முந்தைய நாள் இரவு ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம். இந்த நீர் எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டிருக்கிறது தெரியுமா?

இரத்த சோகை : 

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஊறல் நீர்  மிகச்சிறந்த பலன்களை தரும். இந்த நீரை குடிப்பதனால் இரத்த செல்கள் வேகமாக உற்பத்தி ஆக உதவுகிறது. இதனால் இரத்த சோகை கட்டுப்படும். இதில் அதிகப்படியான மினரல்ஸ் மற்றும் விட்டமின்கள் இருக்கின்றன. அவற்றில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சியும் அடக்கம். அதோடு இதில் இருக்கும் மெக்னீசியம் இரத்தத்தை அதிகப்படுத்துகிறது.

தொண்டை வறட்சி : 

தொடர் இருமல், வறட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இதில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியாக்கள் மற்றும் ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் தொண்டையில் ஏற்ப்பட்டிருக்கும் பாக்டீரியா தொற்றினை நீக்கி விடும்

சர்க்கரை நோய் : 

வெண்டைக்காயில் நிறைய இன்சுலின் இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதோடு வெண்டைக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதனால் இந்த ஊறல் நீரை தொடர்ந்து எடுத்து வர சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

வயிற்றுப் போக்கு : 

பலரையும் பயமுறுத்தும் ஓர் வியாதி என்றே சொல்லலாம். வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடலில் இருக்கும் தண்ணீர் சத்து எல்லாம் சட்டென்று குறைந்து விடுவதால் ஒருவர் சுயநினைவின்றி விழுவதற்கும் காரணமாக அமைந்திடும். அதனால் வயிற்றுப் போக்கு என்றால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். நம் உடலில் இருந்து அதிகப்படியான சத்துக்கள் இதனால் வெளியேறி விடும். அதனை சரிகட்டவும் வயிற்றுப்போக்கினை நிறுத்தவும் வெண்டைக்காய் சாறினை குடிக்கலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் உபாதைகள் இருந்தாலோ அல்லது காய்ச்சல், தலைவலி இருந்தாலோ மருத்துவரை சந்திப்பது மிகவும் அவசியமானதாகும்.

கொலஸ்ட்ரால் : 

வெண்டைக்காயில் அதிகப்படியான கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது. அதோடு இது கலோரி குறைவான காய் என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம். வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தொடர்ந்து எடுத்து வர அது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்திடும். அதோடு நம் இதயத்தையும் பாதுகாக்கும்.

மலச்சிக்கல் : 

கரையக்கூடிய நார்ச்சத்தால்  கொலஸ்ட்ரால் மட்டுமல்ல மலச்சிக்கலும் கட்டுப்படும். வெண்டைக்காயில் இருக்கும் தாதுக்கள் நம் உடலில் இருக்கும் டாக்ஸின்களை நீக்க உதவுகிறது இதனால் உணவு செரிமானம் சீராக நடைப்பெற்று வயிறு தொடர்பான கோளாறுகள் சரியாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி : 

ஒரு மனிதனுக்கு எந்த நோய் நொடியும் இன்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றால் அவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்றாகும். நம்மை தாக்கும் வைரஸ் தொற்று முதலில் பாதிப்பது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியைத் தான். இதனால் காய்ச்சலில் ஆரம்பித்து உயிர் போகக்கூடிய நிலை கூட வருகிறது. வெண்டைக்காயில் அதிகப்படியான விட்டமின் சி மற்றும் பல்வேறு ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்து வர நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திடும்.

சருமம் : 

உள்ளுறுப்புகளின் கண்ணாடி என்று கூட சருமத்தை சொல்லலாம். சருமம் நன்றாக இருக்க வேண்டுமெனில் சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிக்க கூடிய உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். அவற்றில் ஒன்று தான் வெண்டைக்காய். வெண்டைக்காய் ஊற வைத்த நீரை தினமும் காலையில் பருகுவதால் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.

எலும்புகள்

இது நம் எலும்புகளை வலுவாக்கும். இதில் இருக்கும் ஃப்லோட் கர்ப்பிணிப்பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. எலும்பு தொடர்பான நோய்கள், கை கால் மூட்டு வலி வராமல் தடுத்திடும். எலும்புகளை வலுவாக்க இந்த வெண்டைக்காய் சாறு தினமும் பருகலாம்.

பசி : 

சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எவ்வளவு சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே பசிக்க ஆரம்பித்துவிடும். இதனால் அளவுக்கு மீறி சாப்பிட்டு ஒபீசிட்டி வந்தது தான் மிச்சம். இந்தப் பிரச்சனை இருப்பவர்கள் இந்த வெண்டைக்காய் சாறினை குடித்து வர பசியுணர்வு கட்டுப்படுத்தப்படும். இதில் இருக்கும் நார்ச்சத்து நிறைவான உணர்வைத் தரும்.

டிப்ரசன் : 

சிலருக்கு காரணமின்றி சோகமாக இருப்பதாக தோன்றிடும். அல்லது எப்போதும் டயர்ட்டாக தோன்றும் அப்படியிருப்பவர்களுக்கும் இந்த நல்ல மருந்தாய் அமைந்திடும். இதிலிருக்கும் பாலிஃபினால் மற்றும் ஃப்லேவனாய்ட் க்ளைகோஜென் உற்பத்தியை அதிகரிக்கும். இது அதிகப்படியாக இருந்தால் உங்களுக்கு டயர்ட்டாகவே தோன்றாது

மற்றவை : 

இவைத் தவிர இந்த நீரை தொடர்ந்து குடித்து வர புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். வெண்டைக்காயில் இருக்கும் லெக்டீன் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. அதோடு அல்சைமர் நோய் பாதிப்பினை தீவிரமடையாமல் வைத்திருக்க உதவுகிறது. மேலும் குடலிறக்கம் போன்ற நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.