ரோஜாப்பூ குல்கந்து சப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...

ரோஜாப்பூ குல்கந்து சப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...

குல்கந்து தயார் செய்யும் முறை...

தேவையான பொருட்கள்...

புதிய நாட்டு ரோஜா இதழ்கள் மட்டும்  - 250 கிராம்

கற்கண்டு அல்லது ஜீனி- 500 கிராம் 

தேன் - 300 கிராம்

கண்ணாடி ஜார் ஒன்று 

செய்முறை...

ரோஜா இதழ்களை சுத்தம் செய்து , எத்தனை அளவு எடுத்திருக்கிறீர்களோ அதைவிட இருமடங்கு கற்கண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். (தண்ணீர் ஊற்றக் கூடாது) ஜாம் போல் ஆகும் வரை அடிக்க வேண்டும். பின்னர் அதனை கண்ணாடி ஜாரில் போட்டு மூடி வைத்தபின் 4 நாட்கள் வெயிலில் வையுங்கள். அதன் பின் அதில் தேன் 300 கிராம் , ஏலக்காய்ப் பொடி 1ஸ்பூன் எடுத்து ரோஜா கலவையுடன் கலந்து நன்றாக கிளறி வைக்க வேண்டும். இந்தக் கலவையை மீண்டும் மீண்டும் ஒரு வாரத்திற்கு வெய்யிலில் வைத்து எடுத்தால் நீண்ட நாட்களுக்கு நன்றாக கெட்டுப் போகாமல் இருக்கும்.

இப்போது குல்கந்து சாப்பிடுவதற்கு ரெடி

அளவு

சிறுவர்கள் 1/2 ஸ்பூன்

பெரியவர்கள் 1 ஸ்பூன் அளவு

தினமும் காலை மாலை என இருவேளை உணவுக்கு பின் சாப்பிட்டு வரலாம். இப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

ஆண்மை பெருக்கி:

குல்கந்து ஒரு ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் காதலர்கள் ரோஜாவை காதல் சின்னம் ஆக வைத்திருக்கிறார்கள்.

அஜீரணக் கோளாறுகளுக்கு : 

உடலின் அதிக பித்த அளவை குறைத்து சீராக்குகிறது. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்

மாதவிடாய் கோளாறை போக்கும் :

வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். கருப்பை தொற்றைப் போக்கும். வெள்ளைப் படுதல் அடிக்கடி உண்டானால் அதனை நிவர்த்தி செய்யும்

இதய நோய்களை குணப்படுத்தும் :

பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான டானிக் - மருந்து. ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாகச் சாப்பிட்டுவர இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை உறுதியடையும்.

வியர்வை நாற்றம் போக

சிலருக்கு அதிகமாக வியர்க்கும். அவர்களுக்கு இது அருமருந்தாகும். அவர்கள் தினமும் குல்கந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை நாற்றம், வியர்வையினால் உண்டாகும் விஷ தன்மையை உங்கள் உடலில் இருந்து நீக்கி உங்கள் உடலை குளிர வைக்கிறது. குறிப்பாக இதை வெயில் காலங்களில் அதிகம் சாப்பிடுவது நல்லது

வாய்ப்புண் :

வாய்ப் புண் மன அழுத்தத்தால் அல்லது குடலில் உண்டாகும் அல்சரால் சிலருக்கு உருவாகும். குல்கந்து  உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது வாய் புண் உருவாவதை குறைகிறது, மற்றும் வாய் புண்கள் காரணமாக வாயில் வரும் எரிச்சல் உணர்வு மற்றும் வலி குறைக்க உதவுகிறது.

தூக்கமின்மை : 

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் தினமும் இரவில் பாலில் 1 ஸ்பூன் குல்கந்து கலந்து குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் பெறுவார்கள்.

மலச்சிக்கல் போக்கும்

ரோஜாப்பூவில் குல்கந்து செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையே இருக்காது.