மைதா எனும் ரசாயனத்தை உணவாக சாப்பிடுவோர் கவனத்திற்கு ........

மைதா எனும் ரசாயனம் ........

இன்று "மைதா" என்ற சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு உணவு தயாரிப்பில் முன்னணி வகித்து வருகிறது.

புரோட்டா, பூரி, நான், சமோசா, பிஸ்கட், கேக், பிரெட், பீட்ஸா, பர்கர் போன்ற பேக்கரி அயிட்டங்கள் மற்றும் Junk Food அயிட்டங்கள் அனைத்துக்கும் மைதாவை தான் அதிகமாக உபயோகித்து வருகிறார்கள். மக்களும் விரும்பி உண்ணும் உணவுகளும் இவையே தான்.

மெல்லக் கொல்லும் விஷம்

ஆனால் இந்த மைதா உணவின் பின்னே இருக்கும் அதி பயங்கர ஆரோக்கிய சீர்கேடுகளை தெரிந்துக் கொண்டால் நிச்சயம் மைதா உணவுகளை அச்சத்தோடு தான் உண்ணுவீர்கள். ஏனெனில் மைதா என்பது உடலை சிறுகச் சிறுக கொல்லும் ஒரு விஷம்.

எந்த சத்துக்களும் இல்லாத குப்பை உணவு

முதலில் முழுக் கோதுமையின் வெளித் தோலை அகற்றுவது மூலம் நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புசத்து, பொட்டாசியம் போன்ற கனிமச்சத்துக்கள் அனைத்துமே முழுவதுமாக நீக்கப்படுகிறது. மிஞ்சி எஞ்சி இருப்பது கொழுப்பாக மாறும் மாவு சத்து மட்டுமே.

நீங்கள் உண்பது இரசாயனங்களை மட்டுமே

அடுத்ததாக கோதுமையை வெளேர் என்று வெண்மைப் படுத்தவும், அதனை மென்மைப் படுத்தவும், நீண்ட காலம் பாதுகாக்கவும் உபயோகிக்கப்படும் இரசாயனங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

Sodium Metabisulfite : 
இது சாதாரணமாக ஆடை ஆலைகளில் துணிகள் வெளுப்பதற்காக பாவிக்கப்படும் ஒரு இரசாயனம். இது தவிர ஆங்கில மருந்துகள் தயாரிப்பின் பொழுது அவற்றை நீண்ட காலம் பாதுகாக்க இந்த ரசாயனம் ஆங்கில மருந்துகளில் கலக்கப்படுகின்றன.

Benzoic Acid: 
இது பொதுவாக வாசனை திரவியங்கள், சாயங்கள், வெளிப்பூச்சு மருந்துகள், பூச்சி விரட்டி மருந்துகள் போன்றவற்றை தயாரிக்க பாவிக்கப்படும் ஒரு ரசாயனமாகும். இது உணவுகளிலும் நீண்ட நாள் பாதுகாப்பிற்காக கலக்கப்படுகிறது.

Benzoyl Peroxide : 
இவை பொதுவாக முகப்பரு வெளிப்பூச்சு மருந்துகள் உற்பத்தியில் உபயோகப்படுத்தும் ஒரு ரசாயனம்.

Alloxan : 
இது பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு ரசாயனம். இதுவும் வெண்மைப் படுத்துவதற்காக மைதா மாவில் கலக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கும் கூட தொடரப்பட்டுள்ளது.

இவற்றை தவிர மைதா மாவில் ரப்பர் போன்ற நெகிழ்ச்சி தன்மைக்காகவும் பல இரசாயனங்கள் பாவிக்கப்பட்டு வருகின்றன.

சர்க்கரை நோய் மற்றும் பல நோய்களுக்கும் அடிப்படை காரணம் 

இந்த ரசாயனங்கள் மனித உடலுக்கு பல இன்னல்களை ஏற்படுத்தும். குறிப்பாக ஆஸ்த்மா, மூச்சு திணறல், ஜீரண உறுப்புக்களில் பாதிப்புக்கள், குடல் புண்கள், பார்வை கோளாறுகள், தோல் பிரச்சினைகள், இரவில் தூக்கமின்மை, பகலில் தூக்கம் போன்ற கணக்கில் அடங்கா பிரச்சினைகளை சத்தமில்லாமல் தோன்றுவிக்கின்றன.

குறிப்பாக Alloxan எனும் இந்த ரசாயனம் கணையத்தை சிதைத்து நீரிழிவு நோய் உருவாக காரணமாகின்றது.

நார்ச்சத்தும், கனிமச்சத்தும் இல்லாத உணவு

மைதாவினால் ஆன பரோட்டா, பிரெட், பேக்கரி உணவுகளை அடிக்கடி உண்ணும் பொழுது பல கேடான விளைவுகள் உடலுக்கு வந்து சேர்வதை தவிர்க்க முடியாது. நார்ச்சத்துக்கள் அகற்றப் பட்டதினால் உடல் பருமனும், கனிமச்சத்துக்கள் அகற்றப் பட்டதினால் சத்து குறைபாடும் அவசியம் ஏற்படும்.

உடல் பருமன் ஏற்படும் பொழுது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு படிதல், மூட்டு வலி, நரம்பு பிரச்சினை அனைத்தும் உண்டாகும்.

சத்து குறைப்பாட்டால் முடி உதிர்தல், முடி நரைத்தல், பார்வை கோளாறுகள், தோல் பிரச்சினைகள், எலும்பு தேய்மானம், பற்களில் பாதிப்புக்கள் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும்.

மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை உருவாக்கி அனுப்பும் புரோட்டா 

புரோட்டா உணவு தயாரிப்பின் பொழுது கலக்கப்படும் மூன்றாம் தர எண்ணெய்களினாலும், அஜினோமோட்டோ போன்ற சுவையூட்டிகளும் உடலில் பிரச்சினைகளை மட்டுமே தோற்றுவிக்கும்.

ஆகவே உணவு என்று விஷத்தை ரசித்து உண்ணாமல் உடலை பேணுவதற்கு என உணவை உண்ணுவதே சிக்கலற்ற வாழ்க்கைக்கு வித்தாகும்.

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அவசியம் சேமித்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்திற்கு மிகுந்த நன்மை நன்மை பயக்கும்.