தலைமுடி கருப்பாக மாற டிப்ஸ்.:

தலைமுடி கருப்பாக மாற டிப்ஸ்...

* தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும். மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

* நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, தலை சருமத்தில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறையும்.

* கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

* வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை கழுவியோ வந்தால், நரை முடி மறையும்.

* நெய் கூட இள நரையை மறைய வைக்கும். அதற்கு நெய்யை தலை சருமத்தில் படும்படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்கமுடியும்.

* தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

* கருப்பான முடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு மசாஜ் செய்தால், கருமையான முடியைப் பெறலாம்.

* முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெய் அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்து, தினமும் முடியில் தடவ வேண்டும்.

* வெளியே வெயிலில் செல்லும் போது, முடியின் மேல் சூரியக்கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்குதலால் முடியில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுக்கலாம்.

* நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும்.

* ஆயுர்வேத மருத்துவத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு அஸ்வகந்தா மூலிகை தான் உதவியாக உள்ளது. எனவே இந்த அஸ்வகந்தா பொடியை எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து முடிக்கு தடவி வந்தால், முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளரும்.

* அனைவருக்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால், அது முடியில் இருக்கும் கருமை நிறத்தை தக்க வைக்கும்.

* கேரட் சாப்பிட்டால், அதில் உள்ள கரோட்டினாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும். அதற்காக அதன் சாற்றை முடிக்கு பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது.

* எலுமிச்சை சாற்றினை கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது கருமையாக இருக்கும்.

* முடிக்கு கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால், முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளரும்.