உங்கள் முகம் பொன்போல் ஜொலிக்க ரோஸ் வாட்டர்...

உங்கள் முகம் பொன்போல் ஜொலிக்க வேண்டுமா.:

ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய் பசை, கருமையான சருமம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

மேலும் ரோஸ் வாட்டரில் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளதால், இதை தினமும் முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதைப் பற்றி இங்கு காண்போம்.

முகத்தில் ரோஸ் வாட்டரை தடவுவதால் ஏற்படும் நன்மைகள்.:

முகத்திற்கு ரோஸ் வாட்டரை தடவி வந்தால், நீண்ட நேரம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன், சருமத்தின் ஈரப்பதம் அதிகரிக்கும்.

ரோஸ் வாட்டர் முகத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தி, கரும்புள்ளி, பருக்கள் வராமல் தடுக்கிறது.

வெடித்த உதடுகள் மற்றும் கருப்பாக உள்ள உதடுகள் மீது தினமும் ரோஸ் வாட்டரை தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் கலந்து, கால் பாதத்தில் தடவி வந்தால், பாதத்தில் உள்ள பித்த வெடிப்புகள் குறைந்து, பாதம் மிருதுவாகும்.

தினமும் இரவில் படுக்கும் போது, ரோஸ் வாட்டரைக் காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால், மேக்கப் நீங்குவதோடு, சருமமும் மென்மையோடு இருக்கும்.

ரோஸ் வாட்டரில் உள்ள சில நுண்ணுயிர்கள் அலர்ஜி, அரிப்பு, சிவந்து போதல் போன்ற சருமப் பிரச்சனைகளுக்கு கூட சிறந்த மருந்தாக உதவுகிறது.

ரோஸ் வாட்டரை 1 மணிநேரம் குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாகும்.

தினமும் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து குளித்தால் சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையோடு அழகாக இருக்கும்.

ஷேவிங் செய்து முடித்த பிறகு, ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி பயன்படுத்தினால், ஷேவிங் செய்த பிறகு ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்றவை நீங்கி, முகம் மென்மையாக இருக்கும்.

மேற்கண்ட பயன்கள் அனைத்தும் நீங்கள் ஒரிஜினல் ரோஸ் வாட்டர் பயன்படுத்தும் போது மட்டுமே கிடைக்கும். 

ஒரிஜினல் ரோஸ் வாட்டர் தேவைக்கு எங்கள் K7Herbocare-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.