இரத்தத்தை சுத்திகரிக்க...
தோல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்த உதவும் கசாயம் :
இரத்தத்தை சுத்தப்படுத்தவும், தோல் சார்ந்த நோய்களை குணப்படுத்தவும் வெந்தயக் கீரை வாழைப்பூ கசாயத்தை குடித்து பாருங்கள். கைமேல் பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள் :
வெந்தயக் கீரை - ஒரு
வாழைப் பூ - ஒரு கைப்பிடி
மிளகு - 10
செய்முறை :
வெந்தயக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். வாழைப்பூவை நரம்புகளை நீக்கி சுத்தப்படுத்தி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள வெந்தயக் கீரை, நறுக்கிய வாழைப் பூ மற்றும் மிளகுச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.நீரில் வெந்தயக் கீரை வாழைப் பூ நன்கு கொதித்த பின்பு 150 மி.லி அளவாக சுண்டவைத்து இறக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு குடிக்கவும்.
பயன்கள் :
இந்த வெந்தயக் கீரை வாழைப் பூ கசாயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தம் தூய்மையடையும். மேலும், தோல் சார்ந்த குறைபாடு உள்ளவர்களும் இதனை தினமும் குடித்து வந்தால் தோல் சார்ந்த நோய்களும் குணமாகும்.