கோதுமை மாவு அரைக்கும் முன் இந்த 7 தானியங்களை சேருங்கள்
கோதுமை மாவு அரைக்கும் முன் இந்த 7 தானியங்களை சேருங்கள் (Homemade wheat flour)..!
உலகம் முழுவதும் உபயோகப்படுத்தும் தானியங்களில் முதலிடம் கோதுமைக்கே. கோதுமையில் பல வகைகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். கோதுமையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. கோதுமையில் வைட்டமின் பி சத்து அதிகம் உள்ளது, மேலும் கோதுமையில் உடல் வளர்ச்சிக்கான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளதால், கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சாப்பிடலாம்.
இருந்தாலும் கோதுமை மாவை கடைகளில் ரெடிமேடாக வாங்கி பயன்படுத்துவதற்கு பதில், வீட்டிலேயே இன்னும் சில தானியங்களை சேர்த்து கோதுமை மாவை தயார் செய்தால் இன்னும் அதிக சத்துக்கள் நமக்கு கிடைக்கும். சரி வாங்க கோதுமை மாவு அரைக்கும் பொது அதனுடன் சேர்க்க வேண்டிய 7 சிறு தானியங்கள் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை – 2 கிலோ
சம்பா கோதுமை – 250 கிராம்
கேழ்வரகு – 100 கிராம்
கருப்பு கொண்டைக்கடலை – 100 கிராம்
பச்சை பயறு – 100 கிராம்
மக்காச்சோளம் – 100 கிராம்
கடலை பருப்பு – 100 கிராம்
கம்பு – 100 கிராம்
கோதுமை மாவு செய்வது எப்படி?
முதல் நிலை:
மேலே கூறப்பட்டுள்ள சிறு தானியங்கள் அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து விட்டு ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
கோதுமை மாவு செய்வது எப்படி?
இரண்டாவது நிலை:
பின் கோதுமையையும் நன்கு சுத்தம் செய்து விட்டு, தண்ணீர் ஊற்றி அலசி விட்டு வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
கோதுமை மாவு செய்வது எப்படி?
மூன்றாவது நிலை:
பின் நன்கு வெயில் அடிக்கும் பகுதியில் ஒரு சுத்தமான காட்டன் துணியை விரித்து அவற்றில் அலசி வடிகட்டி தனியாக எடுத்து வைத்துள்ள சிறு தானியங்கள் மற்றும் கோதுமையை போட்டு நன்றாக காயவைக்கவும்.
கோதுமை மாவு செய்வது எப்படி?
நான்காவது நிலை:
கோதுமை நன்றாக காய்ந்ததும் மிஷினில் கொடுத்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அரைத்த கோதுமை மாவு மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். உடல் வளர்ச்சியை அதிகரிக்கும், எலும்புகளை பலப்படுத்தும்.