மூலநோய் யாருக்கு எப்போது எப்படி வரும்...
மூலநோய் யாருக்கு எப்போது
எப்படி வரும்...
மூல நோய் என்று எதனை சொல்கிறீர்கள்...?
நமது உடம்பில் உள்ள கீழ் குடலிலிருந்து ஆசன வாய் வரையிலும் உள்ள குடலின் ஏதாவது ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ வீக்கம் ஏற்பட்டு ஆசன
👉வாயில் எரிச்சல்,
👉அரிப்பு,
👉நமைச்சல்
ஆகிய அறிகுறி தென்படும்.
அடுத்து மலமானது இறுகிப்போய்.... சாதாரணமாக வெளியேற முடியாமல் தடுக்கும். அச்சமயத்தில் அதனை முக்கி வெளியேற்ற முயலும் போது மலத்துடன் குருதியும் வெளிவரும். இதுவே மூலநோய்
⭕ யாருக்கு வந்தாலும் ஒரே மாதிரிதான் மூல பாதிப்பு இருக்குமா❓
யூகி முனிவர் சொல்லியிருப்பதை பார்த்தால் 21 வகையான மூல பாதிப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.………
👉அவற்றில்……
➡நீர்முளை,
➡செண்டு முளை,
➡எருவாய் முளை,
➡சிறுமுளை,
➡வறன் முளை,
➡குருதி முளை,
➡சீழ்முளை,
➡ஆதி முளை,
➡தமரகமுளை,
➡மழி முளை,
➡கழல் முளை,
➡ஐய முளை,
➡முக்குற்றமுளை,
➡வினை முளை,
➡மேக முளை,
➡குதமுளை
என்பவை குறிப்பிட்ட சில மூல வகைகள் ஆகும். இந்த பெயர்கள் எல்லாம் புரியாதது போல இருக்கும். ஆனால் நமது சித்த பெருமக்கள் ஒருநோயின் பல அறிகுறிகளை வைத்து அவற்றை எவ்வாறெல்லாம் வகைப்படுத்தி வைத்துள்ளனர் என்பதை விளக்கவே இதனை குறிப்பிடுகிறேன்.
⭕ மூல நோயின் அறிகுறி எவ்வாறு இருக்கும்❓
மூலநோய் உடையவர்களுக்கு……
மலம் இறுகி வெளியேறாமை,
காற்று வெளியேறாமை,
வயிறு இரைதல்,
அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு நொந்து மலம் கழித்தல்,
பசியின்மை,
உண்ட உணவு செரியாமை,
புளிச்ச ஏப்பம்,
பானமாக ஏதாவது அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்கின்ற விருப்பம்,
உடல் மெலிந்து கொண்டே வருதல்,
போன்றவை எல்லாம் மூல நோயின் அறிகுறிகளாகும்.
⭕ யாருக்கெல்லாம் மூலநோய் வரலாம்❓
கார உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள். குறிப்பாக உணவில் அதிக அளவில் மிளகு, மிளகாய், இஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு எல்லாம் மூல பாதிப்பானது வருவதற்கு வாய்ப்புள்ளது. இது தவிர………
👉எப்பொழுதும் உட்கார்ந்த நிலையிலேயே பணிபுரிபவர்களுக்கும்,
👉உடல் பருமனானவர்களுக்கும்,
👉உஷ்ணமான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும்
மூல நோய் வரலாம். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் மூல நோய் ஏற்படலாம். ஆனால் கர்ப்பக் கால மூல நோயானது பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலும் எந்த தொந்தரவும் இல்லாமல் தானாகவே குணமாகிவிடலாம். சில பெண்களுக்கு மட்டும் இதன் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.
⭕ காரம் அதிகம் சாப்பிட்டால் மூலநோய் வருமா❓
உடம்பில் சூடு அதிகம் இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள் தொடர்ந்து
கார உணவினை சாப்பிடுவதுடன்,
எந்த உடற் பயிற்சியும் செய்யாமல்,
ஓரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு எல்லாம் மூலநோய் வர நிறைய வாய்ப்புள்ளது.
⭕ மலச்சிக்கல் இருந்தால் மூல நோய் வந்து விடுமா.... என்ன❓
👉உடம்பிற்கு போதுமான அளவில் தண்ணீர் அருந்தும் பழக்கமற்றவர்கள்,
👉கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவினை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள்,
👉நார்சத்து உள்ள காய்கள்,
👉பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்கள்,
👉உடற்பயிற்சி செய்யும் பழக்கம் அற்றவர்களுக்கு
மலச்சிக்கல் ஏற்படும். இதனால் மலக்குடல் சுருங்கி அதில் வீக்கம் ஏற்பட்டு மலம் இறுகி அதனால் புண், அரிப்பு ஏற்படும். மூல நோய்க்கு முதல் காரணமே மலச்சிக்கல்தான். உடம்பின் பல சிக்கலுக்கு காரணமே இந்த மலச்சிக்கல்தான்.
⭕ தண்ணீர் அதிகம் குடிக்காதவர்களுக்கு மூல நோய் வரும் என்பது உண்மையா❓
போதுமான அளவிற்கு தண்ணீர் குடிக்காதவர்களுக்கு மூலநோய் வரும் என்று கட்டாயமாக சொல்ல முடியாது. ஆனால் போதுமான அளவிற்கு தண்ணீர் குடிக்காததுடன், அவர்கள் வாதமும், பித்தமும் கலந்த உடம்புக்காரர்களாக இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக மூல நோய் வருவதை எவராலும் தடுக்க இயலாது.
⭕ கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு மூலநோய் வருவது எதனால்❓
பெண்கள் கருத்தரித்துள்ளபோது வயிறு பெருகப் பெருக கீழ்க்குடல் அழுத்தப்படும். அப்போது மலக்குடல் இறுகும். இதனால் மூலநோய் வருவதுண்டு. அந்த சமயம் உணவில் கீரை வகைகள், காய்கறிகள், பழவகைகள் சேர்த்து கொண்டால் இதில் இருந்து விடுபடலாம்.
⭕ உட்கார்ந்த நிலையில் வெப்பமான இடத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் இந்த பாதிப்பு அதிகம் வருவது எதனால்❓
உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்களுக்கு அசுத்த காற்று வெளியேறாமல் தடைபடுவதால் மூலாதாரத்தில் அணல் எழும்பி மலக்கட்டு உண்டாகும். இவர்களுக்கு மூல நோய் வர வாய்ப்புண்டு. வெப்பமான இடத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் உடல் சூட்டை குறைக்கும் பழங்கள், காய்கறிகள் இவற்றை உண்பதால் சூடு தணிந்து மூல நோய் வராமல் உடலை பார்த்து கொள்ளலாம் அப்படி அல்லாமல் உடல் உஷ்ணத்தை மேலும் அதிகபடுத்தும் கார உணவுகள், சிக்கன் மற்றும் பாஸ்ட்புட் உணவுகளை உண்பதால் மலம் இறுகி மூலநோய் ஏற்பட்டு விடும்.
⭕ மூலநோய் வராமல் இருக்க என்ன❓
⭐நார்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், குறிப்பாக வெண்டைக்காய், அவரைக்காய், வாழைப்பூ, வாழைத் தண்டு, கீரை வகைகள், போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
⭐நார்சத்து சேர்ந்தாலே மலச்சிக்கல் இல்லாமல் போகும். மலச்சிக்கல் இல்லையென்றால் மூல நோய் வருவதற்கு வாய்ப்பே கிடையாது.
⭐எண்ணெயில் பொரித்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
⭐காரவகை உணவுகள், குறிப்பாக உணவு தயாரிக்கின்ற போது மிளகாயினை குறைவாகத் தான் சேர்க்க வேண்டும்.
⭐அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
⭐ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீராவது தினம் குடிக்க வேண்டும். இது மலச்சிக்கலை சேர விடாமல் தடுக்கும்.
⭐பித்தம் கலந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
ஒரு மனிதனின் உடலில் பித்தநாடி அதிக அளவில் காணப்பட்டால் அவர்களுக்கு மூல பாதிப்பு வர அதிகம் வாய்ப்புள்ளது.
⭐உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
⭐வாரத்தில் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தினை மேற்கொள்ள வேண்டும்.
⭐கருணைகிழங்கிற்கு மூல நோயின் பாதிப்பினை குறைக்கும் ஆற்றல் உண்டு. எனவே கருணைக்கிழங்கினை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.